பங்குச் சந்தைபங்குச் சந்தை ... நிறு­வ­னங்­க­ளுக்­கு  கிடுக்­கிப்பிடி போடும், ‘செபி’ நிறு­வ­னங்­க­ளுக்­கு கிடுக்­கிப்பிடி போடும், ‘செபி’ ...
எஸ்.ஐ.பி., முத­லீ­டு­கள் வெற்­றி­க­ர­மா­னதா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2017
01:04

இந்­திய பங்­குச் சந்­தை­யில், எஸ்.ஐ.பி., முத­லீட்டு முறை­யைக் கடை­பி­டித்து, இந்­திய முத­லீட்­டா­ளர்­கள், ஒவ்­வொரு மாத­மும் தவ­றா­மல், 5,200 கோடி ரூபாயை முத­லீடு செய்­கின்­ற­னர். இது, நம் பங்­குச் சந்தை வர­லாற்­றி­லேயே ஒரு சாதனை!
எஸ்.ஐ.பி., முறை­யில் முத­லீடு செய்­தால், வெற்றி நிச்­ச­யம் கிடைக்­குமா? அதி­க­மான லாபம் பெற இந்த முறை வழி வகுக்­குமா? நம் முத­லுக்கு எந்த வகை­யி­லும் நஷ்­டம் வரா­மல், இந்த முறை­யில் காக்க முடி­யுமா? இது­போன்ற பல கேள்­வி­கள் தொடர்ந்து நம் சந்­தை­யில் எழுப்­பப்­ப­டு­கின்றன. முத­லில், இதன் அடிப்­ப­டை­யைப் புரிந்து கொள்­வது அவ­சி­யம். மாதம்­தோ­றும் தவணை முறை­யில் முத­லீடு செய்­யும் முறையே, ’சிஸ்­ட­மேட்­டிக் இன்­வெஸ்ட்­மென்ட் பிளான்.’ சுருக்­க­மாக, எஸ்.ஐ.பி. என்­பர்.மாதம் குறைந்­த­பட்­சம், 500 ரூபா­யைக் கூட முத­லீ­டாக பங்­குச் சந்­தை­யில் செலுத்த வழி­வ­குக்­கும் முத­லீட்டு முறையே இது. இந்த முத­லீட்டு முறை, சந்­தை­யின் ஏற்ற இறக்­கங்­களில் இருந்து நம்மை பாது­காக்க ஒரு யுத்­தி­யாக மட்­டுமே பார்க்­கப்­பட வேண்­டும்.சந்தை உச்­சத்­தில் இருக்­கும்­போது, அதிக பண முத­லீடுசெய்­து­விட்டு, பிறகு சந்தை இறங்­கு­மு­கம் காணும்­போது, செய்­வ­த­றி­யாது தவிக்­கும் பெரும்­பான்மை முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, ஒரு மாற்­றாக மட்­டுமேஇந்த முறை வர­வேற்பு பெற்­றி­ருக்­கிறது.ஒவ்­வொரு காளைச் சந்­தை­யி­லும், மக்­கள், சந்­தைக்­குள் மந்தை மந்­தை­யா­கப் புகுந்து, மொத்த பணத்­தை­யும் முத­லீடு செய்­வ­தும், பிறகு சந்தைஇறக்­கம் காணும்­போது, அந்­தப் பணத்தை எடுத்து சந்­தை­யில் இருந்து வெளி­யே­று­வ­தும்மட்­டுமே நம் சந்­தை­யின் வர­லாறு.இந்த ரொக்க முத­லீடு ஏற்­ப­டுத்­தும் பாத­கங்­க­ளைத் தவிர்க்­கவே எஸ்.ஐ.பி., முறை அறி­வு­றுத்­தப்­ப­ட­லாம். ஆகவே, இதை ஒரு வெற்­றிக்­கான வழி­யா­கப் பார்ப்­ப­தை­விட, படு­தோல்­வி­க­ளைத் தவிர்க்­கும் யுத்­தி­யாக மட்­டுமே நாம் பார்க்க வேண்­டும்.எஸ்.ஐ.பி., முறை­யின் கடந்த கால வர­லாற்றை சற்று திரும்­பிப் பார்ப்­போம். கடந்த காளைச் சந்­தை­யில், பெரு­வா­ரி­யான இவ்­வகை முத­லீ­டு­கள் உள்­கட்­ட­மைப்பு துறை­யி­லும், மின் உற்­பத்தி துறை­யி­லும் அதி­கம் குவிந்­தன. இந்த முத­லீ­டு­கள் படு­தோல்வி அடைந்ததை இந்த தரு­ணத்­தில் நினைவு கூர்­வது நல்­லது.அதே­போல், 2,000ம் ஆண்­டில் கண்ட, காளைச் சந்­தை­யின் எஸ்.ஐ.பி., பெரும்­பா­லும் மென்­பொ­ருள் சார்ந்த நிறு­வ­னங்­களில் குவிந்­தது வர­லாறு. இந்த முத­லீ­டு­களும் பெரும் நஷ்­டத்­தையே தந்­தன.ஆகவே, கண்­மூ­டித்­த­ன­மாக முத­லீடு செய்­தால், இந்த முத­லீட்டு முறை­யில் சாத­கங்­க­ளை­விட பாத­கங்­க­ளையே அதி­கம் சந்­திக்க நேரி­டும். இத­னால், இம்­மு­த­லீட்டு முறை பாத­க­மா­னது என்­றும் முடி­வுக்கு வந்­து­வி­டக் கூடாது. ஏனெ­னில், புளூ­சிப் நிறு­வ­னப் பங்­கு­க­ளி­லும், பெரு­நி­று­வன பங்­கு­க­ளி­லும் செய்­யும் இவ்­வகை முத­லீ­டு­கள் அதி­கம் வெற்றி பெற்­றுள்ளன.ஆகவே, எஸ்.ஐ.பி.,யில் வெற்றி- – தோல்­வி­கள், நம் முத­லீட்டு தேர்­வு­களின் அடிப்­ப­டை­யில்­தான் அமை­யும் என்­பதை உணர்­வது மிக அவ­சி­யம்.குறு­கிய, கடந்த கால லாப நிகழ்­வு­க­ளைக் கொண்டு எடுக்­கப்­படும், எஸ்.ஐ.பி., முடி­வு­கள், தோல்வி காணக்­கூ­டும். மேலும், இந்த முறை­யில், தொடர்ந்து பல ஆண்­டு­கள், ஒழுக்­க­மான முறை­யில், தடை ஏற்­ப­டா­த­வண்­ணம் முத­லீடு செய்­ய­வேண்­டி­யது அவ­சி­யம். இதை மன­தில் கொண்டு, முத­லீட்டு தேர்­வு­களை மிக கவ­ன­மா­க­வும், நிதா­ன­மா­க­வும், தொலை­நோக்­கோ­டும் எடுப்­பதே எஸ்.ஐ.பி., முத­லீ­டு­களின் வெற்றி ரக­சி­யம்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)