பங்குச் சந்தை நிலவரம்பங்குச் சந்தை நிலவரம் ... நிறை குறை­களை உணர்ந்து தேர்வு செய்ய வேண்­டும் நிறை குறை­களை உணர்ந்து தேர்வு செய்ய வேண்­டும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2017
00:19

கச்சா எண்ணெய்
கச்சா எண்­ணெய் விலை கடந்த வார ஆரம்­பத்­தில் ஏற்­றம் கண்டு, ஒரு பேரல் 46.75 டாலர் என்ற உச்­சத்தை தொட்­டது. வாரம் ஒரு­முறை வெளி­வ­ரும் எண்­ணெய் இருப்பு விபரத்­தில் சிறிய தொய்வு காணப்­பட்­டது. அத­னு­டன் சீன இறக்­கு­மதி அதி­க­ரிக்­கும் என்ற கருத்து கணிப்பு, சந்­தை­யில் எண்­ணெய் விலைக்கு சாத­கமான போக்­கினை ஏற்­ப­டுத்­தி­யது.

இருப்­பி­னும், இவ்­விலை உயர்வு கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது. கார­ணம், பெருகி வரும் அமெ­ரிக்க எண்­ணெய் உற்­பத்தி மற்­றும் ஒபெக் நாடு­களின் எண்­ணெய் உற்­பத்தி குறைப்பு சரி­வர அமல்­ப­டுத்த முடி­யா­தது ஆகும்.இந்த வாரத்தை பொறுத்­த­வரை, 47.50 டாலர் என்ற ரெசிஸ்­டென்ஸ் லெவலை கடக்­கும்­போது, 48.25 டாலர் அடுத்த இலக்­காக அமை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கடந்த இரு வாரங்­க­ளாக சந்­தை­யில் எண்­ணெய் விலை, 43.55 டாலர் என்ற இலக்­குக்­குள் வர்த்­த­கமா­வது குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும், இன்­டர்­நே­ஷ­னல் எனர்ஜி ஏஜென்சி மேற்­கொண்ட, உலக அள­வி­லான எண்­ணெய் இருப்பு விபர கணக்­கெ­டுப்­பின்­படி, கடந்த மே மாதத்­தில் இருப்பு, 266 மில்­லி­யன் பேரல்­க­ளா­கும். இது அதற்கு முந்­திய ஏப்­ரல் மாதத்­தில் 300 மில்­லி­ய­னாக இருந்­தது. இருப்­பி­னும், இந்த இருப்பு அள­வா­னது கடந்த 5 வருட சரா­ச­ரியை விட அதி­க­மா­கும். இது எண்­ணெய் விலை போக்கை நீண்ட கால நோக்­கில் கட்­டுக்­குள் கொண்டு வரும். வரும் நாட்­களில் வியா­பா­ர­மா­னது, 48.25, 45.55 டாலர் என்ற நிலை­யில் இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஆகஸ்ட்) 2,975 2,930 3,055 3,102என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 45.6 44.5 47.35 48.20

தங்கம், வெள்ளி
ஐந்து வார தொடர் சரி­விற்கு பிறகு, கடந்த வாரம், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­கள் ஏற்­றம் காணப்­பட்டு வியா­பா­ரம் முடி­வ­டைந்­தது. கடந்த புதன் கிழ­மை­யன்று நடை­பெற்ற அமெ­ரிக்க பெட­ரல் ரிசர்வ் வங்­கி­யின் அரை­யாண்டு நிதி கமிட்டி கூட்­டத்­தில் சேர்­மன் ஜனட் யெலன் பேசு­கை­யில், நிதிக் கொள்கை சுருக்­கம் மெது­வாக நடை­பெ­றும் என்­றும், வட்டி விகி­தம் இந்த வரு­டம் மீண்­டும் ஒரு முறைக்கு மேல் கூட்­டப்­படும் என்­பது வதந்தி என்­றும் தெரி­வித்­தார்.

இது அமெ­ரிக்க நாணய குறி­யீடு குறைந்து, தங்­கம் மற்­றும் வெள்ளி விலை உயர்­வுக்கு கார­ண­மாக அமைந்­தது. மேலும், வெள்­ளி­யன்று வெளி­வந்த, ஜூன் மாத பண பெருக்க விகி­தம் எதிர்­பார்த்ததை விட அதி­க­மாக காணப்­பட்­டது. மேலும் அமெ­ரிக்க அரசு சார்ந்த கரு­வூ­லங்­களில் ஆதா­யம் தொய்வு அடைந்­தது. இது­வும் சந்­தை­யின் விலைக்கு சாத­கமான போக்­கினை வழி வகுத்­தது.

உள்­நாட்டு சந்­தை­யில் டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு கூடி­ய­தன் விளை­வாக விலை குறைந்து காணப்­பட்­டது. வரும் நாட்­களில் விலை­யில் சிறிய ஏறு­மு­கம் காணப்­படும் என்­றும், 1,240 1,260 அடுத்த ரெசிஸ்­டென்ஸ் லெவ­லாக அமை­யும். சப்­போர்ட் லெவல் 1,200 ஆகும்.

தங்கம்
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஆகஸ்ட்) 27,775 27,450 28,150 28,350காம்எக்ஸ் (டாலர்) 1,215 1,202 1,234 1,241

வெள்ளி
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஆகஸ்ட்) 36,425 36,110 37,245 37,650காம்எக்ஸ் (டாலர்) 15.45 14.95 16.30 16.55

செம்பு
கடந்த வாரம் செம்பு விலை­யில் சற்று ஏற்­றம் காணப்­பட்­டது. அமெ­ரிக்க நாண­யத்­தில் ஏற்­பட்ட வீழ்ச்சி, அதற்கு எதி­ரான அனைத்து பொருட்­களின் மீதும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. இத­னால் தொழிற்­சாலை மூலப் பொருட்­க­ளான செம்பு, துத்­த­நா­கம், நிக்­கல் மற்­றும் ஈயம் ஆகி­ய­வற்­றின் விலை அதி­க­ரித்­தது. கடந்த வாரம் வெளி­வந்த அமெ­ரிக்க தொழிற்­சாலை உற்­பத்தி புள்ளி விபரத்­தில், ஜூன் மாத வளர்ச்சி 0.4 சத­வீ­த­மாக உயர்ந்­தது. அதற்கு முந்­தைய மே மாத வளர்ச்­சி­யா­னது, 0.1 சத­வீ­த­மாக இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. மேலும் பிற பொரு­ளா­தார கார­ணி­களும் சந்­தை­யில் விலைக்கு சாத­க­மாக இருந்­தது.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 380.70 378.00 358.20 387.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)