இனி வீடு வாங்குவோர் ஒரே வரி செலுத்தினால் போதும் : ஜெட்லி தகவல்இனி வீடு வாங்குவோர் ஒரே வரி செலுத்தினால் போதும் : ஜெட்லி தகவல் ... மடக்கும் வகையிலான ஐபோன்கள் : ஆப்பிள் திட்டம் மடக்கும் வகையிலான ஐபோன்கள் : ஆப்பிள் திட்டம் ...
மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2017
15:03

புதுடில்லி : இந்தியாவில் பண்டிகை கால விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் மோட்டோரோலா இந்தியா புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. மோட்டோ அறிவிப்பின் படி மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களின் முன்னணி மாடல்கள் அக்டோபர் 14-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டிருப்பதோடு சுலப மாத தவணை முறை வசதி, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களின் தள்ளுபடி செய்யப்பட்ட விலை பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் முழு விபரம் :

மோட்டோ இசட் 2 பிளே : முந்தைய விலையில் இருந்து ரூ.3000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.24,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோ ஜி5எஸ் : இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் மோட்டோ G5S விலையில் ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய மோட்டோ ஜி5எஸ் ரூ.12,999க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மோட்டோ எம் 4ஜிபி + 64 ஜிபி: மோட்டோ எம் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.3000 விலை குறைக்கப்படுகிறது. அந்த வகையில் மோட்டோ எம் ஸ்மார்ட்போனினை ரூ.12,999க்கு வாங்க முடியும்.
மோட்டோ ஜி 5 பிளஸ் 32 ஜிபி: மோட்டோ ஜி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோ ஜி 5: சமீபத்தில் மோட்டோரோலா அறிமுகம் செய்த மோட்டோ ஜி 5 ஸ்மார்ட்போன் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முந்தைய விலையை விட ரூ.1000 குறைவு ஆகும்.
மோட்டோ இ4: மோட்டோவின் பிரபல இ சீரிஸ் நான்காம் தலைமுறை ஸ்மார்ட்போனின் விலை ரூ.800 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.8,199க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோ சி: மோட்டோரோலா மோட்டோ சி ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1,100 குறைக்கப்பட்டு ரூ.5,699க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு மட்டுமின்றி வட்டியில்லா மாத தவணை முறை வசதி, மற்ற சாதனங்களுக்கு பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஹோம் கிரெடிட் மூலம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 100 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மோட்டோ இசட் 2 பிளே வாங்கும் வாடிக்கையாளர்கள் ஜெபிஎல் சவுண்டு பூஸ்ட் எம்ஓடி சாதனத்தை 50 சதவிகிதம் தள்ளுபடியில் பெற முடியும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)