ஆப்பிள், ‘ஐபோன் – 8, 8 பிளஸ்’ போன் அறிமுகம்ஆப்பிள், ‘ஐபோன் – 8, 8 பிளஸ்’ போன் அறிமுகம் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.17 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.17 ...
சட்டபூர்வ மதிப்புடன், ‘டிஜிட்டல் கரன்சி’; ரிசர்வ் வங்கி வெளியிட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2017
23:46

மும்பை: ரிசர்வ் வங்கி, தற்­போ­தைய காகித கரன்­சி­க­ளு­டன், வலை­த­ளத்­தில், மின்­னணு பரி­வர்த்­த­னை­க­ளுக்கு மட்­டும் பயன்­படும், ‘டிஜிட்­டல் கரன்சி’யை வெளி­யி­டு­வது குறித்­தும், பரி­சீ­லித்து வரு­வ­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

தற்­போது, காகித கரன்­சி­களை, ரிசர்வ் வங்கி அச்­சிட்டு, வெளி­யிட்டு வரு­கிறது. அத்­து­டன், பல்­வேறு மதிப்­பு­களில் நாண­யங்­களும் வெளி­யி­டப்­ப­டு­கின்றன. இந்­நி­லை­யில், அதி­க­ரித்து வரும் கரன்சி தயா­ரிப்பு செலவை குறைக்க, ரிசர்வ் வங்கி, பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்டு உள்­ளது. கரன்சி அச்­ச­டிப்­பதை மெல்ல குறைத்து, அதற்கு ஈடாக, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­களை அதி­க­ரிக்­கும் திட்­ட­மும், அதில் அடங்­கும்.

மின்­னணு தொழில்­நுட்­பத்­தில், பணம் செலுத்­து­வது அதி­க­ரித்­தால், கரன்சி புழக்­க­மும், பயன்­பா­டும் ஓர­ளவு குறை­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஏற்­க­னவே, மத்­திய அர­சும், ரிசர்வ் வங்­கி­யும், ‘டெபிட், கிரெ­டிட் கார்டு, இ – வாலட்’ உள்­ளிட்ட, வலை­த­ளம் சார்ந்த பணப் பரி­வர்த்­த­னை­களை ஊக்­கு­வித்து வரு­கின்றன. இந்­நி­லை­யில், வலை­த­ளங்­களில் மட்­டும் புழங்­கும், ‘விர்ச்­சு­வல் கரன்சி’ எனப்­படும், மெய்­நி­கர் கரன்­சி­களை வெளி­யி­டு­வது குறித்­தும், ரிசர்வ் வங்கி பரி­சீ­லித்து வரு­கிறது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி செயல் இயக்­கு­னர், சுதா­க­ரன் சென் கூறி­ய­தா­வது: வலை­த­ளங்­களில், ‘பிட்­காய்ன், எரித்­ரியா’ போன்ற பல வகை­யான மெய்­நி­கர் கரன்­சி­கள் புழங்­கு­கின்றன. தனி­யார் வெளி­யி­டும் இந்த வகை கரன்­சி­க­ளுக்கு, சட்­ட­பூர்வ மதிப்பு கிடை­யாது. இந்த கரன்­சி­களின் பரி­வர்த்­த­னையை கட்­டுப்­ப­டுத்த, எந்­த­வொரு ஒழுங்­கு­முறை அமைப்­பும் இல்லை. இருந்த போதி­லும், சில ஆண்­டு­க­ளாக, வலை­த­ளங்­களில், ‘பிட்­காய்ன்’ போன்ற, அங்­கீ­கா­ர­மற்ற மின்­னணு கரன்­சி­களில் முத­லீடு செய்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

‘இந்த கரன்­சி­களில் செய்­யும் முத­லீ­டு­கள், பரி­வர்த்­த­னை­கள் ஆகி­யவை ஆபத்­தா­னவை; எத்­த­கைய இடர்ப்­பாடு ஏற்­பட்­டா­லும், அது, இத்­த­கைய கரன்சி வர்த்­த­கத்­தில் ஈடு­ப­டு­வோ­ரையே சாரும்’ என, ரிசர்வ் வங்கி ஏற்­க­னவே எச்­ச­ரித்­துள்­ளது. அத­னால், ‘பிட்­காய்ன்’ போன்ற தனி­யார் கரன்­சி­களின் பாது­காப்­பற்ற பரி­வர்த்­த­னை­கள், நம் நாட்­டிற்கு ஏற்­ற­தல்ல.அதே சம­யம், சட்­ட­பூர்வ மதிப்­பு­டன், மின்­னணு கரன்­சி­களை வெளி­யி­டு­வது குறித்து, ரிசர்வ் வங்கி பரி­சீ­லித்து வரு­கிறது.

தற்­போ­தைய காகித கரன்­சி­க­ளுக்கு மாற்­றாக, மின்னணு கரன்சி வெளி­யி­டப்­படும் துவக்க நிலை­யில் உள்ள இத்­திட்­டத்­தின் சாதக, பாதக அம்­சங்­கள் குறித்து, ரிசர்வ் வங்கி தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கிறது. இத்­திட்­டம் செயல்­பாட்­டிற்கு வரும்­பட்­சத்­தில், மின்­னணு கரன்சி பரி­வர்த்­த­னை­கள், மிகுந்த பாது­காப்பு அம்­சங்­களை கொண்­ட­தாக இருக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

2 மடங்கு உயர்வு:
ரிசர்வ் வங்கி, 2016 – 17 ஜூலை – ஜூன் வரை­யி­லான நிதி­யாண்­டில், கரன்சி நோட்­டு­களை அச்­ச­டிக்க, 7,965 கோடி ரூபாய் செல­விட்டு உள்­ளது. இது, முந்­தைய, 2015 – 16ம் நிதி­யாண்­டில் செல­விட்ட, 3,420 கோடி ரூபாயை விட, இரு மடங்கு அதி­கம்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : உரி­மம் இன்றி செயல்­படும் உண­வ­கங்­களை, சேவைப் பட்­டி­ய­லில் இருந்து உட­ன­டி­யாக நீக்­கு­மாறு, ... மேலும்
business news
புதுடில்லி : ‘அமெ­ரிக்­கா­வில் வட்டி விகி­தம் உயர்ந்­துள்­ள­தால், இந்­தி­யா­வில் இருந்து அன்­னிய முத­லீ­டு­கள் ... மேலும்
business news
புது­டில்லி : ‘‘துாத்துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலை மூடப்­பட்­ட­தால், ஓராண்­டில், 690 கோடி ரூபாய் இழப்பு ஏற்­படும்,’’ ... மேலும்
business news
கோவை : பிற மாநி­லங்­களில் இருந்து, 64 ஜின்­னிங் மில் உரி­மை­யா­ளர்­கள், ‘இந்­தி­யன் டெக்ஸ்­பி­ர­னர்ஸ்’ ... மேலும்
business news
குன்னுார் : லாரி, ‘ஸ்டி­ரைக்’ கார­ண­மாக, குன்­னுா­ரில் உள்ள குடோன்­களில், 5 லட்­சம் கிலோ தேயி­லைத் துாள் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)