நமது நாளைய லாபத்தை இன்றே தாரை வார்க்­க­லாமா?நமது நாளைய லாபத்தை இன்றே தாரை வார்க்­க­லாமா? ... புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முதல் மூன்று இடங்­க­ளுக்­கான போட்டி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2017
00:38

பார்தி ஏர்­டெல் நிறு­வ­னம், டாடா டெலி­சர்­வீ­சஸ் நிறு­வ­னத்­தின் தொலைத்­தொ­டர்பு பிரி­வைக் கைய­கப்­ப­டுத்த ஒப்­புக்­கொண்­டது, மிக முக்­கிய முன்­னேற்­ற­மாக கரு­தப்­ப­டு­கிறது. இந்­திய தொலைத்­தொ­டர்­புத் துறை­யில் ஏற்­பட்­டு­ வ­ரும் ஒருங்­கி­ணைப்­பா­க­வும், இத­னால், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஏரா­ள­மான பலன்­கள் கிடைக்­கும் என்­றும் நம்­பப்­ப­டு­கிறது. இந்த நம்­பிக்கை உண்­மையா?

முகேஷ் அம்­பா­னி­யின் ‘ஜியோ’ சேவை அறி­மு­க­மா­க­வில்லை எனில், இத்­த­கைய ஒருங்­கி­ணைப்­புக்­கான தேவையே எழுந்­தி­ருக்­காது என்ற உண்­மையை ஏற்­க­வேண்­டும். வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் கவர்ந்­தி­ழுக்­கும் பல்­வேறு அதி­வேக சேவை­களை இல­வ­ச­மா­கவே வழங்­கி­ய­தன் மூலம், மற்ற தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­கள் லேசாக ஆட்­டம் கண்­டன.
யார் ‘கிங்’:
‘ஜியோ’வினால் மற்ற தொலைத்­தொ­டர்பு சேவை­யா­ளர்­க­ளுக்கு ஏற்­பட்ட முக்­கிய பிரச்னை, சேவை­க­ளுக்­கான கட்­ட­ணங்­களை உயர்த்த முடி­ய­வில்லை என்­ப­து­தான். இன்­றைக்கு தொலை­ப் பேசி அழைப்­பு­க­ளைப் போலவே, ‘டேட்டா’ எனப்­படும் இணை­யச் சேவை மிக­ முக்­கி­ய­மான தொழில். ‘டேட்டா’வில் ­தான் வரு­வாய் அதி­கம். இங்­கே ­தான் ரிலை­யன்ஸ் ‘ஜியோ’ கட்­டை­யைப் போட்­டது.வாழ்­நாள் முழுக்க அழைப்­பு­கள் இல­வ­சம் என்­ப­தோடு, அதி­வேக இணை­யத்தை முதல் மூன்று மாதங்­கள் இல­வ­ச­மா­கவே வழங்க (அது ஜூன் 2017 வரை நீட்­டிக்­கப்­பட்­டது), சந்தை படுத்­து­விட்­டது. விளைவு, போட்டி நிறு­வ­னங்­கள் திண்­டா­டத் துவங்­கி­விட்­டன.

இந்த நிலை­யில் தான், ‘ஐடியா’ நிறு­வ­ன­மும் ‘வோட­போன்’ நிறு­வ­ன­மும் கைகோக்க முன்­வந்­தன. அனில் அம்­பா­னி­யின், ‘ஆர்­காம்’ நிறு­வ­னம், ‘ஏர்­செல்’ நிறு­வ­னத்­தைக் கைய­கப்ப­டுத்த முனைந்­தது. ஆனால், அது பின் கைவி­டப்­பட்­டது. ஏற்­க­னவே ஏர்­டெல் நிறு­வ­னம் ‘டெலி­நார்’ நிறு­வ­னத்­தை­யும் ‘டிகோனா’வின் 4ஜி பிரி­வை­யும் தன்­னு­டன் இணைத்­துக்­கொண்­டது. வலு­வுள்­ள­வனே வாழ்­வான் என்ற கருத்­துக்கு ஏற்ப, ஒவ்­வொரு நிறு­வ­ன­மும் முட்­டி­ மோ­து­கின்றன. கட்­ட­ணப் போட்­டி­யில் தாக்­குப்­பி­டிக்க முடி­யா­மல், பல சின்ன நிறு­வ­னங்­கள் ஏற்­க­னவே கடையை மூடிக்­கொண்டு கிளம்­பி­ விட்­டன, அல்­லது பெரு­நி­று­வ­னங்­க­ளோடு ஐக்­கி­ய­மா­கி­ விட்­டன.

இப்­போ­தைய ஒருங்­கி­ணைப்­பு­களின் இறு­தி­யில், ஏர்­டெல், ஐடியா – வோட­போன், ஜியோ ஆகி­யவை மட்­டுமே சந்­தை­யில் முதல் மூன்று நிலை­களில் நிலைத்து நிற்­கும் என தெரி­கிறது.இத்­த­கைய ஒருங்­கி­ணைப்பை, பங்­கு­ வர்த்­தக ஆய்­வா­ளர்­களும் தொழில்­துறை நிபு­ணர்­களும் வர­வேற்­கின்­ற­னர். தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னப் பங்­கு­களின் விலை உய­ரும், லாபம் பெரு­கும் என்­பது இவர்க­ளது கணிப்பு. ஆனால், வேறு கேள்­வி­கள் எழா­மல் இல்லை. இத­னால், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு என்ன பலன்... அர­சுக்கு என்ன பலன்?

ஒரு துறை­யில் பல போட்­டி­யா­ளர்­கள் இருந்­தால் ­தான், வாடிக்­கை­யா­ள­ருக்­குத் தர­மான சேவை கிடைக்­கும். ஒருங்­கி­ணைப்பு ஏற்­ப­டும்­போது, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான வாய்ப்பு குறைந்து போகும். பிடிக்­கி­றதோ பிடிக்­க­வில்­லையோ, ஒரு சில குறிப்­பிட்ட சேவை தரு­ப­வர்­க­ளி­டமே அடை­பட்­டுக் கிடக்­க­வேண்­டிய நிலை ஏற்­படும்.சில நிறு­வ­னங்­கள் தனித்­து­வ­மான சேவை­களை, வச­தி­களை ஏற்­க­னவே வழங்­கிக்­கொண்­டி­ருக்­க­லாம். ஒருங்­கி­ணைப்பு ஏற்­ப­டும் ­போது, இத்­த­கைய தனித்­து­வச் சேவை­கள் அனைத்­தும் நிறுத்­தப்­பட்டு, அனை­வ­ருக்­கும் பொது­வான வழக்­க­மான சேவை­களே வழங்­கப்­படும். இத­னா­லும் வாடிக்­கை­யா­ள­ரின் திருப்தி பாதிக்­கப்­படும்.

நிறு­வ­னங்­கள் பெரி­தா­கும் ­போது ஏற்­படும் இன்­னொரு பிரச்னை, வாடிக்­கை­யா­ளர் சேவை­யின் தரம். அப்­போது வாடிக்­கை­யா­ளர்­கள் வெறும் எண்­ணிக்­கை­யா­கச் சுருங்­கிப் போவர். அவர்­களை மனி­தர்­க­ளாக மதிக்­கும் போக்கு மாறி­வி­டும். அக்­க­றை­யும் கவ­ன­மும் குறைந்­து­ போ­கும். புதிய தொழில்­நுட்­பங்­கள் அறி­மு­க­மா­கும் ­போதோ, மேம்­பா­டு­கள் செய்­யப்­ப­டும் ­போதோ, அவற்­றுக்­கான கட்­ட­ணங்­கள் அதி­க­மாக இருக்க வாய்ப்­புண்டு. தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­கள் பன்­ம­டங்கு வளர்ந்­து­வி­டும் என்­ப­தால், அன்­றைக்கு புதிய போட்டி நிறு­வ­னங்­கள் தோன்றி, புதிய சேவை­களை வழங்­கு­வ­தற்கு செய்­ய­ வேண்­டியமுயற்­சி­யும் முத­லீ­டும் முனைப்­பும் பன்­ம­டங்கு அதி­க­மாக இருக்­கும்.

வேலை­யி­ழப்­பு:
இப்­போதே யோசித்­துப் பாருங்­கள். முகேஷ் அம்­பானி போன்ற பெரு முத­லீட்­டா­ளர் ஒரு­வ­ரால்­ தான், இங்கே ஒரு குலுக்கு குலுக்க முடிந்­தது. ஜூலை 2017க்குள் 12.9 கோடி வாடிக்­கை­யா­ளர்­க­ளைப் பெற முடிந்­த­தென்­றால், அதற்கு அவர் செய்­தி­ருக்­கும் முத­லீடு 29 பில்­லி­யன் டாலர்­கள் (1.87 லட்­சம் கோடி ரூபாய்). ஒருங்­கி­ணைப்பு ஏற்­ப­டுத்­தும் உட­னடி பாதிப்­பு­களில் ஒன்று, வேலை­யி­ழப்பு. இத்­து­றை­யில் பணி­யாற்­றும் சுமார் 30 ஆயி­ரம் முதல், 1.5 லட்­சம் பேர் வரை, நேர­டி­யாக வேலை இழக்­க­லாம் என்­பது ஒரு கணிப்பு. மறை­முக வேலை­யி­ழப்­பு­க­ளுக்­குக் கணக்கே இல்லை.

ஊன்­று­கோல்:
தொலை­த்தொ­டர்பு நிறு­வ­னங்­கள், அலைக்­கற்றை வாங்­கிய போது, அதற்­கான தொகையை முன்பு பத்­தாண்­டு­க­ளுக்­குள் அர­சுக்­குச் செலுத்த வேண்­டும் என்ற உச்­ச­வ­ரம்பு இருந்­தது. இப்­போது அதை, 16 ஆண்­டு­க­ளுக்கு நீட்­டித்து வழங்க, அமைச்­சர்­கள் குழு ஒப்­புக்­கொண்­டுள்­ளது. இந்­நி­று­வ­னங்­கள் மேல் விதிக்­கப்­பட்ட அப­ரா­தங்­கள் மீதான வட்­டி­யும் குறைக்­கப்­பட்­டு உள்­ளது மற்­றொரு சலுகை. வாராக்­க­டன் பிரச்­னைக்­குப்பின், வங்­கி­கள், இந்­நி­று­வ­னங்­களின் திட்­டங்­க­ளுக்கு நிதி­யு­தவி அளிக்­கத் தயங்­கு­கின்றன.

தொலைத்­தொ­ட­புத் துறை­யின் மொத்த கடன் பாக்கி, 4.6 லட்­சம் கோடி ரூபாய். இந்­நி­லை­யில், அரசு தனியே ஒரு நிதி­யத்தை ஏற்­ப­டுத்தி, நிதி­யுதவி அளிக்க வேண்­டும் என்ற கோரிக்கை வலுப்­பெ­று­கிறது. அர­சு இதற்­கும் செவி­சாய்க்க வாய்ப்­புண்டு. அதோடு, வரு­டாந்­திர லைசென்ஸ் கட்­ட­ணம், அலைக்­கற்­றை­யைப் பயன்­ப­டுத்­தும் கட்­ட­ணம் ஆகி­ய­வற்­றை­யும் குறைக்க வேண்­டும் என்­பது இவர்­க­ளது கோரிக்கை. ஒரு­வ­கை­யில், அர­சின் வலு­வான ஆத­ர­வி­னால்­தான், இந்த நிறு­வ­னங்­கள் தலை­நி­மிர்ந்து நிற்­கின்றன. வேறு வகை­யில் சொல்­வ­தென்­றால், மக்­களின் வரிப்­ப­ணம் ­தான் இவர்­க­ளைத் தாங்­கிப் பிடிக்­கும் ஊன்­று­கோல்.
இவ்­வ­ள­வை­யும் செய்­யும் அர­சின், தன் சொந்த நிறு­வ­னங்­க­ளான பி.எஸ்.என்.எல்., – எம்.டி.என்.எல்., ஆகி­ய­வற்­றுக்கு என்ன செய்­துள்­ளது... அது ஏன் இந்த முதல் மூன்று இடங்­க­ளுக்­கான போட்­டி­யில் இடம்­பெற முயற்சி செய்­ய­ வில்லை... என்ற கேள்வி எழா­மல் இல்லை. பதில் தான் தெரி­ய­வில்லை.
-ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)