கரன்சி நிலவரம்கரன்சி நிலவரம் ... திவால் நிறுவனங்களுக்கு வரி விலக்கு; ‘அசோசெம்’ அமைப்பு கோரிக்கை திவால் நிறுவனங்களுக்கு வரி விலக்கு; ‘அசோசெம்’ அமைப்பு கோரிக்கை ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2017
23:43

ஜி.எஸ்.டி.ஆர்., டிரான் – 1 படி­வத்தை, எந்த தேதிக்­குள் தாக்­கல் செய்ய வேண்­டும்? ஏற்­க­னவே தாக்­கல் செய்­யப்­பட்ட, டிரான் – 1 படி­வத்­தில் திருத்­தம் செய்ய இய­லுமா?– ராஜ்­கு­மார், நெய்­வேலி
ஜி.எஸ்.டி., சட்­டம் அறி­மு­கம் செய்த போது, ஜி.எஸ்.டி., டிரான் – 1 படி­வம் தாக்­கல் செய்­வ­தற்­கான தேதி, 30ம் தேதி என, இருந்­தது. இந்த தவணை தேதி, மேலும் ஒரு மாதம் நீட்­டிக்­கப்­பட்டு, அக்., 31க்குள், ஜி.எஸ்.டி., டிரான் – 1 படி­வத்தை தாக்­கல் செய்ய வேண்­டும். மேலும், தாக்­கல் செய்­யப்­பட்ட, டிரான் – 1 படி­வத்­தில், ஒரு­முறை மாற்­றம் செய்ய அனு­ம­திக்­கப்­பட்டு உள்­ளது.
*****
நான், என்­னு­டைய கட்­ட­டத்தை, ஒரு தனி­யார் பைனான்ஸ் கம்­பெ­னிக்கு மாத வாட­கைக்கு விட்­டுள்­ளேன். இது­வரை, வாடகை பணத்­தில், வரு­மான வரியை பிடித்­தம் செய்து, வாட­கையை செலுத்தி வந்­த­னர். தற்­போது, வரு­மான வரி­யு­டன், ஜி.எஸ்.டி.,யையும் சேர்த்து, பிடித்­தம் செய்து வாட­கையை செலுத்­து­கின்­ற­னர். இது, எந்த வகை­யில் சரி என்­பதை விளக்­க­வும்.– சந்­தா­னம், சிவ­காசி
உங்­கள் கட்­ட­டத்­தில் வாட­கைக்கு இருக்­கும் தனி­யார் நிறு­வ­னம், ஜி.எஸ்.டி., பதிவு பெற்­றுள்­ளது என்­றால், இந்த பரி­வர்த்­த­னைக்கு, அவர்­கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில், ஜி.எஸ்.டி.,யை, அர­சுக்கு செலுத்த வேண்­டும். அவர்­கள் செலுத்­திய வரியை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற­லாம். உங்­க­ளுக்கு வழங்­கக்­கூ­டிய வாடகை தொகை­யில், ஜி.எஸ்.டி.,யை கார­ணம் காட்டி, எந்த ஒரு பிடித்­த­மும் அவர்­கள் செய்­யக் கூடாது. முன் செய்­தது போலவே, வரு­மான வரி பிடித்­தம் மட்­டுமே, அவர்­கள் செய்ய வேண்­டும்.
*****
சார், நான், வெள்ளி கொலுசு வியா­ப­ாரம் செய்­கி­றேன். ‘வாட்’ வரி இருந்த போது இதற்கு வரி இல்லை. தற்­போது, 3 சத­வீத வரி உள்­ளது. பழைய கொலு­சு­களை வாடிக்­கை­யா­ளர்­கள் எங்­க­ளி­டம் அளித்து, புது கொலுசு வாங்­கிக் கொள்­வர். அப்­படி, நாங்­கள் கொலு­சு­களை வாங்­கும் போது, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ வரி செலுத்த வேண்­டுமா?– ஹரி­வா­சன், இளை­யான்­குடி
நீங்­கள், பதிவு செய்­யாத வணி­க­ரி­ட­மி­ருந்து நகை­களை வாங்­கி­னால் மட்­டுமே, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி செலுத்த வேண்­டும். அதுவே, வாடிக்­கை­யா­ள­ரி­ட­மி­ருந்து பழைய கொலு­சு­களை வாங்­கி­னால், அதற்கு, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி விதிக்­கப்­ப­டாது.
*****
ஜூன், 30ல், எங்­க­ளி­டம் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட கையி­ருப்பு சரக்கு உள்­ளது. அதில் செலுத்­தி­யி­ருந்த சுங்க வரியை, உள்­ளீட்டு வரி பய­னாக பெறு­வ­தற்கு வழி உள்­ளதா? சுங்க வரி தொகை, 2 லட்­சம் ரூபாய்க்­கும் மேல் இருக்­கும். தயவு கூர்ந்து விளக்­க­வும்.– உமா மகேஸ்­வரி, மேற்கு மாம்­ப­லம்
நீங்­கள் செலுத்­திய சுங்க வரிக்கு, உள்­ளீட்டு வரி பயன் கிடைக்­காது. இறக்­கு­ம­தி­யின் போது செலுத்­திய, கலால் வரியை பய­னாக பெற­லாம்.
*****
நான், இந்­தி­யா­வில் இருக்­கும் அனைத்து மாநில மாண­வர்­க­ளுக்­கும், கல்வி சேவை செய்து வரு­கி­றேன். கல்வி சேவைக்கு, ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டுமா? ஆண்டு வரு­மா­னம், 20 லட்­சம் ரூபாய்க்கு மேல் இருந்­தால், நான், அவர்­க­ளி­டம், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டுமா?– ரஞ்­சித், சென்னை
நீங்­கள் குறிப்­பி­டும் சேவைக்கு, 18 சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும். நீங்­கள், அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் சென்று சேவை வழங்­கு­வ­தால், உங்­கள் வரு­மா­னம், 20 லட்­சம் ரூபாய்க்கு குறை­வாக இருப்­பி­னும், ஜி.எஸ்.டி., பதிவை பெற வேண்­டும். ஜி.எஸ்.டி., பதிவை பெற்ற பின், வரி வசூல் செய்து, அர­சுக்கு செலுத்த வேண்­டும்.
*****
சார், நான், எல்.இ.டி., பல்­பு­கள் முக­வ­ராக உள்­ளேன். இதன், எச்.எஸ்.என்., குறி­யீட்டு எண் மற்­றும் வரி விகி­தத்தை தெரி­யப்­ப­டுத்­த­வும்.– சங்­கர நாரா­ய­ணன், நெல்லை
நீங்­கள் குறிப்­பிட்ட பொருளை, 8539 எனும், எச்.எஸ்.என்., குறி­யீட்­டில் வகைப்­ப­டுத்­தப்­படும். இதற்கு நீங்­கள், 12 சத­வீத வரி விதிக்க வேண்­டும்.

-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : உரி­மம் இன்றி செயல்­படும் உண­வ­கங்­களை, சேவைப் பட்­டி­ய­லில் இருந்து உட­ன­டி­யாக நீக்­கு­மாறு, ... மேலும்
business news
புதுடில்லி : ‘அமெ­ரிக்­கா­வில் வட்டி விகி­தம் உயர்ந்­துள்­ள­தால், இந்­தி­யா­வில் இருந்து அன்­னிய முத­லீ­டு­கள் ... மேலும்
business news
புது­டில்லி : ‘‘துாத்துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலை மூடப்­பட்­ட­தால், ஓராண்­டில், 690 கோடி ரூபாய் இழப்பு ஏற்­படும்,’’ ... மேலும்
business news
கோவை : பிற மாநி­லங்­களில் இருந்து, 64 ஜின்­னிங் மில் உரி­மை­யா­ளர்­கள், ‘இந்­தி­யன் டெக்ஸ்­பி­ர­னர்ஸ்’ ... மேலும்
business news
குன்னுார் : லாரி, ‘ஸ்டி­ரைக்’ கார­ண­மாக, குன்­னுா­ரில் உள்ள குடோன்­களில், 5 லட்­சம் கிலோ தேயி­லைத் துாள் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)