கடனால் சொத்தை விற்கிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்கடனால் சொத்தை விற்கிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.56 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.56 ...
இந்திய ஐ.டி., துறையின் முன்னேற்றம் அமெரிக்க ‘எச் – 1பி’ விசாவை நம்பி இல்லை: இன்போசிஸ் சி.இ.ஓ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2017
00:44

வாஷிங்­டன் : ‘‘இந்­திய, ஐ.டி., துறை­யின் முன்­னேற்­றம், அமெ­ரிக்­கா­வின், ‘எச் – 1பி’ விசாவை, பெரி­தும் சார்ந்­துள்­ள­தாக கூறு­வது தவறு,’’ என, இன்­போ­சிஸ் சி.இ.ஓ., விஷால் சிக்கா தெரி­வித்துள்­ளார்.

அமெ­ரிக்க அதி­பர் டொனால்டு டிரம்ப் அரசு, உள்­நாட்டு வேலை­வாய்ப்பை பெருக்­கும் நோக்­கில், அயல்­நாட்டு பணி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும், ‘எச் – 1பி’ விசா விதி­மு­றை­களை கடு­மை­யாக்கி உள்­ளது. அத்­து­டன், விசா கட்­ட­ணத்­தை­யும் உயர்த்தி உள்­ளது. இத­னால், அமெ­ரிக்­கா­வில் உள்ள இன்­போ­சிஸ், டி.சி.எஸ்., உள்­ளிட்ட, ஐ.டி., நிறு­வ­னங்­கள், அவற்­றின் இந்­திய பிரி­வில் இருந்து, ‘எச் – 1பி’ விசா மூலம், பணி­யா­ளர்­களை வர­வ­ழைப்­பது குறை­யும். உள்­நாட்­டி­னரை, அதிக ஊதி­யத்­தில் நிய­மிப்­ப­தால், அவற்­றின் நடை­முறை செல­வி­னம் அதி­க­ரிக்­கும்.

இது ஒரு­பு­றம் இருக்க, இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­களின் வர்த்­தக நடை­முறை, பெரி­தும், ‘எச் – 1பி’ விசாவை சார்ந்­தி­ருக்­கும் கார­ணத்­தால், அவை பெரி­தும் பாதிக்­கப்­படும். இந்­நி­று­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு குறை­யும் என, கூறப்­ப­டு­கிறது.

இதை, இன்­போ­சிஸ் சி.இ.ஓ., விஷால் சிக்கா மறுத்­துள்­ளார். வாஷிங்­ட­னில், அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது: இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­கள், ‘எச் – 1பி’ விசாவை பெரி­தும் சார்ந்­தி­ருப்­ப­தாக கூறு­வது தவறு. அமெ­ரிக்கா, ஆண்­டுக்கு, 65 ஆயி­ரம், ‘எச் – 1பி’ விசாக்­களை வழங்­கு­கிறது. இதன்­படி கணக்­கிட்­டால், 10 ஆண்­டு­களில், 6.50 லட்­சம் பேருக்கு மட்­டுமே, இந்த விசா கிடைத்­தி­ருக்­கும். ஆனால், இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­கள், இதே காலத்­தில் லட்­சக்­க­ணக்­கா­னோ­ருக்கு வேலை­வாய்ப்பு அளித்­துள்ளன. இன்­போ­சிஸ் மட்­டுமே, 2 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோரை பணிக்கு அமர்த்தி உள்­ளது. இது போல, இரு மடங்கு வல்­லு­னர்­க­ளு­டன், டி.சி.எஸ்., நிறு­வ­னம் இயங்கி வரு­கிறது.

இந்த இரு நிறு­வ­னங்­களில் மட்­டுமே, இந்த அள­விற்கு வல்­லு­னர்­கள் உள்­ள­னர். இதர, ஐ.டி., நிறு­வ­னங்­களின் பணி­யா­ளர்­களை கணக்­கி­டும் பட்­சத்­தில், இந்­தியா, ‘எச் – 1பி’ விசாவை நம்பி இல்லை என்­பது, தெளி­வாக புரி­யும். தற்­போது, பெரும்­பான்­மை­யான பணி­களில், ‘ஆட்­டோ­மே­ஷன்’ எனப்­படும், தானி­யக்க நடை­முறை வந்து கொண்­டி­ருக்­கிறது. அத்­து­டன், செயற்கை நுண்­ண­றிவு, இணை­யம் சார்ந்த சாத­னங்­கள் இயக்­கம், சைபர் பாது­காப்பு போன்ற புதிய தொழிற்­நுட்­பங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது.

ஆகவே, இத்­த­கைய புது­மை­யான தொழிற்­நுட்­பங்­களில், இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­கள் தீவி­ர­மாக கவ­னம் செலுத்த வேண்­டும். இத­னால், புதிய திறன்­கள் சார்ந்த வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும். இதன் மூலம், ஐ.டி., நிறு­வ­னங்­க­ளுக்கு, அமெ­ரிக்கா உள்­ளிட்ட வெளி­நா­டு­களில் ஏரா­ள­மான வர்த்­தக வாய்ப்­பு­கள் கிடைக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

உயர் தொழிற்நுட்பம்:
இன்­போ­சிஸ், அடுத்த இரு ஆண்­டு­களில், அமெ­ரிக்­கா­வில், புதிய தலை­மு­றைக்­கான, 10 ஆயிரம் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்க திட்­ட­மிட்டு உள்­ளது. இவை அனைத்­தும், செயற்கை நுண்­ண­றிவு, தானி­யக்­கம், மேகக் கணினி உள்­ளிட்ட, உயர் தொழிற்­நுட்­பம் சார்ந்­த­வை­யா­கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)