குறைந்த விலை பிரிவு வீடு­களில் அதிக கவனம்குறைந்த விலை பிரிவு வீடு­களில் அதிக கவனம் ... முத­லீட்டு மந்­திரம் முத­லீட்டு மந்­திரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சிறந்த முத­லீ­டாகும் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2017
00:05

அரசு வெளி­யிடும் தங்க சேமிப்பு பத்­தி­ரங்­களில், முத­லீடு செய்யும் வழி­மு­றை­களில் முக்­கிய மாற்­றங்கள் செய்­யப்­பட்டு உள்­ளதால், இவை, முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு கூடுதல் ஈர்ப்­பு­டை­ய­தாக அமையும் என கரு­தப்­ப­டு­கி­றது.

காகித வடிவில் தங்­கத்தில் முத­லீடு செய்­வதை ஊக்­கு­விக்கும் வகையில், தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் அறி­முகம் செய்­யப்­பட்­டன. இவை, ரிசர்வ் வங்­கியால் ஒவ்­வொரு கட்­ட­மாக வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. அண்­மையில், அடுத்த கட்ட தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் வெளி­யி­டப்­பட்டு உள்­ளன. இவற்றில் முக்­கிய மாற்­றங்கள் செய்­யப்­பட்டு உள்­ளன.பொது­வாக, தங்க பத்­தி­ரங்­களில் குறிப்­பிட்ட கால அவ­கா­சத்தில் தான் முத­லீடு செய்ய முடியும். அதன் பிறகு, அடுத்த வெளி­யீடு வரை காத்­தி­ருக்க வேண்டும். ஆனால் இந்த முறை, ‘ஆன் டேப்’ என சொல்­லப்­படும் முறையில் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளதால், டிசம்பர் மாதம், 27ம் தேதி வரை முத­லீடு செய்­யலாம். கடந்த, 9ம் தேதி வெளி­யீடு துவங்­கி­யது.

இவற்றில் ஒவ்­வொரு வாரமும் திங்கள் கிழமை முதல், புதன் கிழமை வரை முத­லீடு செய்­யலாம். இதன் படி, வரும், 16 முதல், 18 வரை, இந்த வாரம் பத்­தி­ரங்­களை வாங்­கலாம். பத்­தி­ரங்­களின் விலை, அந்த வார துாய தங்­கத்தின் சரா­சரி விலைக்­கேற்ப அமையும். பின், இரண்டு வாரங்கள் கழித்து இவை, பங்குச் சந்­தையில் பட்­டி­ய­லி­டப்­படும். இந்த காலம் தீபா­வளி உள்­ளிட்ட பண்­டிகை காலம் என்­பது முக்­கி­ய­மாகும். எனவே, தங்­கத்தில் முத­லீடு செய்ய விரும்பும் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு இந்த வாய்ப்பு ஏற்­ற­தாக இருக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது. இ.டி.எப்.,களை திட்­ட­மிட்டு வாங்­கு­வது போலவே தங்க பத்­தி­ரங்­க­ளையும் வாங்­கலாம்.

வழக்­க­மாக, அறு­வடை முடிந்து, விவ­சா­யிகள் தங்கம் வாங்கும் கால­மா­கவும் இது அமை­கி­றது. மேலும், ஓராண்டில் அதி­க­பட்ச முத­லீடு, 500 கிராமில் இருந்து, 4 கிலோ­வாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. அறக்­கட்­டளை உள்­ளிட்ட அமைப்­பு­க­ளுக்கு இது, 20 கிலோ­வாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. கடந்த, 9ம் தேதி வெளி­யான போது இவற்றின் விலை கிரா­முக்கு, 2,956 ரூபா­யாக இருந்­தது. இந்த மாற்­றங்கள் கார­ண­மாக, தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் மேலும் ஈர்ப்­பு­டை­ய­தாக மாறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)