சரக்கு போக்குவரத்துக்கு குறியீடு; மத்திய வர்த்தக அமைச்சகம் முடிவு சரக்கு போக்குவரத்துக்கு குறியீடு; மத்திய வர்த்தக அமைச்சகம் முடிவு ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.32 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.32 ...
வணிக நிறுவனங்கள் 24ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2017
01:12

புது­டில்லி : ‘‘நிறு­வ­னங்­கள் மற்­றும் வணி­கர்­கள், ஜூலை, 24 முதல், ஜி.எஸ்.டி.என்., வலை­த­ளத்­தில், தங்­கள் வர்த்­தக பரி­வர்த்­தனை கணக்கு விப­ரங்­களை தாக்­கல் செய்ய துவங்­க­லாம்,’’ என, ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னத்­தின் தலை­வர் நவின் குமார் தெரி­வித்து உள்­ளார்.

பல முனை வரி­க­ளுக்கு மாற்­றாக, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி விதிப்பு முறை, கடந்த, 1ல், அம­லுக்கு வந்­தது.ஜி.எஸ்.டி., பதிவு, கணக்கு தாக்­கல் உள்­ளிட்­ட­வற்­றுக்­கான தக­வல் தொழிற்­நுட்ப வச­தி­களை, ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னம் அளிக்­கிறது.

அரை நிமிடத்தில்:
இது­வரை, முந்­தைய வரி விதிப்­பின் கீழ் உள்­ளோ­ரில், 69 லட்­சம் பேர், ஜி.எஸ்.டி.என்., வலை­த­ளம் மூலம், ஜி.எஸ்.டி.,க்கு மாறி உள்­ள­னர். புதி­தாக, ஐந்து லட்­சம் பேர், ஜி.எஸ்.டி.,யில் இணைந்து உள்­ள­னர்.‘‘ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்­துள்­ளோர், வர்த்­த­கம் தொடர்­பான கணக்­கு­களை தாக்­கல் செய்­வ­தற்­கான வசதி, ஜி.எஸ்.டி.என்., வலை­த­ளத்­தில் செய்­யப்­பட்டு உள்­ளது,’’ என, நவின் குமார் தெரி­வித்து உள்­ளார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது: வணி­கர்­கள், தங்­கள் விற்­பனை தொடர்­பான கணக்­கு­களை பரா­ம­ரிக்க, ஏற்­க­னவே, ஜி.எஸ்.டி.என்., வலை­த­ளத்­தில், ‘எக்­செல்’ வசதி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. இதில், இணைய இணைப்பு இல்­லா­ம­லேயே, வியா­பா­ரி­கள், தங்­களின் அன்­றாட விற்­பனை விப­ரங்­களை பதிவு செய்து வர­லாம். இந்த பதி­வு­களை, 24 முதல், ஜி.எஸ்.டி.என்., வலை­த­ளத்­தில் பதி­வேற்­ற­லாம். ஒரு நாளைக்கு, 10 ஆயி­ரம் விலைப் பட்­டி­யல்­கள் வரை தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­கள், கடைசி நேரத்­தில் கணக்கு தாக்­கல் செய்­வ­தில் ஏற்­படும் சிர­மங்­களை தவிர்க்க, அன்­றா­டம் அல்­லது வாரம் ஒரு­முறை கணக்கு தாக்­கல் செய்­ய­லாம்.

ஜி.எஸ்.டி.என்., வலை­த­ளத்­தில், 19 ஆயி­ரம் விலைப் பட்­டி­யல்­களை, அரை நிமி­டத்­தில் பதி­வேற்­றும் வசதி செய்­யப்­பட்டு உள்­ளது. விலைப் பட்­டி­யலை பதி­வேற்­றம் செய்­யும் நிறு­வ­னங்­கள், வியா­பா­ரி­கள் ஆகி­யோர், விலைப் பட்­டி­யல் எண், தேதி, வாடிக்­கை­யா­ளர் பெயர், சரக்கு போக்­கு­வ­ரத்து விப­ரம், சரக்கு பெறு­வோர் முக­வரி, பொருட்­க­ளுக்­கான, ‘எச்.எஸ்.என்., கோடு’ உள்­ளிட்ட விப­ரங்­களை குறிப்­பிட வேண்­டும்.

மேலும், பொருட்­களின் மதிப்பு, அளிக்­கப்­பட்ட சலு­கை­கள், ‘சி.ஜி.எஸ்.டி., – எஸ்.ஜி.எஸ்.டி., – ஐ.ஜி.எஸ்.டி.,’ ஆகி­ய­வற்­றின் கீழ், வசூ­லித்த வரி ஆகிய விப­ரங்­களை குறிப்­பிட வேண்­டும். விரை­வாக கணக்கு தாக்­கல் செய்­தால், விரை­வாக, உள்­ளீட்டு வரிப் பயனை பெற­லாம்.

உதவி மையம்:
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் தொடர்­பாக, வணி­கர்­க­ளுக்கு உதவ, ‘கால் சென்­டர்’ உதவி மையம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. மேலும், கணக்கு தாக்­கல் செய்­வது குறித்த பயிற்சி, ‘வீடியோ’ படம், ஜி.எஸ்.டி.என்., வலை­த­ளத்­தில் உள்­ளது. அதை பின்­பற்றி, வணி­கர்­கள் சுல­ப­மாக கணக்­கு­களை பதி­வேற்­றம் செய்­ய­லாம். கம்ப்­யூட்­டரை பயன்­ப­டுத்­தாத வணி­கர்­களும், 200 ரூபாய்க்கு மேற்­பட்ட விலைப் பட்­டி­யல்­களை, தேதி வாரி­யாக பரா­ம­ரித்து வந்­தால், அவற்­றுக்­கான உள்­ளீட்டு வரிப் பயனை விரை­வாக பெற­லாம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)