முதலீட்டாளர்கள் முழு கவனம் செலுத்த வேண்டிய தருணம்முதலீட்டாளர்கள் முழு கவனம் செலுத்த வேண்டிய தருணம் ... 10,150 புள்ளிகளை கடந்து உயர்வுடன் துவங்கியது நிப்டி 10,150 புள்ளிகளை கடந்து உயர்வுடன் துவங்கியது நிப்டி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வேலைவாய்ப்புகளுக்கு புதிய அணுகுமுறை தேவை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2017
00:08

சில நாட்­க­ளாக வெளி­வ­ரும் வேலை­வாய்ப்­பு­கள் பற்­றிய செய்­தி­கள், மீண்­டும் கவ­னத்­தைக் கவருகின்றன. தேசிய ஜன­நா­யக கூட்­டணி தலை­மை­யி­லான மூன்­றாண்­டு­கள் ஆட்சி நிறைவு பெற்­ற­போது, போது­மான வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை என்ற விமர்­ச­னத்தை எதிர்க்­கட்­சி­கள் கடு­மை­யாக முன்­வைத்­தன. அர­சி­யல் பழி­சு­மத்­தல்­கள் அடங்­கிய பிறகு, இப்­போது நிதா­ன­மாக இதன் உண்­மைத் தன்­மை­யைப் புரிந்­து­கொள்ள முயற்சி செய்­ய­லாம்.

இந்­தி­யா­வில், 50 கோடி பேர் வேலை செய்­கின்­ற­னர். இதில், 22 கோடி பேர் விவ­சா­யத் துறை­யில் இருக்­கின்­ற­னர். இந்­தத் துறை­யில் புதிய வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­வ­தற்­கான வாய்ப்பு இல்லை. விவ­சா­யம் அல்­லாத பிற துறை­களில், ஒவ்­வொரு ஆண்டும் ஒரு கோடி பேர் வேலைச் சந்­தைக்கு வரு­கின்­ற­னர். இவர்­க­ளுக்­குத்­தான் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கித் தர வேண்­டிய சூழல் இருக்­கிறது.

இது­வும் தோரா­ய­மான கணக்­கு­தான். இந்­தி­யா­வில் உண்­மை­யில் வேலை­வாய்ப்பு இல்­லா­மல் இருப்­ப­வர்­கள் பற்­றிய கணக்கு தெளி­வில்­லா­மல் இருக்­கிறது. ஒரு­வி­ஷ­யம் மட்­டும் தெளிவு. முறை­சாரா தொழில்­களில் பணி­யாற்­று­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை மட்­டும் மிக அதி­கம். மொத்த வேலை­வாய்ப்­பில் அது, 80 சத­வீ­தம் வரை இருக்­க­லாம் என்­பது மற்­றொரு தோரா­ய­மான கணக்கு.

வழிமுறைகள்:
இந்­தச் சூழ்­நி­லை­யில், பிர­த­ம­ரின் பொரு­ளா­தார ஆலோ­ச­னைக் குழு­வின் முதல் கூட்­டம் நடை­பெற்­றது. அதில், முறை­சாரா மற்­றும் முறை­யான பொரு­ளா­தா­ரத்தை இணைப்­ப­தற்­கான வழி­மு­றை­கள் உரு­வாக்­கப்­படும் என்­றும் அதன்­மூ­லம், வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தற்­கான நடை­மு­றை­கள் வகுக்­கப்­படும் என, தெரி­வித்­தது அக்­குழு. இதே­போல், பிர­த­ம­ரின் தலை­மைப் பொரு­ளா­தார ஆலோ­ச­க­ரான அர­விந்த் சுப்­பி­ர­ம­ணி­ய­மும் இந்த திசை­யில் இன்­னொரு முனை­யில் வேலை­ செய்­கி­றார்.

நமது பொரு­ளா­தா­ரத்­தைப் பாதிக்­கும் முக்­கி­ய­மான பிரச்­னை­கள் என்­னென்ன, அவற்­றைத் தீர்ப்­ப­தற்­கான வழி­மு­றை­கள் என்­னென்ன என்­ப­தைப் பற்­றிய அறிக்கையை அர­விந்த் உரு­வாக்கி வரு­கி­றார். நிதி அமைச்­சர் அருண் ஜெட்லி, வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வதே இந்த அர­சின் முன்­னு­ரிமை என்­பதை சமீ­பத்­தில் வெளிப்­ப­டை­யாக ஒப்­புக்­கொண்­டார். ஆக, அனை­வர் கவ­னத்­தை­யும் வேலை­வாய்ப்பு உரு­வாக்­கம் என்ற சிந்­த­னையே ஆக்­கி­ர­மித்­துள்­ளது என்­பது நல்­ல­தொரு முன்­னேற்­றம்.

சரி, என்ன செய்ய வேண்டும்?
முத­லில், நமது தொழில், வர்த்­தக கொள்­கையை மாற்­றி­ய­மைக்க வேண்­டும். தாரா­ள­ம­யக் கொள்­கை­யைப் பின்­பற்­றத் துவங்­கிய 1990களில் உரு­வாக்­கப்­பட்ட அணு­கு­மு­றை­யோடு இப்­போது இந்­திய தொழில்­கள் செயல்­பட முடி­யாது. பல்­வேறு நாடு­களில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­களை ஒட்­டியே நமது அணு­கு­முறை மாற வேண்­டும்.இந்­தி­யா­வில், புதிய தொழில், வர்த்­தக கொள்கை வகுப்­ப­தற்­கான முயற்­சி­கள் எடுக்­கப்­ப­டு­வது நம் கவ­னத்தை ஈர்க்­கிறது. இதில் தனி­யார் நிறு­வ­னங்­கள் இங்கே லாப­க­ர­மான தொழில் செய்ய முடி­யும், எந்தவி­த­மான இடர்­களும் இருக்­காது, தலை­யீ­டு­களும் இருக்­காது என்­ப­தற்­கான உறுதி வழங்­கப்­பட வேண்­டும்.

தொடர்ச்­சி­யாக அர­சின் சட்ட திட்­டங்­கள், வரி விதிப்பு முறை­கள் மாறு­தல் அடை­யு­மா­னால், அத­னால், தொழில்­க­ளின் வளர்ச்சி தேங்­கிப் போகவே செய்­யும்.இரண்­டா­வது, ஏரா­ள­மான வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் முக்­கிய தொழில்­க­ளுக்கு அர­சாங்­கத்­தின் கடைக்­கண் பார்வை தேவை. உதா­ர­ண­மாக, ஆயத்த ஆடை தயா­ரிப்பு, தோல் ஆடை­கள் தயா­ரிப்பு, மரச்­சா­மான்­கள் உற்­பத்தி, ஆப­ர­ணங்­கள் தயா­ரிப்பு ஆகிய துறை­க­ளுக்­குத் தனிக்­க­வ­னம் கொடுக்­கப்­பட வேண்­டும். அந்­தத் தொழில்­க­ளுக்­குத் தேவைப்­படும் இடு­பொ­ருட்­க­ளுக்கு மானி­யம், தேவை­யான சலு­கை­கள் ஆகி­யவை அளிக்­கப்­பட்­டால், இந்­தத் துறை­கள் சற்றே தலை­நி­மி­ரும். அத­னால், வேலை­வாய்ப்­பு­கள் அங்கே பெரு­கும்.

புதிய சந்தைகள்:
மூன்­றா­வது, நாடெங்­கும் இருக்­கும் பல்­வேறு சின்­னச் சின்ன தொழில் நக­ரங்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிப்­பது. இந்­தி­யா­வில் 1,350 சிறு தொழில் நக­ரங்­கள் இருக்­கின்­றன. அதே­போல், கைத்­தறி, கைவி­னைப் பொருள்­கள், அபூர்­வ­மான கலைப்­பொ­ருள்­கள் தயா­ரிக்­கும் சுமார் 4,000 மையங்­கள் இருக்­கின்­றன. இவை, நம் கவ­னத்தை அதி­கம் ஈர்ப்­ப­தில்லை. ஆனால், இங்­கே­தான் ஏரா­ள­மா­னோர் வேலை­வாய்ப்பு பெறு­கின்­ற­னர். இவர்­க­ளுக்கு புதிய சந்­தை­களை ஏற்­ப­டுத்­தித் தரு­வ­தன் மூலம், வேலை­வாய்ப்­பு­களை உயர்த்த முடி­யும்.

நான்­கா­வது, பெரும் வேலை­வாய்ப்­பு­களை இன்­றைய தேதி­யில் உரு­வாக்­கு­வது கட்­டு­மா­னத் துறை­தான். வங்­கி­களில் தனி­ந­பர் கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தங்­க­ளைக் குறைப்­ப­தன் மூலம், மத்­திய வர்க்­கத்­தி­னர் புதிய வீடு­களை வாங்­கு­வ­தற்கு முன்­வ­ரு­வர். அதன் மூலம், அடுக்­க­கங்­கள் தேவை அதி­க­ரிக்­கும். இதன் விளை­வாக, வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கும்.அர­சாங்க வேலை­வாய்ப்­பு­களை உயர்த்­து­வது இன்­னொரு பெரிய முன்­னேற்­ற­மாக இருக்­கும். ரயில்வே துறை ஏற்­கெ­னவே இந்த விஷ­யத்­தில் முந்­திக்­கொண்­டி­ருக்­கிறது. அதே­போல், காவல்­துறை, நீதித் துறை, வரு­வாய்த் துறை ஆகி­ய­வற்­றில் ஏரா­ள­மான நபர்­க­ளின் தேவை இருக்­கிறது.

நமது மக்­கள் தொகை­யின் அள­வுக்கு ஏற்ப போது­மான காவ­லர்­களோ, நீதி­மன்­றப் பணி­யா­ளர்­களோ, மருத்­து­வர்­களோ, ஆசி­ரி­யர்­களோ இல்லை என்­பதை பல ஆய்­வு­கள் எடுத்து வைக்­கின்­றன. மத்­திய, மாநில அர­சு­கள், இத்­து­றை­களில் நிரப்­பப்­ப­டாத காலி­யி­டங்­களை நிரப்­பி­னாலே, நன்கு படித்­து­விட்டு வேலை­யில்­லா­மல் இருப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை குறை­யக்­கூ­டும்.

தொழிலாளர் சட்டங்கள்:
தனி­யார் துறை­யி­னர் முன்­வைக்­கும் மற்­றொரு முக்­கிய பிரச்னை, இந்­தி­யா­வின் தொழி­லா­ளர் சட்­டங்­கள். அதில் தேவை­யான இடங்­களில் தளர்வு செய்­யப்­ப­டு­மா­னால், பல தொழி­ல­கங்­கள் முன்­னேற வாய்ப்­புள்­ளது. வழக்­க­மான துறை­களில் வேலை­வாய்ப்­பு­களை உயர்த்­து­வ­தோடு, புதிய துறை­களில் கவ­னம் செலுத்­து­வ­தும் அவ­சி­யம். உதா­ர­ண­மாக, இந்­தி­யா­வின் பண்­பாட்டு வளம், ஏரா­ள­மான சுற்­றுலா பய­ணி­களை இங்கே ஈர்க்­கிறது. அதே­போல், மற்ற நாடு­க­ளோடு ஒப்­பி­டும்­போது இங்கே உயர் கல்வி கற்­ப­தற்­கான செலவு குறைவு. மருத்­துவ வச­தி­களும் அதற்­கான செல­வும் இங்கே குறைவு.

இந்­நி­லை­யில், சுற்­று­லா­வை­யும், உயர் கல்­விக் கூடங்­க­ளையும், மருத்துவ சுற்றுலாவையும் மையப்­ப­டுத்­து­வோ­மா­னால், அடுத்த பத்­தாண்­டு­க­ளுக்கு நமக்­குத் தேவை­யான வேலை­வாய்ப்­பு­கள் கிடைத்­து­வி­டும் என்றே நம்­ப­லாம்.
– ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)