பிரேசில் ஆலையில் 900 பேர் நீக்கம்; ரேணுகா சுகர்ஸ் நிறுவனம் அதிரடிபிரேசில் ஆலையில் 900 பேர் நீக்கம்; ரேணுகா சுகர்ஸ் நிறுவனம் அதிரடி ... மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ...
பிரிட்டன் பவுண்டு மதிப்பு வீழ்ச்சி; சரியுமா சர்வதேச பொருளாதாரம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2017
23:51

ஜூன் மாதத்­தோடு முடிந்த காலாண்­டில், நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 5.7 சத­வீ­தத்தை தொட்­டது என்று சொன்­ன­வு­டன், நம் பொரு­ளா­தார வல்­லு­னர்­கள், எப்­படி பத­றி­னரோ, அப்­ப­டிப்­பட்ட ஒரு பதற்­றம், பிரிட்­ட­னில் ஏற்­பட்­டு உள்­ளது. அங்கே, அந்­நாட்டு நாண­ய­மான, பவுண்டு ஸ்டெர்­லிங், படிப்­ப­டி­யாக வலு­வி­ழந்து வரு­வதே, இதற்கு முக்­கிய கார­ணம்.

என்ன நடக்­கிறது பிரிட்­ட­னில்?
முத­லில், செப்­டம்­ப­ரில் என்ன நடந்­தது என, பார்த்து விடு­வோம். நான்கு ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு, ஆக., மாதத்­தோடு ஒப்­பி­டும் போது, செப்­டம்­ப­ரில், பிரிட்­ட­னின் சில்­லரை வணி­கம், 0.8 சத­வீ­தம் சரிந்­துள்­ளது. இதற்கு முக்­கிய கார­ணம், பண­வீக்­கம். அதற்கு முக்­கி­ய­மாக பங்­க­ளித்­துள்­ளது, பவுண்டு ஸ்டெர்­லிங்­கின் மதிப்பு வீழ்ச்சி. மக்­களின் வாங்­கும் சக்தி, படிப்­ப­டி­யாக குறைந்­துள்­ளது. மக்­கள், பல பொருட்­களை உட­ன­டி­யாக வாங்­கா­மல், தள்­ளிப் போடு­கின்­ற­னர் அல்­லது பொருட்­களின் விலை­யேற்­றத்­தால், அவர்­க­ளால் வாங்க முடி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது. இவை இரண்­டுமே நல்­ல­தில்லை. எங்கோ கோளாறு ஏற்­பட்­டுள்­ளது என்­பதே, இதற்கு அர்த்­தம்.

சில்­லரை வணிக வீழ்ச்­சி­யில், அதி­கம் பாதிப்­ப­டைந்­தது, சூப்­பர் மார்­கெட்­டு­களும், உண­வுப் பொருட்­கள் விற்­பனை செய்­யும் சந்­தை­களும், பெட்­ரோல், ‘பங்க்’குகளும் தான். கம்ப்­யூட்­டர் கேம்­கள், மொபைல் போன்­கள் மற்­றும் மடிக்­க­ணி­னி­களின் விற்­பனை அள­வும், செப்­டம்­ப­ரில் சரிந்­துள்ளன.அந்­நாட்­டின் பண­வீக்­கம், 3 சத­வீத அளவை தொட்­டுள்­ளது. ஐந்து ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு, பண­வீக்­கம் அதி­க­ரித்­துள்­ளது, கவ­லையை ஏற்­ப­டுத்தி உள்­ளது. சில்­லரை வணி­கத்­தில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்­சி­யும், பண­வீக்­க­மும், ஏன் இவ்­வ­ளவு துாரம் அதிர்ச்சி அலை­களை ஏற்­ப­டுத்த வேண்­டும்?

முத­லில், பிரிட்­ட­னின் வர்த்­தக பாங்கை புரிந்து கொள்ள வேண்­டும். அந்­நாட்­டின் மொத்த வரு­வா­யில், தொழிற்­சா­லை­களின் பங்கு, வெறும், 10 சத­வீ­தம் தான். சேவை துறை­யின் பங்­க­ளிப்பு, 80 சத­வீ­தம். அந்­நாட்­டில் விற்­ப­னை­யா­கும் பெரும்­பா­லான பொருட்­கள், வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­பவை. அவற்­றின் விற்­பனை அதி­க­ரித்­தால் தான், பொரு­ளா­தா­ரம் உய­ரும். இந்­நி­லை­யில், சில்­லரை விற்­ப­னை­யில் ஏற்­பட்­டுள்ள சரிவு, பொரு­ளா­தா­ரத்­துக்கு ஏற்­பட்­டு உள்ள பெரும் பின்­ன­டைவு.

ஏன் இந்த பின்­ன­டைவு ஏற்­பட வேண்­டும்?
அதற்கு பவுண்டு ஸ்டெர்­லிங்­கின் வீழ்ச்சி, முக்­கி­ய­மான கார­ணம். 2016 ஜூனில், பிரிட்­டன், ‘பிரெக்­சிட்’ முடிவை எடுத்­தது. அதா­வது, ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் இருந்து, பிரிட்­டன் தனியே பிரிந்­து­வி­ட­லாம் என்­பதை, பொது ஓட்­டெ­டுப்­பின் மூலம், அந்­நாட்டு மக்­கள் உறுதி செய்­த­னர். இப்­போது, பிரிட்­டன் பிர­த­ம­ராக இருக்­கும், தெரசா மே, இந்த பிரி­யும் முடிவை செயல்­ப­டுத்த முனைந்து வரு­கி­றார். அதில் எண்­ணற்ற சிக்­கல்­கள், உடன்­பா­டு­கள், குறை­கள், ஏற்ற இறக்­கங்­க­ளைச் சந்­தித்து வரு­கி­றார்.

இத்­த­கைய தடு­மாற்­ற­மான சூழ­லில், பவுண்டு ஸ்டெர்­லிங் தொடர்ந்து அடி­வாங்கி வரு­கிறது. சில்­லரை விற்­பனை சரிவு விப­ரம் வெளி­யா­ன­வு­டன், ஒரு யூரோ­வுக்கு இணை­யான பவுண்­டின் மதிப்பு, மேலும் சரிந்து போனது. ஒரு யூரோவை வாங்­கு­வ­தற்கு, 89.90 பென்ஸ் போதும். அதே போல், அமெ­ரிக்க டால­ருக்கு இணை­யா­க­வும், பவுண்­டின் விலை அரை சத­வீ­தம் குறைந்­தது.

‘பிரெக்­சிட்’ பொது ஓட்­டெ­டுப்­புக்கு முந்­தைய நிலை­யோடு ஒப்­பி­டும் போது, யூரோ­வுக்கு இணை­யான பவுண்­டின் மதிப்பு, 14 சத­வீ­தம்; அமெ­ரிக்க டால­ருக்கு இணை­யான பவுண்­டின் மதிப்பு, 10 சத­வீ­தம் குறைந்­துள்­ளது. இதை­யெல்­லாம் விட முக்­கி­யம், பிரிட்­ட­னில் வாழ்­ப­வர்­களின் வாழ்க்கை நிலை, செல்வ நிலை படிப்­ப­டி­யாக குறைந்து வரு­வது, அந்­நாட்டு மக்­க­ளுக்கு கவலை அளிக்­கிறது. அவர்­க­ளு­டைய வரு­வாய் குறைவு; விலை­வா­சியோ அதி­கம். இந்­நி­லை­யில், இங்­கி­லாந்து மத்­திய வங்கி, ‘வட்டி விகி­தங்­களில் மாற்­றம் கொண்டு வர வேண்­டிய தேவை ஏற்­ப­ட­லாம்’ என, தெரி­வித்­தி­ருக்­கிறது.

அதா­வது, வங்­கி­யின் வட்டி விகி­தம் கூட்­டப்­ப­ட­லாம் என்­பது செய்தி. இப்­படி செய்­தால், தொழிற்­க­டன்­களின் வட்டி விகி­த­மும், இதர கடன்­களின் வட்டி விகி­தங்­களும் உயர்ந்­து­வி­டும். அத­னா­லும், அங்கே பாதிப்­பு­கள் தொட­ரும் வாய்ப்­புண்டு. இதெல்­லா­வற்­றுக்­கும் அடிப்­படை கார­ண­மாக இருப்­பது, ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் இருந்து வில­கும் முடிவு தானே? அதை, ஏன் மீண்­டும் மறு­ப­ரி­சீ­லனை செய்­யக் கூடாது என்ற கருத்­தும், பிரிட்­ட­னில் முன்­வைக்­கப்­ப­டு­கிறது. வரும், 2019க்குள், பிரிட்­டன், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் இருந்து, முழு­மை­யாக பிரிய வேண்­டும். அதற்­குள், உலக பொரு­ளா­தா­ரத்தில், ஒரு பூகம்­பத்தை கிளப்பி விடா­மல் இருக்க வேண்­டும்.

பரவுமா?
பவுண்­டின் மதிப்பு சரிவு என்­பது, பண­வீக்­கம், வரு­வாய் பெருக்­க­மின்மை, சில்­லரை வர்த்­த­கத்­தில் உயர்­வின்மை என, சக­ல­வி­த­மான இடர்­க­ளுக்­கும், ஆதி­யும், அந்­த­மு­மாக இருக்­கிறது. அதன் பாதிப்­பு­கள், பிரிட்­ட­னில் மட்­டும் இருக்க போவ­தில்லை. அது, பிற நாடு­க­ளுக்­கும் பர­வக்­கூ­டிய தொற்­று­நோய். இத­னால், மொத்த ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லும், பொரு­ளா­தார தேக்­க­நிலை ஏற்­பட்டு விட­லாமோ என்ற கேள்­வி­யும் எழுப்­பப்­ப­டு­கிறது.

பவுண்டு மதிப்பு சரிவால் சாதகம்:
* பிரிட்­டன் வரும் சுற்­றுலா பய­ணி­ய­ருக்கு, கொஞ்­சம் செலவு குறை­யும்* பிரிட்­ட­னில் முத­லீடு செய்­துள்ள வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, கொஞ்­சம் சிர­மம் குறை­யும்* பிரிட்­ட­னில் கல்வி பயி­லும் மாண­வர்­களின் செல­வு­கள் குறை­யும்* வெளி­நா­டு­களில், குறிப்­பாக, அமெ­ரிக்­கா­வில் முத­லீடு செய்­துள்ள பிரிட்­டிஷ் நிறு­வ­னங்­கள், கூடு­தல் லாபம் பார்க்­கும்.

பாதகம்:
* பிரிட்­ட­னுக்கு ஏற்­று­மதி செய்­யும், இந்­தியா உள்­ளிட்ட நாடு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் பாதிப்­ப­டை­யும். ஏனெ­னில், அவர்­க­ளு­டைய சரக்­குக்கு கிடைக்­கும் வரு­வாய் குறைந்து போகும். நாணய மாற்று மதிப்பு குறைந்து போவ­தால், லாபம் குறை­யும்* பிரிட்­ட­னில் இருந்து, அமெ­ரிக்க, ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு சுற்­றுலா செல்­வோர், கூடு­த­லாக செலவு செய்ய வேண்­டும்* பிரிட்­ட­னில் உள்ள, வெளி­நாட்டு பணி­யா­ளர்­களின் வரு­வா­யும், அதன் நாணய மாற்று மதிப்­பும் குறைந்து போவ­தால், அந்­நாட்­டில் வேலை செய்­வது, அவ்­வ­ளவு கவர்ச்­சி­க­ர­மாக இராது.
– ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)