தங்கம் விலை மாலைநேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.104 அதிகரிப்புதங்கம் விலை மாலைநேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு ... மேட்ரிமோனி – ஷால்பி ஹாஸ்பிடல்ஸ் பங்கு வெளியீட்டிற்கு 'செபி' அனுமதி மேட்ரிமோனி – ஷால்பி ஹாஸ்பிடல்ஸ் பங்கு வெளியீட்டிற்கு 'செபி' அனுமதி ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2017
00:09

ஐயா, நாங்­கள், ‘டிபார்ட்­மென்ட்­டல்’ ஸ்டோர் நடத்தி வரு­கி­றோம்​.​ மாதம், 5 ​​லட்­சம் ரூபாய்​ – 6 ​​லட்­சம் ரூபாய் வரை விற்­பனை இருக்­கும். ஆண்டு முடி­வில், எங்­க­ளது கணக்­கு­கள், ஜி.எஸ்.டி., சட்­டத்­திற்­காக தணிக்கை செய்­யப்­பட வேண்­டுமா?– பாஸ்­க­ரன், ஆவடிஜி.எஸ்.டி., சட்­டத்­தில், சுய மதிப்­பீட்­டின் முறை­யில் கணக்­கு­கள் கையா­ளப்­ப­டு­கின்றன. உங்­க­ளுக்கு, ஆண்­டின் மொத்த விற்­பனை, 1 கோடி ரூபாயை தாண்­டி­னால் மட்­டுமே தணிக்கை பொருந்­தும். இல்­லை­யெ­னில், உங்­களின் கணக்­கு­கள், ஜி.எஸ்.டி., சட்­டத்­திற்­காக தணிக்கை செய்ய வேண்­டிய அவ­சி­ய­மில்லை.
நான், கோவை­யில் கணினி சேவை மையம் வைத்­துள்­ளேன். எங்­க­ளது ஆண்டு விற்­பனை, 18 லட்­சம் ரூபாய் வ​ரை இருக்­கும். என் பெய­ரில், ஓர் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு​ம் ​ உள்­ளது​.​ அதன் மூலம், ஆண்­டுக்கு, 3 லட்­சம் ரூபாய் வாட­கை­யாக வரு­கிறது.​ நான், ஜி.எஸ்.டி., சட்­டத்­தில் பதிவு செய்து கொள்ள வேண்­டுமா? ​நான் பெறும் ​வாட­கைக்கு, ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டுமா?– முக­மது அலி​,​ கோவைஜி.எஸ்.டி., சட்­டத்­தில் பதிவு செய்­வ­தற்கு வரம்­பான, 20 லட்­சம் ரூபாயை கணக்­கி­டும் போது, உங்­க­ளு­டைய வரி விதிப்­புக்கு உட்­பட்ட​ சப்ளை ​மற்­றும் விலக்கு பெற்ற ​சப்ளை அனைத்­தை­யும் கணக்­கில் கொள்ள வேண்­டும். எனவே, நீங்­கள், ஜி.எஸ்.டி., பதிவை பெற வேண்­டும். ஆனால், குடி­யி­ருப்­பிற்­கான வாட­கை­யில், ஜி.எஸ்.டி., வசூ­லிக்க வேண்­டாம். அதற்கு விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.
தற்­போது, ‘வாட்’ திட்­டத்­தின் படி, ​எங்­க­ளு­டைய ​ஒரு வழக்கு சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் உள்­ளது. ‘வாட்’ வரியை ரத்து செய்த கார­ணத்­தால், நிலு­வை­யில் உள்ள எங்­கள் வழக்­கும் ரத்­தா­குமா?– ராம­சாமி, விருத்­தா­ச­லம்நிலு­வை­யில் உள்ள வழக்­கு­கள் அனைத்­தும், அந்­தந்த சட்­டப்­படி தொடர்ந்து நடை­பெ­றும். ‘வாட்’ வரி விதிப்பு ரத்து செய்­யப்­பட்ட கார­ணத்­தால்​,​ உங்­க­ளது வழக்­கில் எந்த பாதிப்­பும் இருக்­காது.
ஜி.எஸ்.டி., ‘ரிட்­டர்ன்’ தாக்­க­லின் போது, நாம் கொள்­மு­தல் செய்த விப­ரங்­கள், ​​ஜி.எஸ்.டி.ஆர்., 2​ ​படி­வத்­தில் வரும் என, கூறு­கின்­ற­னர். ​அந்த படி­வத்­தில்​ தவறு ஏதே­னும் இருந்­தால்,அதை திருத்தி கொள்ள முடி­யுமா? முடி­யாது என்­றால், எங்­க­ளுக்கு உள்­ளீட்டு வரி பயன் குறை­வாக கிடைக்­கும்​ அல்­லவா?– மேக­நா­தன், ஸ்ரீவாஞ்­சி­யம்நீங்­கள் கொள்­மு­தல் செய்த விப­ரங்­கள்​,​ உங்­க­ளுக்கு வழங்­கல் செய்த விற்­ப­னை­யா­ள­ரின், ‘ரிட்­டர்ன்’​ ​ஜி.எஸ்.டி.ஆர்., ​1​​ பதி­வின் படி, உங்­க­ளது கணக்­கில் வந்து சேரும்​.​ அதில் பிழை ஏதே­னும் இருந்­தால், அதை உங்­க­ளால் சரி செய்ய முடி­யும்.
நாங்­கள், துணிக் கடை வைத்து​ள்​ளோம். வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு விற்­பனை செய்­யும் போது, அவர்­களின் முக­வ­ரியை எங்­க­ளது விலைப் பட்­டி­ய­லில் அவ­சி­யம் குறிப்­பிட வேண்­டுமா?– ஸ்ரீராம், நாமக்­கல்​​அவ்­வாறு குறிப்­பிட வேண்­டிய கட்­டா­ய­மில்லை.​​​ ​
நாங்­கள், எங்­கள் நிறு­வ­னத்­தில் உள்ள பணி­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் மருத்­துவ காப்­பீடு செலுத்தி வரு­கி­றோம். அதி­லுள்ள, ஜி.எஸ்.டி.,யை உள்­ளீட்டு வரி பய­னாக பெற­லாம் என, சிலர் கூறு­கின்­ற­னர். பெற முடி­யாது என்­றும் சிலர் கூறு­கின்­ற­னர். இதை விளக்­க­வும்​.– புரு­ஷோத்­த­மன், சென்னைநீங்­கள் பணி­யா­ளர்­க­ளுக்கு எடுக்­கும் மருத்­துவ காப்­பீட்­டில் உள்ள, ஜி.எஸ்.டி.,யை உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லாது. இதற்­கென, ஜி.எஸ்.டி., சட்­டத்­தில் தனி விதி உள்­ளது.
வெளி மாநி­லத்­தி­லி­ருந்து பதிவு செய்­யப்­ப­டாத நப­ரி­டம் பொருட்­களை வாங்­கும் போது, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில், எத்­தனை சத­வீ­தம் வரி செலுத்த வேண்­டும்?– முரு­கே­சன், துாத்துக்­குடிஜி.எஸ்.டி., சட்­டப்­படி, பதிவு செய்­யப்­ப­டாத நபர், வெளி மாநில வழங்­கல்­களில் ஈடு­பட முடி­யாது. எனவே, வெளி மாநி­லத்­தி­லி­ருந்து பதிவு செய்­யப்­ப­டாத நப­ரி­டம், நீங்­கள் கொள்­மு­தல் செய்­வதை தவிர்க்க வேண்­டும்.
நாங்­கள், சென்­னை­யில் மேலாண்மை நிறு­வ­னம் ஒன்றை நடத்தி வரு­கி­றோம். பல நேரங்­களில் கார்­களை வாட­கைக்கு எடுத்து, எங்­க­ளது ஊழி­யர்­கள் ​​வேலை நிமித்­த­மாக வெளி­யி­டங்­க­ளுக்கு சென்று வரு­வர். அதில் செலுத்­திய, ஜி.எஸ்.டி.,யை உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லுமா?– இஸ்­மா­யில், சென்னைமேற்­கூ­றிய பரி­வர்த்­தனை​ ​​வேலை நிமித்­த­மாக​ இருந்­தா­லும் கூட, அதில் உள்ள, ​உள்­ளீட்டு வரி பயன் கிடைக்க பெறாது.
நாங்­கள், அச்­ச­கம் வைத்து நடத்தி வரு­கி­றோம். தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள பல இடங்­க­ளுக்கு, ​வாழ்த்து அட்­டை­களை ​அச்­ச­டித்து தரு­கி­றோம். நாங்­கள் எத்­தனை சத­வீ­தம் வரி வசூல் செய்ய வேண்­டும்?​– மோகன், சிவ­காசிநீங்­கள், உங்­கள் சேவை­யின் தொகை­யில், 1​2​ சத­வீ­தம் வரி வசூல் செய்து, அர­சுக்கு செலுத்த வேண்­டும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)