பங்கு சந்தை போக்­குகள் உணர்த்­து­வது என்ன?பங்கு சந்தை போக்­குகள் உணர்த்­து­வது என்ன? ... பணி வாழ்க்கை திட்­ட­மிடல் பணி வாழ்க்கை திட்­ட­மிடல் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஷாப்பிங் பின்னே உள்ள அறி­வியல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2017
00:12

நுகர்­வோ­ராக நம்மை நாமே புரிந்து கொள்ள வழி­காட்­டு­கி­றது, ‘பேகோ அண்­டர்ஹில்’ எழு­திய, ‘ஒய் வி பை’ புத்­தகம்: நுகர்வோர் எவ்­வ­ளவு நேரம் கடையில் செல­வி­டு­கின்­ற­னரோ, அதற்­கேற்ப அதிக பொருட்­களை வாங்­குவர். நவீன மால்கள் இதற்கு ஏற்­பவே வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன.

இசை கேட்­ட­படி மெது­வாக நடந்து சென்று, பொருட்­களை பார்த்­த­படி, ஊழி­யர்­களுடன் உரை­யாடி, நுகர்வோர் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­றனர். நுகர்வோர் புதிய சூழ­லுக்கு பழக அவ­காசம் தேவை, குறைந்­தது, 5 நிமி­ட­மா­வது வேண்டும். மால்­களின் வாயில் அரு­கேயே, முக்­கிய பொருட்­களை வைத்தால் வாங்க மாட்­டார்கள். உதவி தேவையா என ஊழி­யர்கள் கேட்­டாலும், நிரா­க­ரிப்பர். எடுத்த எடுப்பில் விளம்­பரம் செய்­வது பலன் அளிக்­காது. தள்ளு­படி பொருட்­களை குவித்து, அவர்­களை மெது­வாக கடைக்குள் வலம் வர வைக்க வேண்டும்.

பெரும்­பாலும் நுகர்வோர் வலப்­பக்­க­மாக சென்று அங்­குள்ள பொருட்­களை அதிகம் பார்­வை­யிடு­கின்­றனர். குறைந்த விலை கொண்ட பொருட்கள், பார்­வையில் படும் வகையில் வைக்­கப்­ப­டு­கின்­றன. நுகர்வோர் அமர வச­தி­யான இடம் இருந்தால் அவர்­க­ளிடம் எளி­தாக விளம்­பர தக­வல்­களை திணிக்­கலாம். ஷாப்பிங் செய்­வதில் ஆண்­களுக்கும் பெண்­க­ளுக்கும் வேறு­பாடு இருக்­கி­றது. பெண்கள் பேக்கிங் மற்றும் தோற்­றத்தில் கவனம் செலுத்தி, அதிக நேரம் ஷாப்பிங் செய்­கின்­றனர். ஊழி­யர்­க­ளிடம் அதிக கேள்­விகள் கேட்­கின்­றனர். ஆண்கள் குறை­வான நேரம் ஷாப்பிங் செய்­கின்­றனர். ஆண்கள் தங்­க­ளுக்கு பொருந்தும் ஆடை­களை வாங்­கு­கின்­றனர்.

நுகர்வோர் பொருட்­களை வாங்க முக்­கிய காரணம், அவற்றை தொட்­டுப்­பார்க்க வாய்ப்பு கிடைப்­ப­தாகும். நாம் வாழும் சமூ­கத்தில், சுதந்­தி­ர­மாக பொருட்­களை தொட்­டுப்­பார்த்து உணரும் வாய்ப்பு, ஷாப்­பிங்கில் கிடைக்­கி­றது. திட்­ட­மி­டாமல் வாங்­கப்­படும் பொருட்கள் எல்லாம், தொடுதல், உணர்தல், கேட்டல் மூலம் நிகழ்­கி­றது. ஷாப்பிங் செய்யும் போது பொருட்­களை வாங்­கு­வதில் கண்­ணா­டியை பார்ப்­பது முக்­கிய அங்கம் வகிக்­கி­றது. ஷாப்பிங் செய்­வது என்­பது கண்­ட­றி­தலின் உணர்வை அளிக்­கி­றது. ஒரு மாலுக்குள் சென்று சுற்­றுப்­பார்த்து பல­வற்றை தேடி, நமக்கு தேவை­யா­னதை தேர்வு செய்­வது, வேட்­டை­யா­டி­ய­தற்கு நிக­ரான திருப்­தியை அளிக்­கி­றது. ஷாப்பிங் என்­பதே ஒரு பயண அனு­பவம் போல் அமை­கி­றது.

நுகர்வோர் தாங்கள் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வதை விரும்­பு­கின்­றனர். தாங்கள் வர­வேற்­கப்­ப­டு­வ­தாக உணரும் இடங்­க­ளி­லேயே பொருட்­களை வாங்க விரும்­பு­கின்­றனர். எனவே ஊழி­யரின் உரை­யாடல் அல்­லது பரிந்­துரை பொருட்­களை வாங்கத் துாண்டும் கூடு­தல் அம்­ச­மாக இருக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)