‘உணவு பூங்கா அமைத்தால் ரூ.10 கோடி நிதி உதவி’‘உணவு பூங்கா அமைத்தால் ரூ.10 கோடி நிதி உதவி’ ... வலுவடையும் இந்திய ரூபாய் மதிப்பு: 63.60 வலுவடையும் இந்திய ரூபாய் மதிப்பு: 63.60 ...
வீட்டுவசதி கடனுக்கு வட்டி குறையும்; கட்டுமான நிறுவனங்கள் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2017
02:33

புதுடில்லி : ‘ரிசர்வ் வங்கி, நேற்று முன்­தி­னம், வங்­கி­கள் பெறும் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்­டியை, 0.25 சத­வீ­தம் குறைத்­ததை அடுத்து, வங்­கி­கள், வீட்­டு­வ­சதி கட­னுக்­கான வட்­டியை குறைக்­கும்­பட்­சத்­தில், குடி­யி­ருப்­பு­கள் விற்­பனை அதி­க­ரிக்­கும்’ என, கட்­டு­மான நிறு­வன தலை­வர்­கள் நம்­பிக்கை தெரி­வித்து உள்­ள­னர்.

ராஜிவ் தல்­வார், தலைமை செயல் அதி­காரி, டி.எல்.எப்.: நாட்­டின் பொரு­ளா­தார சூழல் மாறி வரு­கிறது. திட்­டங்­க­ளுக்கு, விரை­வில் அனு­மதி அளிக்­கப்­ப­டு­கிறது. தொழில் துவங்­கும் நடை­மு­றை­கள் எளி­மை­யாக்­கப்­பட்டு உள்ளன. பொரு­ளா­தா­ரம் மேலும் வளர்ச்சி பெற, ரியல் எஸ்­டேட் போன்ற உரு­வாக்­கத் துறை­களில், கடன் புழக்­கம் பெருக வேண்­டி­யது மிக­வும் அவ­சி­யம். அத­னால், ரிசர்வ் வங்கி, வரும் மாதங்­களில் மீண்­டும், ‘ரெப்போ’ வட்­டியை குறைத்­தா­லும் ஆச்­ச­ரி­யம் இல்லை.

ஜாக்சே ஷா, தலைவர், கிரெடாய்: ரிசர்வ் வங்கி, வங்­கி­கள் பெறும் கட­னுக்­கான வட்­டியை குறைத்­துள்­ளது. இந்த பயனை, வங்­கி­கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்­டும். வீட்­டு­வ­சதி கட­னுக்­கான வட்­டியை குறைக்க வேண்­டும். அவ்­வாறு குறைக்­கு­மாறு, மாநில அர­சு­கள் நிர்ப்­பந்­திக்க வேண்­டும்.

பிரவீன் ஜெயின், தலைவர், நாரெட்கோ: ரியல் எஸ்­டேட் துறை, பல ஆண்­டு ­க­ளாக மந்­த­மாக உள்­ளது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு பின், குடி­யி­ருப்பு விற்­பனை பாதிக்­கப்­பட்டு உள்­ளது. வங்­கி­கள், வீட்­டு­வ­சதி கட­னுக்­கான வட்­டியை குறைத்­தால், வீடு­க­ளுக்­கான தேவை அதி­க­ரிக்­கும்.

அன்ஷுமன் மேகசின், தலைவர், சி.பி.ஆர்.இ.: அம­லுக்கு வந்­துள்ள, புதிய ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை சட்­டம், ஜி.எஸ்.டி., ஆகி­ய­வற்­றால், குடி­யி­ருப்பு விற்­பனை சூடு­பி­டிக்­கும். வட்டி குறைப்­பால், மக்­களின் வீட்­டுக்­க­டன் சுமை குறை­யும். வீட்­டு­வ­சதி துறை­யில், கடன் பெறு­வது அதி­க­ரிக்­கும்.

அனுஜ் பூரி, தலைவர், அனராக் பிராப்பர்டி கன்சல்டன்ஸ்: கட்டி முடித்து விற்­கப்­ப­டாத குடி­யி­ருப்­பு­கள் அதிகளவில் உள்ளன. வீடு வாங்­கு­வதை தீர்­மா­னிப்­ப­தில், வட்டி விகி­தத்தை விட, விலை தான் முக்­கிய அம்­ச­மாக உள்­ளது. தற்­போ­தைய சூழ­லில், வீடு விலை மேலும் குறைய வாய்ப்­பில்லை.

ஆர்.கே.அரோரா, தலைவர், சூப்பர்டெக்: பண்­டிகை காலம் துவங்­கு­வ­தற்கு முன், வங்­கி­களின் வட்டி விகி­தம் குறைக்­கப்­பட்டு உள்­ள­தால், இது­வரை ரியல் எஸ்­டேட் துறை­யில் நீடித்து வந்த மந்­த­நிலை முடி­விற்கு வரும்.

தீபக் கபூர், இயக்குனர், குல்ஷன் ஹோம்ஸ்: வட்டி குறைப்­பால், வீட்­டு­வ­சதி கட­னுக்­கான மாதாந்­திர தவணை குறை­யும். இதன் கார­ண­மாக, குடி­யி­ருப்­பு­களின் தேவை அதி­க­ரிக்­கும்.

வீட்டுவசதி கடன் வட்டி:
வங்கி ரூ.30 லட்சம் வரை ரூ.30 –75 லட்சம் ரூ.75 லட்சத்திற்கு மேல் எஸ்.பி.ஐ., •8.35 8.50 8.65 8.40 8.55 8.70எச்.டி.எப்.சி., •8.35 – 8.85 8.50 – 9 8.55 – 9.05 8.40 – 8.90 8.50 – 9 8.55 – 9.05ஐ.சி.ஐ.சி.ஐ., •8.35 – 8.80 8.65 8.70 8.40 – 8.85 8.70 8.75• பெண்­க­ளுக்கு / (வட்டி விகி­தம், ஆக., 3 நில­வ­ரப்­படி)

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)