ஜூலையில் கார் விற்பனை:1.93 லட்சமாக அதிகரிப்புஜூலையில் கார் விற்பனை:1.93 லட்சமாக அதிகரிப்பு ... ‘வாகன துறை வளர்ச்சிக்கு நிலையான கொள்கை தேவை’ ‘வாகன துறை வளர்ச்சிக்கு நிலையான கொள்கை தேவை’ ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் கருத்து:‘தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்க தவறும்எந்த நிறுவனமும் சிக்கலை சந்திக்க நேரும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2017
00:49

புது­டில்லி:‘‘தொழில்­நுட்ப மாற்­றங்களை ஏற்க தவ­றும், எந்த நிறு­வ­ன­மும் சிக்­கலை சந்­திக்க நேரும். இன்­றைய இளை­ஞர்­களின் தேவை­களை பூர்த்தி செய்­யக் கூடிய வாக­னங்­களை தயா­ரிக்க வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது,’’ என, மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­ன­ரும், தலைமை செயல் அதி­கா­ரி­யு­மான, கெனிச்சி அயு­கவா தெரி­வித்து உள்­ளார்.
அவர், நிறு­வ­னத்­தின் பங்கு முத­லீட்­டா­ளர்­கள் கூட்­டத்­தில் பேசி­ய­தா­வது:கடந்த நிதி­யாண்டு, நமக்கு மாறு­பட்ட அனு­ப­வங்­களை தந்­தது. போட்டி மிகுந்த வர்த்­த­கச் சூழ­லில், நமக்கு சப்ளை செய்­யும் இரு நிறு­வ­னங்­களில், தீ விபத்து ஏற்­பட்­டது. மேலும், 2,000 ‘சிசி’ இன்­ஜின் திற­னுக்கு மேற்­பட்ட டீசல் கார்­களை பதிவு செய்­ய­வும், பி.எஸ்., – 3 கார்­களை விற்­க­வும், சுப்­ரீம் கோர்ட் தடை விதித்­தது.கார் தயா­ரிப்­பில், இத்­த­கைய குறு­கிய கால பிரச்­னை­கள், நமக்கு மிகப்­பெ­ரிய சவா­லாக இருந்­தன. இது போன்ற, எதிர்­பா­ராத பிரச்­னை­களை சமா­ளிக்க, நிறு­வ­னத்தை மேலும் வலி­மை­யாக்க வேண்­டும் என்­பதை உணர்ந்து கொண்­டோம்.
பண மதிப்பு நீக்க அறி­விப்­புக்கு பின், துவக்­கத்­தில், வர்த்­த­கச் சூழல் கடி­ன­மாக இருந்­தது. இந்­நி­லை­யி­லும், வாகன சந்­தை­யில், நம் நிறு­வ­னத்­தின் சந்தை பங்­க­ளிப்பு உயர்ந்­துள்­ளது. அதிக அள­வி­லான புதிய வாடிக்­கை­யா­ளர்­கள், நம் குடும்­பத்­தில் இணைந்­துள்­ள­னர்.பாது­காப்பு, சுற்­றுச்­சூ­ழல் துாய்மை மற்­றும் வாடிக்­கை­யா­ள­ருக்கு அதிக பயன்­களை கிடைக்­கச் செய்­வது ஆகி­ய­வற்­றுக்­கான கொள்­கை­களை அரசு வகுப்­ப­தில் நிறு­வ­ன­மும் ஆர்­வம் காட்டி வரு­கிறது.அர­சின் நிலை­யான கொள்கை முடி­வு­களும், திட்­ட­மிட்ட செயல்­பா­டு­களும் வாகன துறை­யின் வளர்ச்­சிக்கு உத­வும். அத்­து­டன், வாகன துறை, இலக்கு நிர்­ண­யித்து செயல்­ப­ட­வும், தொழில்­நுட்­பங்­களை பின்­பற்­று­வது தொடர்­பான முடி­வு­களை எடுக்­க­வும் அவை துணை புரி­யும்.இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.
மின்சார கார்
மின் வாக­னங்­களை ஊக்­கு­விக்­கும் இந்த அர­சின் முடிவை வர­வேற்­கி­றோம். அத்­த­கைய வாக­னங்­களை வாங்க, வாடிக்­கை­யா­ளர்­கள் தயா­ரா­கும் பட்­சத்­தில், மின் கார்­களை தயா­ரிக்க, நிறு­வ­னம் தயங்­காது. அதற்கு முன்­னோ­டி­யாக, கலப்பு எரி­பொ­ரு­ளில் இயங்­கும், ‘ஹைபி­ரிட்’ கார்­கள் தயா­ரிப்­பில், தொடர்ந்து நிறு­வ­னம் கவ­னம் செலுத்­தும். இவ்­வகை கார்­க­ளுக்­கும், மின் வாக­னங்க­ளுக்­கும் தேவைப்­படும், ‘லித்­தி­யம் – அயன்’ பேட்­டரி தொழிற்­சா­லையை, நிறு­வ­னம் துவக்கி உள்­ளது.– ஆர்.சி.பார்­கவா தலை­வர், மாருதி சுசூகி இந்­தியா

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)