முத­லீட்டு மந்­திரம்முத­லீட்டு மந்­திரம் ... 'பென்ஷன்' திட்டத்தில் 28வது இடத்தில் இந்தியா 'பென்ஷன்' திட்டத்தில் 28வது இடத்தில் இந்தியா ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘கேஷ்பேக்’ சலு­கைகள் மூலம் பலன் பெறு­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2017
00:09

‘ஷாப்பிங்’ செய்யும் போது, அதிக பலன் பெற, ‘கேஷ்பேக்’ உள்­ளிட்ட சலு­கை­களை சரி­யாக பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

எதிலும் திட்­ட­மி­டுதல் அவ­சியம் என்­பது போல, பண்­டிகை காலத்தில் பொருட்­களை வாங்­கு­வ­திலும் சரி­யான திட்­ட­மிடுதல் அவ­சியம். தேவை­யான பொருட்­களையும், அவற்­றுக்­கான பட்­ஜெட்­டையும் முன்­கூட்­டியே திட்­ட­மிட்­டு­வதன் மூலம், ஷாப்பிங் அனு­ப­வத்தை எளி­தாக்கிக் கொள்­ளலாம் என்­ப­தோடு, அனா­வ­சி­ய­மான பொருட்­களை வாங்­கு­வ­தையும் தவிர்க்­கலாம்.

பரஸ்­பர நலன்:
பொது­வாக, பண்­டிகை காலத்தின் துவக்­கத்தில், ‘அமேசான், பிளிப்கார்ட்’ உள்­ளிட்ட இ – காமர்ஸ் நிறு­வ­னங்கள், விழாக்­கால விற்­ப­னையை அறி­வித்து சலு­கை­களை வழங்­கு­கின்­றன. இதைத் தவிர, பல நிறு­வ­னங்கள் கேஷ்பேக் சலு­கை­க­ளையும் வழங்­கு­கின்­றன. பொருட்­களை வாங்கும் போது, குறிப்­பிட்ட தொகையை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு திரும்ப அளிக்கும் இந்த முறை, தற்­போது மிகவும் பிர­ப­ல­மாகி வரு­கி­றது. ‘கிரெடிட் கார்டு’ மற்றும், ‘டெபிட் கார்டு’ நிறு­வ­னங்கள் இந்த சலு­கை­களை வழங்­கு­கின்­றன. இ – காமர்ஸ் நிறு­வ­னங்கள் மற்றும் இணைய ஷாப்­பிங்­கிற்­கான விலை ஒப்­பீடு சேவை இணை­ய­த­ளங்­களும் கேஷ்பேக் சலு­கை­களை அளிக்­கின்­றன.

இ – காமர்ஸ் நிறு­வ­னங்கள், தங்கள் வாடிக்­கை­யாளர் பரப்பை அதி­க­ரிப்­பதில் தீவிர கவனம் செலுத்தி வரு­கின்­றன. ஷாப்பிங் இணை­ய­த­ளங்கள் மூலம் வாடிக்­கை­யா­ளர்கள் தேடி வரு­வதை அதி­க­ரிக்க விரும்பி, இந்த தளங்­க­ளுடன் இணைந்து செயல்­ப­டு­கின்­றன. அதன்­படி, இந்த தளங்கள் வாடிக்­கை­யா­ளர்­களை அனுப்பி வைக்கும் போது அவற்­றுக்கு கமிஷன் தொகை அளிக்­கின்­றன. இந்த தொகையின் பெரும் பகு­தியை, இணை­ய­த­ளங்கள் வாடிக்­கை­யாளர்­க­ளுக்கு, கேஷ்பேக் சலு­கை­யாக திருப்பி அளித்து, அவர்­களை கவர முயல்­கின்­றன. ஆக, ஷாப்பிங் சார்ந்த இணை­ய­த­ளங்­களில் உலா வந்தால், பல்­வேறு நிறு­வ­னங்கள் அளிக்கும் சலு­கை­களை, அறிந்து கொள்­ளலாம். கேஷ்­கரோ.காம் மற்றும் கோபைசா.காம் போன்ற தளங்கள் இந்த வச­தியை அளிக்­கின்­றன.

இணை­ய­த­ளங்கள் மற்றும் பொருட்­களின் வகை­க­ளுக்கு ஏற்ப கேஷ்பேக் சலுகை அமை­யலாம். பொது­வாக, கேஷ்பேக் சலு­கைகள் வாடிக்­கை­யா­ளரின் கணக்கில் சேர்க்­கப்­படும்.இதை, அடுத்த முறை பொருட்கள் வாங்கும் போது பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். ஒரு சில நிறு­வ­னங்கள், ‘மொபைல் வாலெட்’ அல்­லது வங்கி கணக்­கிற்கும் பணத்தை மாற்­று­கின்­றன. இந்த வகை கேஷ்பேக், கூடுதல் பய­னுள்­ள­தாக அமையும்.

விலை ஒப்­பீடு:
அதே போல இணை­யத்தில் ஷாப்பிங் செய்­வ­தற்கு முன், பொருட்­களின் விலையை ஒப்­பிட்டு பார்க்க உதவும் இணை­ய­த­ளங்­களும் பல இருக்­கின்­றன. ‘பிரைஸ்­தேகோ.காம், கம்­பேர்­ராஜா.இன், மைஸ்­மார்ட்­பிரஸ்.காம், ஸ்மார்ட்­பிரிக்ஸ்.காம்’ உள்­ளிட்ட இணை­ய­த­ளங்கள் இந்த ஒப்­பீட்டை வழங்­கு­கின்­றன. பல்­வேறு இ – காமர்ஸ் தளங்­களில், குறிப்­பிட்ட பொருளின் விலையை ஒன்­றாக காண்­பித்து, அவற்றை ஒப்­பிட்டு தேர்வு செய்ய வழி செய்­கின்­றன. கிரெடிட் கார்டு அல்­லது டெபிட் கார்டு சலுகை இருக்­கி­றதா என்­ப­தையும் இவை சுட்டிக் காட்­டு­கின்­றன. இவை கூடுதல் சேவை­க­ளையும் வழங்கத் துவங்­கி­யுள்­ளன. பொருட்­களின் விலை போக்­கையும் இவற்றில் காணலாம்.

கூப்­பன்கள் சலுகை:
விலை ஒப்­பீடு சேவை இணை­ய ­த­ளங்கள் போலவே, கூப்­பன்­களை வழங்கும் இணை­ய­ த­ளங்­களும் இருக்­கின்­றன. இ– காமர்ஸ் நிறு­வ­னங்கள் அளிக்கும் சலுகை கூப்­பன்­களை இவை வழங்­கு­கின்­றன. ‘கூப்­பன்­ராஜா.இன், கூப்­பன்­டு­னியா.இன்’ போன்ற தளங்கள், இந்த வகை சலு­கை­களை வழங்­கு­ கின்­றன. வாடிக்­கை­யா­ளர்கள் வாங்க விரும்பும் பொருட்­களுக்­கான கூப்­பன்கள் இருக்­கின்­ற­னவா என கண்­ட­றிந்து பயன்­படுத்திக் கொள்­ளலாம்.இணைய நிறு­வ­னங்கள் தங்கள் செய­லிகள் மூலம் சிறப்பு சலு­கை­களை வழங்கி வரு­வ­தையும் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். எனினும். தள்­ளு­ப­டிக்­காக மட்டும் பொருட்­களை வாங்­கு­வதை தவிர்க்க வேண்டும். வாங்க திட்­ட­மிட்­டுள்ள பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்­கி­றதா? என பார்ப்­பது புத்­தி­சா­லித்­த­ன­மாக இருக்கும்.

ஷாப்பிங் குறிப்­புகள்:
* பட்­ஜெட்டை தீர்­மா­னித்து விட்டு ஷாப்­பிங்கை திட்­ட­மி­டவும்* தேவை­யான பொரு­ளுக்கு சலுகை இருக்­கி­றதா என தேடவும்* தேவைகள் மற்றும் விருப்­பங்­க­ளுக்கு இடை­யி­லான வேறு­பாட்டை புரிந்து கொள்­ளவும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)