10 தேசிய நெடுஞ்சாலைகள் விற்பனை; அன்னிய முதலீட்டிற்கு அரிய வாய்ப்பு10 தேசிய நெடுஞ்சாலைகள் விற்பனை; அன்னிய முதலீட்டிற்கு அரிய வாய்ப்பு ... வட மாநிலங்களை குறிவைக்கும் மாடர்ன் புட்ஸ் நிறுவனம் வட மாநிலங்களை குறிவைக்கும் மாடர்ன் புட்ஸ் நிறுவனம் ...
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலில் நேரும் தவறுகளுக்கு மன்னிப்பு: வணிகர்களுக்கு மத்திய அரசு உத்தரவாதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2017
00:24

புதுடில்லி : ‘‘புதிய, ஜி.எஸ்.டி., முறைக்கு மாறும் போது, துவக்க காலத்­தில், கணக்கு விப­ரங்­களை தாக்­கல் செய்­வ­தில் நேரும் தவ­று­க­ளுக்கு, கருணை அடிப்­ப­டை­யில், சட்ட நட­வ­டிக்­கை­யில் இருந்து விலக்கு அளிக்­கப்­படும்,’’ என, மத்­திய வரு­வாய் துறை செய­லர் ஹஷ்­முக் ஆதியா தெரி­வித்து உள்­ளார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது: வணி­கர்­கள், சங்­க­டங்­களை சந்­திக்­கா­மல், சுல­ப­மாக புதிய வரி விதிப்­புக்கு மாற வேண்­டும் என்­பதே அர­சின் நோக்­கம். அது போல, ஜி.எஸ்.டி.,யில், எந்­த­வொரு வர்த்­த­க­ரும், அநா­வ­சிய துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­கக் கூடாது என்­ப­தி­லும், அரசு மிகக் கவ­ன­மாக உள்­ளது. அத­னால், துவக்க காலத்­தில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­க­லின் போது ஏற்­படும் நியா­ய­மான தவ­று­கள், மிகுந்த கரு­ணை­யோடு பரி­சீ­லிக்­கப்­படும்.

பொருந்­தாத கணக்கு விப­ரங்­கள் உள்­ளிட்ட தவ­று­க­ளுக்கு, அப­ரா­தம் விதிப்­ப­தற்­கான சட்ட விதி­களை, குறிப்­பிட்ட காலத்­திற்கு நிறுத்தி வைக்­கும் அதி­கா­ரம், ஜி.எஸ்.டி., குழு­விற்கு உள்­ளது. ஜி.எஸ்.டி., ஒரு சிக்­க­லான நடை­முறை என்ற கருத்து நில­வு­கிறது; அது தவறு. இந்த வரி விதிப்­பில், பெரும்­பா­லான வர்த்­த­கர்­கள், மாதம் ஒரு கணக்கு விப­ரத்தை மட்­டும் தாக்­கல் செய்­யும் பிரி­வின் கீழ் வரு­கின்­ற­னர். எந்­த­வொரு புதிய தொழிற்­நுட்­ப­மும், அறி­முக நிலை­யில் ஒரு­சில பிரச்­னை­களை சந்­திக்க நேரி­டும். அதன்­படி, எதிர்­கொண்ட சில சிக்­கல்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­திற்கு முன்­பா­கவே தீர்வு காணப்­பட்­டு­விட்­டது.

மூன்­றா­வது முறை­யாக, நாளை மீண்­டும், ஜி.எஸ்.டி., பதிவு துவங்­கு­கிறது. இதில், எஞ்­சி­யுள்ள அனைத்து நிறு­வ­னங்­களும் பதிவு செய்ய, 30 நாட்­கள் அவ­கா­சம் அளிக்­கப்­பட்டுள்­ளது.ஜி.எஸ்.டி.,யில், வரி ஆதா­யத்தை நுகர்­வோ­ருக்கு வழங்­கா­மல் ஏமாற்­றும் நிறு­வ­னங்­கள் மீது, அதிக லாப தடுப்பு சட்­டத்­தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இது, நுகர்­வோ­ருக்கு பொருட்­களை நேர­டி­யாக விற்­பனை செய்­யும் சில்­லரை வியா­பா­ரி­க­ளுக்கு பொருந்­தாது. உள்­ளீட்டு வரி ஆதா­யத்தை, நுகர்­வோ­ருக்கு அளிக்­காத தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் மீது மட்­டுமே, சட்ட நட­வ­டிக்கை பாயும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

சுலபமான வரி நடைமுறை:
தற்­போ­தைய வரி விதிப்­பின் கீழ், 80 லட்­சம் வணி­கர்­கள் உள்­ள­னர். இதில், 65 லட்­சம் பேர், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்­துள்­ள­னர். அவற்­றில், 70 – 80 சத­வீ­தம் பேர், நுகர்­வோ­ருக்கு நேர­டி­யாக பொருட்­களை விற்­பனை செய்­யும் பிரி­வைச் சேர்ந்­த­வர்­கள். இவர்­கள், மாதம் ஒரு முறை, மொத்த விற்­று­மு­தல் கணக்கை மட்­டும் தாக்­கல் செய்­தால் போதும். ஒரு நிறு­வ­னத்­திற்­கும், மற்­றொரு நிறு­வ­னத்­திற்­கும் இடை­யி­லான வர்த்­த­கத்­தில் மட்­டும், விலைப் பட்­டி­யல்­கள் அடிப்­ப­டை­யில் கணக்­கு­களை தாக்­கல் செய்ய வேண்­டும். இப்­பி­ரி­வி­ன­ருக்கு கூட, அனைத்து விலைப் பட்­டி­யல்­க­ளை­யும் தன்­னிச்­சை­யாக மாற்­றித் தரும் சாப்ட்­வேர்­களை, ஜி.எஸ்.டி.என்., வழங்கி உள்­ளது. அத­னால், புதிய வரி விதிப்பு முறை­யில், கணக்­கு­களை சிர­ம­மின்றி சுல­ப­மாக தாக்­கல் செய்­ய­லாம்.
-ஹஷ்­முக் ஆதியா, மத்­திய வரு­வாய் துறை செய­லர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)