‘வாகன துறை வளர்ச்சிக்கு நிலையான கொள்கை தேவை’‘வாகன துறை வளர்ச்சிக்கு நிலையான கொள்கை தேவை’ ... வாகன ஏற்றுமதியில் மாருதி சுசுகி முதலிடம் வாகன ஏற்றுமதியில் மாருதி சுசுகி முதலிடம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்தியாவில் 20 லட்சம் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2017
16:01

புதுடில்லி : டி.வி.எஸ். ஜூப்பிட்டர் விற்பனையில் இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் வெளியான நான்கே ஆண்டுகளில் 20 லட்சம் பேர் டி.வி.எஸ். ஜூப்பிட்டரை வாங்கியுள்ளனர். ஹோன்டா ஆக்டிவா மாடலுக்கு அடுத்த இடத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக டி.வி.எஸ். ஜூப்பிட்டர் இருக்கிறது.
இந்தியாவில் பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி அறிமுகம் செய்த அபாச்சி, ஆர்டிஆர், விக்டர் மற்றும் ஜூப்பிட்டர் உள்ளிட்டவை நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்தவகையில், வெளியான நான்கே ஆண்டுகளில் 20 லட்சம் ஜூப்பட்டர்களை விற்றுள்ளதாக டி.வி.எஸ். தெரிவித்துள்ளது.
2013-ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டி.வி.எஸ். ஜூப்பிட்டர் அதிவேகமாக 10 லட்சம் யுனி்ட்களை விற்பனை செய்த ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றது. வெளியான முப்பது மாதங்களில் 10 லட்சம் யுனிட்களை விற்பனையானது. போட்டி நிறுவன வாகனங்களுடன் ஒப்பிடும் போது பல்வேறு அம்சங்களை முதலில் வழங்கிய பெருமையை ஜூப்பிட்டர் பெற்றிருந்தது.
டி.வி.எஸ். ஜூப்பிட்டர் மாடல் 110 சிசி இன்ஜின் கொண்டு 7.99 பிஎஸ் மற்றும் 8 என்எம் செயல்திறன் கொண்டுள்ளது. ஸ்கூட்டர் மாடல்களில் அதிக மைலேஜ் வழங்கும் மாடலாக விளஙக்கும் ஜூப்பிட்டர் லிட்டருக்கு 62 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் டி.வி.எஸ். காப்புரிமை பெற்ற எக்னோமீட்டர் மூலம் இகோ மோட் மற்றும் பவர் மோட் கொண்டுள்ளது. இத்துடன் சின்க் பிரேக்கிங் சிஸ்டம், எக்ஸ்டெர்னல் ஃபியூயல் ஃபில்லர் கேப், பாஸ் லைட் ஸ்விட்ச், மொபைல் சார்ஜர் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)