பங்குச் சந்தை நிலவரம்பங்குச் சந்தை நிலவரம் ... முதலீட்டாளர்கள் முழு கவனம் செலுத்த வேண்டிய தருணம் முதலீட்டாளர்கள் முழு கவனம் செலுத்த வேண்டிய தருணம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2017
00:07

கச்சா எண்ணெய்
கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம் ஆரம்­பத்­தில் உயர்ந்து, வார இறு­தி­யில் சரி­வைக் கண்­டது. அதற்கு முந்­தைய வாரம் சிறிது விலை ஏற்­றம் காணப்­பட்­டது. இருப்­பி­னும் விலை உயர்வு கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது. அமெ­ரிக்­கா­வின் கச்சா எண்­ணெய் உற்­பத்தி அதி­க­ரித்து வரு­வ­தால், அதன் விலை­யில் தாக்­கம் ஏற்­பட்­டுள்­ளது.

மறு­பக்­கம், 'ஒபெக்' நாடு­கள் ஒன்­றி­ணைந்து கச்சா எண்­ணெய் உற்­பத்­தியை குறைக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ளன. இத­னால், பொதுச் சந்­தை­யில் கச்சா எண்­ணெய்க்கு தட்­டுப்­பாடு ஏற்­பட்டு, அதன் விலை அதி­க­ரிக்­கும் என்ற எதிர்­பார்ப்­பில், உற்­பத்­தி­யில், தின­சரி, 1.78 மில்­லி­யன் பேரல்­கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன. இதைத் தொடர்ந்து, 'ஒபெக்' நாடு­க­ளின் ஒட்டு­மொத்த கச்சா எண்­ணெய் ஏற்­று­மதி குறைந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், சர்­வ­தேச கச்சா எண்­ணெய் உற்­பத்தி மற்­றும் தேவை குறித்து, 'ஒபெக்' மற்­றும் அதன் கூட்­ட­மைப்பு நாடு­க­ளின் எண்­ணெய் துறை அமைச்­சர்­க­ளின் கூட்­டம், நவ., 30ல் நடை­பெற உள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில், அமெ­ரிக்­கா­வின் கச்சா எண்­ணெய் அதி­க­ரிப்­பால் ஏற்­பட்­டுள்ள தாக்­கம், சர்­வ­தேச தேவைப்­பாடு உள்­ளிட்ட அம்­சங்­களை ஆராய்ந்து, உற்­பத்தி குறைப்பு குறித்து முடி­வெ­டுக்­கப்­படும் என, தெரி­கிறது. வரும் நாட்­களில், ஒரு பேரல் கச்சா எண்­ணெய் விலை 53 டால­ராக இருக்­கும். இதை கடக்­கும் நிலை­யில், அதன் விலை, 55.50 டாலர் வரை உய­ரும். இதன் தாங்கு விலை, 49.50 டால­ராக இருக்­கும்.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,325 3,290 3,360 3,428என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., (டாலர்) 50.80 49.50 52.50 55.00

தங்கம், வெள்ளி
தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­கள் கடந்த வாரம் சரி­வில் முடிந்­துள்­ளன. தொடர்ந்து, 8 மாதங்­க­ளாக தங்­கம் விலை அதி­க­ரித்து வந்த நிலை­யில், செப்டம்பரில் அதன் விலை வீழ்ச்­சி­ய­டைந்­தது. மேலை நாடு­க­ளின் பொரு­ளா­தா­ரக் கொள்­கை­கள், ரிசர்வ் வங்­கி­க­ளின் நிதிக் கொள்­கை­கள் ஆகி­யவை, பொது­வா­கவே தங்­கம் விலை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்.

தங்­கத்­தின் விலையை நிர்­ண­யிப்­ப­தில், ஆப­ர­ணங்­க­ளுக்­கான தேவைப்­பாட்டை விட, முத­லீ­டு­க­ளுக்­கான தேவையே முக்­கிய பங்கு வகிக்­கிறது.ஆனால், வெள்ளி விலையை பொறுத்­த­வரை, முத­லீட்டு நோக்­கத்தை விட, நுகர்­விற்­கான தேவையே அதன் விலையை நிர்­ண­யிக்­கிறது. இருப்­பி­னும் இவ்­விரு கனி­மங்­களும் ஒரு­மித்த நிலை­யில் வர்த்­த­க­மா­கின்­றன.

சில சந்­தர்­பங்­களில் விலை மீதான மாற்­றம் வித்­தி­யா­ச­ம­டை­கின்­றது. கடந்த வாரம், பிரிட்­டன் மற்­றும் ஐரோப்­பிய நாடு­க­ளின் மத்­திய வங்­கி­கள் கூட்­டம் நடை­பெற்­றது. இதில், தாராள நிதிக் கொள்­கையை மேற்­கொள்ள முடிவு செய்­யப்­பட்­டது. இந்த நட­வ­டிக்­கை­யால், அரசு கரு­வூ­லம் மற்­றும் கடன் பத்­திரங்­கள் மீதான முத­லீட்டு ஆதா­யம் கூடும் என்று எதிர்­பார்ப்பு எழுந்­தது. இதன் தாக்­கம், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை சரி­வில் எதி­ரொ­லித்­தது. அதே­ச­ம­யம், அமெ­ரிக்க நாண­யக் குறி­யீடு ஆன 'டாலர் இன்­டெக்ஸ்' 1.8 சத­வீ­தம் வீழ்ச்­சி­ய­டைந்­தது.

அமெ­ரிக்க அதி­ப­ரின் புதிய கொள்­கை­க­ளால் எழுந்­துள்ள சர்ச்சை ; பிற நாடு­க­ளின் கரன்சி மதிப்பு அதி­க­ரிப்பு ஆகி­யவை இதற்கு கார­ண­மா­கும். இச்­சூ­ழல், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை வீழ்ச்­சியை கட்டுப்படுத்­தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த வாரம் தங்­கம் சப்­போர்ட் விலை 1,260 டால­ரா­கும்.

தங்கம்
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 29,510 29,350 29,800 30,100காம்எக்ஸ் (டாலர்) 1,269 1,260 1,285 1,292

வெள்ளி
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 39,600 39,210 40,050 40,580காம்எக்ஸ் (டாலர்) 16.65 16.20 17.20 17.55

செம்பு
செம்பு விலை கடந்த வாரம் உயர்ந்து மூன்று ஆண்டு உச்­சத்­தில் வர்த்­த­க­மா­னது. உல­க­ள­வில், செம்­பு­வின் தேவை உயர்ந்து வரு­கிறது.

சீனா, அதிக அள­வில் செம்பை இறக்­கு­மதி செய்து வரு­கிறது. அதே­ச­ம­யம், சுரங்­கங்­களில் செம்பு உற்­பத்தி குறை­வாக உள்­ளது. இதன் கார­ண­மாக, செம்பு விலை அதி­க­ரித்­துள்­ளது. எல்.எம்.இ., உல­க­ள­வில் அதி­க­மான அள­வில் கனி­மங்­கள் வியா­பா­ரம் நடை­பெறும் எக்­சேஞ்ச் ஆகும். இதில், 1 டன் செம்பு விலை, பல நாட்­க­ளுக்கு பிறகு, 7000 டாலர் என்ற நிலையை எட்­டி­யது

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 441.50 446.00 457.80 462.22

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)