கடன் தவணை விதிகள்கடன் தவணை விதிகள் ... செயல்­ தி­றனை வளர்க்க உதவும் வழிகள்! செயல்­ தி­றனை வளர்க்க உதவும் வழிகள்! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பில், ரசீ­துகள், ஆவ­ணங்­களை பாது­காக்கும் வழி­மு­றைகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2017
07:47

முத­லீடு, காப்­பீடு உள்­ளிட்ட நிதி விஷ­யங்கள் தொடர்­பான ஆவ­ணங்­களை முறை­யாக பரா­ம­ரித்து வரு­வது, நிதி பாது­காப்­பிற்கு முக்­கி­ய­மா­கி­றது.

கட்­ட­ணங்­க­ளையும், தவணைத் தொகை­க­ளையும் ஒழுங்­காக செலுத்தி வந்தால் மட்டும் போதாது. அவை தொடர்­பான ஆவ­ணங்­களையும் சரி­யாக பரா­மரித்து வர வேண்டும். அப்­போது தான், எந்த ஆவணம் எங்­கி­ருக்­கி­றது என்­பதை அறிந்து, தேவை­யான போது உடனே எடுத்து பயன்­ப­டுத்த முடியும். இல்லை எனில், வைத்த இடம் தெரி­யாமல், தேடிக் கொண்­டி­ருக்க வேண்டும். இந்த தேவை­யில்­லாத குழப்­பத்தை தவிர்க்க, நிதி ஆவ­ணங்­களை வகைப்­ப­டுத்தி முறை­யாக பரா­ம­ரிக்கும் வழக்­கத்தை பின்­பற்றி வர­வேண்டும். முத­லீடு, காப்­பீடு, மாதாந்­திர ரசீ­துகள் போன்­ற­வற்றை, அவற்­றுக்கு உரிய இடத்தில் வைத்து பாது­காக்க வேண்டும்.

இரண்டு கட்டம்:
முதலில் ஆவ­ணங்­களை வகைப்­ப­டுத்­து­வதை இரண்டு கட்­ட­மாக செய்­யலாம். முதல் கட்­டத்தில், பில்கள், ரசீ­துகள் போன்­றவை வரும் போது, அவற்றை தற்­கா­லி­க­மாக எடுத்து வைக்க, ஓரி­டத்தை தேர்வு செய்­யுங்கள். பெரும்­பா­லானோர் இவற்றை ஏதேனும் ஒரு இழுப்­ப­றையில் அல்­லது கையில் கிடைக்கும் இடத்தில் வைத்து விடு­கின்­றனர். இதுவே குழப்­பத்­திற்கு கார­ண­மா­கி­றது. இதைத் தவிர்க்க, ஒரே இடத்தில் இவற்றை எடுத்து வைக்க வேண்டும். இதற்­காக இரண்டு பெட்­டி­களை தயார் செய்து கொள்­ளலாம்.

முதல் பெட்­டியில் தின­சரி வீட்டு உப­யோக பில்­களை போட்டு வைக்­கலாம். இரண்­டா­வது பெட்­டியில் மின் கட்­டண ரசீது, வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு அறிக்கை போன்­ற­வற்றை போட்டு வைக்­கலாம். இவ்­வாறு செய்த பின், இந்த தற்­கா­லிக இடத்தில் இருந்து நிரந்­தர சேமிப்­பிற்கு இவற்றை மாற்ற வேண்டும். தனித்­தனி கோப்­புகள் அல்­லது போல்­டர்­களை தயார் செய்து, அவற்றின் மீது பெயர் எழுதி, ஒவ்­வொன்­றிலும் உரிய ஆவ­ணங்­களை வைத்து வரலாம்.
வகைப்­ப­டுத்தல்:
ரசீ­துகள் மற்றும் ஆவ­ணங்­களை பல்­வேறு தலைப்­பு­களில் வகைப்­படுத்திக் கொள்­வது நல்­லது. உதா­ர­ண­மாக வரிகள் எனும் தலைப்­பி­லான போல்­டரில், வரு­மான வரி சான்­றி­தழ்கள், படிவம் 16, தொடர்­பு­டைய பில்கள் உள்­ளிட்­ட­வற்றை வைக்­கலாம். இதே போல, காப்­பீடு தலைப்பின் கீழ் ஆயுள் காப்­பீடு, வாகன காப்­பீடு, மருத்­துவ காப்­பீடு பாலிசி தொடர்­பா­ன­வற்றை எடுத்து வைக்­கலாம். மற்ற வகைகள்: முத­லீடு -வைப்பு நிதி, மியூச்­சுவல் பண்ட், பங்­குகள், சிறு சேமிப்பு, பி.எப்., – பி.பி.எப்., கடன்கள்- வீட்­டுக்­கடன், வாக­னக்­கடன், தனி­நபர் கடன், இல்லம்பத்­திரம், வாடகை ஒப்பந்தம். இவை தவிர மருத்­துவ ஆவ­ணங்கள், வீட்டு உப­யோக பொருட்­களுக்­கான கையே­டுகள், பில்கள் போன்ற­வற்­றையும் தனியே வகைப்­ப­டுத்­தலாம்.

ஆதார் அட்டை, பான் கார்டு, குடும்ப அட்டை, வாக்­காளர் அடை­யாள அட்டை, ஓட்­டுனர் உரிமம், பிறப்பு சான்­றிதழ், கல்வி சான்­றிதழ் உள்­ளிட்ட முக்­கிய அடை­யாள சான்­றி­தழ்­க­ளையும் தனியே வகைப்­ப­டுத்தி வைக்க வேண்டும். இனி இவற்றை தற்கா­லி­க­மா­னவை, நிரந்­த­ர­மா­னவை என பிரித்து, அதற்­கேற்ப பாது­காத்து வைக்க வேண்டும். வீட்டு பத்­திரம், பான் கார்டு, ஆதார் அட்டை போன்­றவை நிரந்­த­ர­மாக வைத்­தி­ருக்க வேண்­டி­யவை. முத­லீடு சான்­றிதழ், காப்­பீடு பாலிசி போன்­ற­வற்றை அவற்­றுக்கு உரிய காலத்­திற்கு வைத்­தி­ருக்க வேண்டும். பில்கள், ரசீ­துகள் போன்­ற­வற்றை பயன்­பாடு முடிந்தால், அப்­பு­றப்­ப­டுத்தி விடலாம்.

டிஜிட்டல் பாது­காப்பு:
மற்ற முக்­கிய ஆவ­ணங்­களை பெள­தீக வடிவில் அல்­லது ஆன்­லைனில் பாது­காக்­கலாம். வீட்­டி­லேயே பெட்­டக வசதி இருந்தால் அதில் முக்­கிய ஆவ­ணங்­களை பாது­காக்­கலாம். வங்கி லாக்கர் வச­தி­யையும் நாடலாம். ‘டிஜிட்டல்’ முறையில் உள்ள ஆவ­ணங்­களை ‘டிஜி­லாக்கர்’ போன்­ற­வற்றில் பாது­காத்து வைக்­கலாம். ஆவ­ணங்­களை ஸ்கேன் செய்து கம்ப்­யூட்­ட­ரிலும் ஒரு பிர­தியை சேமித்து வைக்­கலாம். ஆனால், முறை­யாக ‘பேக்கப்’ செய்­தி­ருக்க வேண்டும். ஒரு சில வங்­கிகள் -இ–-லாக்கர் வச­தியும் அளிக்­கின்­றன.

ஆவ­ணங்­களை வகைப்­ப­டுத்தி பாது­காத்து வைப்­ப­துடன் நின்­று­வி­டாமல், தொடர்ந்து கண்­கா­ணித்து வர வேண்டும். காலாண்­டுக்கு ஒரு­முறை அல்­லது ஆறு மாதங்­களுக்கு ஒரு­முறை, போல்­டர்­களை எடுத்துப் பார்த்து, ஏதேனும் நட­வ­டிக்கை தேவையா என பார்க்க வேண்டும். காப்­பீடு தவணை தேதி, முதிர்வு காலம் போன்ற தக­வல்­களை, தனியே ஒரு நோட்டில் எழுதி வைப்­பது பய­னுள்­ள­தாக இருக்கும். கடன் தவணை, வரி திட்­ட­மிடல், முத­லீடு தக­வல்­க­ளையும் தனியே குறித்து வைக்க வேண்டும்.

நிதி பாது­காப்பும், பரா­ம­ரிப்பும்* நிதி ஆவ­ணங்­களை ஒரே இடத்தில் வைத்­தி­ருத்தல் நல்­லது* ஆவ­ணங்­களை வகைப்­ப­டுத்தி தனித்­தனி போல்­டர்­களில் வைத்­தி­ருக்க வேண்டும்.* பாது­காப்­பான இடத்­திற்கு மாற்ற வேண்டும்* தொடர்ந்து கண்­கா­ணித்து வரு­வது அவ­சியம்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)