பதிவு செய்த நாள்
19 நவ2017
07:01
ட்டரி’யால் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதற்கு புகழ் பெற்ற, ‘டெஸ்லா’ நிறுவனம், வர்த்தக வாகன உற்பத்தியில் கால் பதித்துள்ளது. அது, ‘செமி’ எனும், சரக்கு வாகனத்தை தயாரித்துள்ளது. இது, டீசலால் இயங்கும் லாரியை விட, சிறப்பாக இயங்கக் கூடியது என, மார்தட்டும் டெஸ்லா, 10 லட்சம், கி.மீ., துாரம் பழுதாகாமல் ஓடும் என, உறுதியாக கூறியுள்ளது. அதாவது, பூமியை, 40 முறை சுற்றி வந்தாலும் பழுதாகாதாம். இந்த லாரியுடன் டிரெய்லர் இணைக்கப்படாவிட்டால், புறப்பட்ட, 5 வினாடியிலும், 36 டன் சரக்குடன் கூடிய டிரைலரை இணைத்தால், 20 வினாடியிலும், 96 கி.மீ., வேகத்தை எட்டும்.இந்த வாகனத்தில் உள்ள, ‘மெகா சார்ஜரை’ அரை மணி நேரம் சார்ஜ் செய்தால் கூட, 600 கி.மீ., துாரம் வரை நிற்காமல் இயங்குமாம். இதில், ‘கிளட்ச்’ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில், பல தானியங்கி வசதிகள் உள்ளன. வெகு விரைவில், ‘செமி’ சந்தைக்கு வரவிருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|