பதிவு செய்த நாள்
18 ஆக2017
09:55
புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார் விஷால் சிக்கா. புதிய தலைவர் மற்றும் இயக்குனராக யூ.பி.பிரவின் ராவ் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தலைவர் மற்றும் இயக்குனர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தாலும் சிக்காவுக்கு துணை தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சிஇஓ.,வாக அவர் 3 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து அவர் அப்பதவியில் இருந்த மாற்றப்பட்டுள்ளதாகவும் இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார சூழல், கார்பரேட் நிறுவனங்களுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இன்போசிஸ் நிறுவனம் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து வருகின்றனர். இன்போசிஸ் நிறுவனத்தின் சர்வதேச தலைவராக இருந்த அனிர்பன் தேய், எம்.ஜி.,யாக இருந்த யூசுப் பஷீர், துணைத் தலைவராக இருந்த ரிதிகா சூரி ஆகியோரைத் தொடர்ந்து தற்போது விஷால் சிக்காவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|