எஸ்.ஐ.பி., முத­லீ­டு­கள் வெற்­றி­க­ர­மா­னதா?எஸ்.ஐ.பி., முத­லீ­டு­கள் வெற்­றி­க­ர­மா­னதா? ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.76 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.76 ...
நிறு­வ­னங்­க­ளுக்­கு கிடுக்­கிப்பிடி போடும், ‘செபி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2017
01:05

வங்­கி­களின் வாராக் கடன் பிரச்­னைக்கு, தீர்வு காணும் அதி­ரடி முயற்­சி­களில் ஒன்று, அக்­டோ­பர் 3ம் தேதி ஆரம்­பிக்­க­வி­ருக்­கிறது. அன்று பங்­குச் சந்­தை­யில் பூகம்­பம் இல்­லை­யென்­றா­லும், சின்­னச் சின்ன லட்­சுமி வெடி­க­ளே­னும் வெடிக்­கும் என்று நம்­ப­லாம். அதென்ன அதி­ரடி முயற்சி?ஒரு நிறு­வ­னத்­தின் கடனை, 90 நாட்­க­ளுக்கு மேல் திருப்­பிச் செலுத்­தப்­ப­டாத போது­தான், ‘வாராக் கடன்’ என்று வரை­யறை செய்­கின்றன வங்­கி­கள். அதன் பின்­ தான், அந்த நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து பணத்தை வசூ­லிக்­கும் முயற்­சி­கள் துவங்­கும். கடி­தங்­கள், நினை­வூட்­டல்­கள் என்று துவங்கி, படிப்­ப­டி­யா­கச் சூடு­பி­டிக்­கும் வசூல் வேட்டை, பயன் தராத போது, பிரச்னை பூதா­க­ர­மா­கும்.இப்­ப­டித்­தான், இன்­றைக்கு இந்­திய வங்­கி­களின் வாராக்­க­டன் தொகை, 10 லட்­சம் கோடி­யைத் தொட்­டுள்­ளது. இதை முளை­யி­லேயே கிள்­ளி­யெ­றி­யும் முயற்­சியை, பங்­குச் சந்­தை­களின் கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ துவங்­கி­உள்­ளது.ஒரு நாள் தாமதம்இதன்­படி, பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள், வங்­கி­க­ளிலோ, இதர நிதி அமைப்­பு­க­ளி­டமோ கடன் பெற்று, அதைத் திருப்­பிச் செலுத்­து­வ­தில் ஒரு நாள் தாம­தம் ஏற்­பட்­டா­லும், அந்த விவ­ரத்தை பங்­குச் சந்­தைக்­குத் தெரி­விக்­க­ வேண்­டும் என்று உத்­த­ர­விட்­டுள்­ளது, ‘செபி.’அது கடன் தொகை­யாக இருக்­க­லாம், வட்­டி­யாக இருக்­க­லாம், கடன் பத்­தி­ரங்­க­ளாக இருக்­க­லாம், முன்­னு­ரிமை பங்­கு­க­ளாக இருக்­க­லாம், எந்த நிதி ஆவ­ண­மாக வேண்­டு­மா­னா­லும் இருக்­க­லாம். திருப்­பிச் செலுத்­தப்­பட வேண்­டிய தொகை, திருப்­பிச் செலுத்­தப்­பட வேண்­டிய நாளில், திருப்­பப்­ப­ட­வில்லை என்­றால், அந்த விவ­ரத்தை பங்­குச் சந்­தைக்­குத் தெரி­விக்க வேண்­டும்.இதி­லும் ஒரு சூப்­பர் டிவிஸ்ட் இருக்­கிறது. பொது­வாக வங்­கி­கள் ஒரு பட்­டி­யலை வைத்­தி­ருக்­கும். அதில், 30 நாட்­க­ளுக்கு மேல், 60 நாட்­க­ளுக்கு மேல், 90 நாட்­க­ளுக்கு மேல் கட­னைத் திருப்­பிச்செலுத்­தாத நிறு­வ­னங்­கள் என்று பிரித்து வகைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கும். இந்­தப் பட்­டி­யல், இத்­தனை ஆண்­டு­களும் வங்­கி­க­ளுக்­குள் மட்­டுமே புழக்­கத்­தில் இருந்து வந்­தது. இனி­மேல் இப்­பட்­டி­யலை வெளிப்­ப­டை­யாக, வங்­கி­கள் தெரி­விக்க வேண்­டும்.கடன் சுமை எவ்­வ­ளவு?கடன் தவணை செலுத்­தப்­ப­டாத முதல் மாதமே, விஷ­யம்வெளிச்­சத்­துக்கு வந்­து­வி­டும்என்­பது முக்­கி­ய­மான பலன். அது­வும் பங்­குச் சந்­தை­க­ளுக்கு, குறிப்­பிட்ட நிறு­வ­னங்­கள் தாமே முன்­வந்து இந்­தத்தக­வ­லை பகிர்ந்­து­கொள்ள வேண்­டும் என்­ப­தால், அந்த நிறு­வ­னங்­கள் மீது கடு­மை­யான அழுத்­தம் ஏற்­படும். அவர்­க­ளு­டைய மரி­யா­தைக்­குக் களங்­கம் ஏற்­ப­ட­லாமோ என்ற அச்­சம் தோன்­றும்.இத­னால், சரி­யான தேதி­யில், உரிய தவ­ணைத் தொகை­யைச் செலுத்­தி­வி­டும் கட்­டுப்­பா­டுக்­கும், ஒழுங்­குக்­கும் இத்­த­கைய நிறு­வ­னங்­கள் தள்­ளப்­படும். யாருக்­குத் தெரி­யப் போகிறது என்று விட்­டேத்­தி­யாக இனி இருக்க முடி­யாது. நிறு­வ­னத்­தின் கடன் சுமை எவ்­வ­ளவு, அதைச் செலுத்த முடி­யா­மல் திண்­டா­டும் நிலை என அனைத்­தும் வெளிப்­ப­டை­யா­கத் தெரிய வந்­து­வி­டும். அழுக்கு மூட்­டை­களை ரொம்ப நாளைக்கு கட்­டி­லுக்கு அடி­யில் ஒளித்து வைக்க முடி­யாது. அவை வெளியே வந்து நாற்­றத்­தைக் கிளப்­பி­வி­டவே செய்­யும்.இந்த நட­வ­டிக்­கை­யால் வங்­கி­கள் ஆரம்­பத்­தி­லேயே உஷா­ரா­கி­வி­டும். விரைந்து அவர்­க­ளி­ட­மி­ருந்து தவ­ணையை வசூல் செய்­ய­வேண்­டிய அழுத்­தம் ஏற்­படும். தள்­ளிப் போட முடி­யாது, சால்­ஜாப்பு சொல்ல முடி­யாது. கடன் தவணைகள்கொடுத்த கடன், மொத்­த­மா­கத் திரும்பி வரா­மல் போய்­வி­டு­வ­தற்­கான வாய்ப்­பும்இருப்­ப­தால், அதை மனதில் வைத்­துக்­கொண்டு, அதற்­கேற்ப போதிய நிதியை ஒதுக்கி வைத்­துக் கொள்­ள­வும்இந்த நட­வ­டிக்கை வழி­செய்­யும்.நிறு­வ­னங்­களின் பெயர் வெளியே தெரிந்­த­வு­டன், ரேட்­டிங் நிறு­வ­னங்­களும் உஷா­ரா­கி­வி­டும். பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்ட நிறு­வ­னங்­களின் தரத்தை இந்த நிறு­வ­னங்­கள் மதிப்­பீடு செய்­கின்றன. அதில் வர­வு­க­ளோடு, செல­வு­க­ளை­யும் கடன்­க­ளை­யும் கணக்­கில் எடுத்­துக்­கொண்டே இவை மதிப்­பீடு செய்­கின்றன.இந்த நிலை­யில், கடன் தவ­ணை­களை உரிய நேரத்­தில் செலுத்­த­வில்லை என்­றால், அத்­த­கைய நிறு­வ­னத்­தின் மதிப்பு குறைக்­கப்­படும். இத­னால், முத­லீட்­டா­ளர்­கள் இந்த நிறு­வ­னங்­களின் பங்­கு­களை வாங்­கத் தயங்­கு­வர்­. தகிடுதத்தம் செய்ய முடியாதுவங்­கி­களும் இத்­த­கைய நிறு­வ­னங்­க­ளுக்கு அடுத்­த­டுத்த கடன்­களை கொடுக்­கத் தயங்­கும். தொடர்ச்­சி­யாக தவணை தொகை­க­ளைச் செலுத்­து­வ­தில் தாம­தங்­கள் ஏற்­ப­டு­ம­ானால், அந்த நிறு­வ­னங்­களின் மதிப்பு மிக­வும் சரிந்து போகும். அவற்­றால் திறம்­ப­டச் செயல்­பட முடி­ய­வில்லை, தத்­த­ளிக்­கின்றன என்­பதை முன்­கூட்­டியே உணர்ந்து கொள்ள முடி­யும்.‘செபி’யின் உத்­த­ரவு, நிறு­வ­னங்­க­ளி­லும், வங்­கி­க­ளி­லும் நிதி ஒழுக்­கத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கிறது. அதில் ஏதே­னும் இட­றல் ஏற்­ப­டு­மா­னால், பிரச்னை உடனே வெளியே வந்­து­வி­டும்.தும்பை விட்டு, வாலைப் பிடிக்­கா­மல், ஆரம்­பத்­தி­லேயே வங்­கி­கள் எச்­ச­ரிக்கை பெற முடி­யும்.ஒரு வங்­கி­யில் கடன் வாங்கி, மற்­றொரு வங்­கி­யின் கடனை அடைப்­பது என்­றெல்­லாம் இனி நிறு­வ­னங்­கள் தகி­டு­தத்­தம் செய்ய முடி­யாது. அந்த நிறு­வ­னத்­தின் நிலைமை பளிச்­சென்று வெளியே தெரிந்­து­வி­டு­வ­தால், இதர வங்­கி­களும் நிதி அமைப்­பு­களும் கடன் கொடுக்­கா­மல், ‘ஜகா’ வாங்­கிக் கொள்­ளும்.நிறு­வ­னங்­களின் நிதி நிலை­மை­யின் மீது இருந்த மாயத் திரை விலக்­கப்­பட்­டுள்­ளது. வெளிப்­ப­டைத் தன்மை அதி­க­ரித்­துள்­ளது. அந்த வகை­யில்‘செபி’யின் முன்­மு­யற்சி வர­வேற்­கத்­தக்­கதே.ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)