தொலை தொடர்பு துறையில் 30 லட்சம் வேலைவாய்ப்புதொலை தொடர்பு துறையில் 30 லட்சம் வேலைவாய்ப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைவு ...
‘இன்போசிஸ்’ சி.இ.ஓ., விஷால் சிக்கா ராஜினாமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2017
07:35

பெங்களூரு : ‘இன்­போ­சிஸ்’ நிறு­வ­னத்­தின், சி.இ.ஓ., விஷால் சிக்கா, நேற்று திடீ­ரென்று பத­வியை ராஜி­னாமா செய்­தார். பணி­யில் கவ­னம் செலுத்த முடி­யாத அள­விற்கு நீடித்த இடை­யூ­று­கள் மற்­றும் தடை­கள் கார­ண­மாக, இந்த முடிவை எடுத்­துள்­ள­தாக, அவர் ராஜி­னாமா கடி­தத்­தில் குறிப்­பிட்டு உள்­ளார்.

இன்­போ­சிஸ் நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் சி.இ.ஓ., எனப்­படும், தலைமை செயல் அதி­கா­ரி­யாக, விஷால் சிக்கா, 2014 ஜூன், 12ல் பொறுப்­பேற்­றார். அவ­ருக்கு, ஊதி­யம், போனஸ், ஊக்­கத்­தொகை உட்­பட, 70 லட்­சம் டாலர் என, ஆண்­டுக்கு, 48 கோடி ரூபாய் வழங்­கப்­பட்­டது. இது, 2017க்கு, 1.10 கோடி டால­ராக, அதா­வது, 75 கோடி ரூபா­யாக உயர்த்­தப்­பட்­டது.

இத்­தொகை, இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தின் நடுத்­தர பணி­யா­ளர் பெறும் ஊதி­யத்தை விட, 283 மடங்கு அதி­கம். இந்த வித்­தி­யா­சம், நிறு­வ­னத்­தின் கொள்­கைப்­படி, 50 – 60 மடங்கு தான் இருக்க வேண்­டும் என, கூறப்­ப­டு­கிறது. மேலும், பணி­யா­ளர்­க­ளுக்கு, 5 – 8 சத­வீ­த­மும், விஷால் சிக்­கா­வுக்கு, 55 சத­வீ­தம் ஊதிய உயர்­வும் அளிக்க, நிர்­வா­கம் முடிவு செய்­த­தும், என்.ஆர்.நாரா­ய­ண­மூர்த்தி உள்­ளிட்ட, இன்­போ­சிஸ் நிறு­வ­னர்­கள் பல­ருக்கு அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யது.

இதை­ய­டுத்து, இயக்­கு­னர் குழு, நிறு­வ­னத்­தின் உயர்ந்த நெறி­க­ளை­யும், கொள்­கை­க­ளை­யும் கடை­பி­டிக்க தவ­று­வ­தாக, நாரா­ய­ண­மூர்த்தி வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­தார். மேலும், தன் விருப்ப ஓய்­வில் சென்ற உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு, அதிக இழப்­பீடு வழங்­கப்­பட்­ட­தை­யும் அவர் கண்­டித்­தார். இந்த பிரச்னை தவிர, இஸ்­ரே­லைச் சேர்ந்த, பனாயா நிறு­வ­னத்தை, அதிக மதிப்­பீட்­டில் கைய­கப்­ப­டுத்­தி­ய­தில், இன்­போ­சிஸ் உய­ர­தி­கா­ரி­கள் மறை­மு­க­மாக பய­ன­டைந்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது.

இதை­ய­டுத்து, இன்­போ­சிஸ், வெளி நிறு­வ­னம் மூலம் விசா­ரணை நடத்தி, ‘ஒப்­பந்­தத்­தில் முறை­கேடு ஏது­மில்லை’ என, தெரி­வித்­தது. ஆனால், நாரா­ய­ண­மூர்த்தி, ‘விசா­ரணை அறிக்கை விப­ரங்­களை, பகி­ரங்­க­மாக வெளி­யிட வேண்­டும்’ என, வலி­யு­றுத்­தி­னார். சமீ­பத்­தில், ‘ஒரு நிறு­வ­னம் வளர்ச்சி காண வேண்­டு­மென்­றால், உய­ர­தி­கா­ரி­கள் சம்­ப­ளத்தை குறைத்து, சிக்­க­னத்தை கடை­பி­டிக்க வேண்­டும்’ என, தெரி­வித்­தார்.

இது போன்ற மோதல்­கள் தீவி­ர­ம­டைந்த நிலை­யில், விஷால் சிக்கா, நேற்று, ராஜி­னாமா செய்­தார். அவ­ரின் ராஜி­னா­மாவை ஏற்ற, இன்­போ­சிஸ் நிர்­வா­கம், இடைக்­கால தலைமை செயல் அதி­கா­ரி­யாக, யு.பி.பிர­வின் ராவை நிய­மித்­துள்­ளது. இத­னி­டையே, விஷால் சிக்கா கூறிய கருத்­துக்கு, இன்­போ­சிஸ் மறுப்பு தெரி­வித்­துள்­ளது.

‘வருத்தப்பட்டதில்லை’
மத்­திய பிர­தே­சத்­தைச் சேர்ந்த விஷால் சிக்கா, தன் ராஜி­னாமா கடி­தத்­தில், ‘நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றி­ய­தற்­காக, ஒரு வினாடி கூட வருத்­தப்­பட்­ட­தில்லை; ஆனால், பல மாதங்­க­ளாக நீடிக்­கும் சர்ச்சை பேச்­சுக்­கள், பணி­யில் கவ­னம் செலுத்த இடை­யூ­றாக இருந்­தன. ‘அத­னால், மரி­யாதை, நம்­பிக்கை, சுயா­தி­கா­ரம் உள்ள சூழலை நாடி, புதிய சவாலை சந்­திக்க செல்­கி­றேன்’ என, தெரி­வித்து உள்­ளார். இவர் வில­கல் கார­ண­மாக, மும்பை பங்­குச் சந்­தை­யில், நேற்று, இன்­போ­சிஸ் பங்கு விலை, ஒரே நாளில், 98.05 ரூபாய் குறைந்து, 923.10 ஆக சரி­வ­டைந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)