‘பீம்’ செயலி மூல­மான  பரி­வர்த்­தனை உயர்வு‘பீம்’ செயலி மூல­மான பரி­வர்த்­தனை உயர்வு ... சிறந்த முடி­வு­களை எடுக்கும் வழி! சிறந்த முடி­வு­களை எடுக்கும் வழி! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அவ­சர கால நிதியை எப்­படி முத­லீடு செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2017
01:30

எதிர்­பா­ராத நெருக்­க­டி­களை எதிர்­கொள்ள உதவும், அவ­சர கால நிதியை உரு­வாக்கி கொள்­வ­தோடு, அந்த நிதியை, சரி­யான முறையில் முத­லீடு செய்­வதும் முக்­கியம்.

நிதி திட்­ட­மி­டலில் இலக்கு, முத­லீடு பற்றி எல்லாம் பேசப்­படும் போது, ‘எமர்­ஜன்ஸி பண்டு’ எனக் குறிப்­பி­டப்­படும், அவ­சர கால நிதி பற்­றியும் தவ­றாமல் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. ஒருவர், தனக்­கான முத­லீட்டு உத்­தியை வகுக்கும் முன், இந்த வகை நிதியை உரு­வாக்கி கொள்­வது அவ­சியம் என்றும், நிதி திட்­ட­மிடல் ஆலோ­ச­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர். எதிர்­பா­ராமல் ஏற்­ப­டக்­கூ­டிய நெருக்­க­டி­யான சூழலில், குடும்­பத்தின் அடிப்­படை செலவை சமா­ளிக்க கூடிய நிதியை, கைவசம் வைத்­தி­ருப்­பதை தான், அவ­சர கால நிதி என்­கின்­றனர். மழைக் காலத்­திற்­கான சேமிப்பு என்றும், இதை புரிந்து கொள்­ளலாம். பணி இழப்பு, விபத்து அல்­லது மருத்­துவ பாதிப்பு உள்­ளிட்ட கார­ணங்­களால், ஏற்­ப­டக்­கூ­டிய நெருக்­க­டியை சமா­ளிக்க, இந்த நிதி கைகொ­டுக்கும்.

எவ்­வ­ளவு நிதி?அவ­சர கால நிதி­யாக, 3 – 6 மாத கால அடிப்­படை செல­வுக்­கான தொகை, கையில் இருக்க வேண்டும். அடிப்­படை செலவு என்­பது, மளிகை, மாதத் தவணை உள்­ளிட்ட, தவிர்க்க இய­லாத செல­வு­களை உள்­ள­டக்­கி­யது. இந்த நிதிக்­கான தொகையை தீர்­மா­னிக்கும் போது, ஒருவர் தன் சூழ­லுக்கு ஏற்ப செயல்­பட வேண்டும். இரு வரு­மானம் கொண்ட குடும்பம் எனில், 3 மாத அடிப்­படை செல­வுக்­கான தொகை கூட, போது­மா­ன­தாக இருக்­கலாம். ஒரு ­நபர் மட்டும் சம்­பா­திக்கும் குடும்பம் எனில், ஆறு மாத தொகை அவ­சியம்.

அதே நேரத்தில், வய­தான பெற்­றோரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இருந்தால், ஓராண்­டுக்­கான தொகையை சேர்த்து வைத்­தி­ருப்­பதும் சரி­யாக அமையும். ஏற்ற முத­லீடுஅவ­சர கால முத­லீட்­டிற்­கான தொகையை தீர்­மா­னித்து, அதை உரு­வாக்கி கொண்ட பின், இரு விஷ­யங்­களை மனதில் கொள்ள வேண்டும். ஒன்று, எக்­கா­ரணம் கொண்டும், அத்­தொ­கையை வேறு தேவைக்­காக எடுத்து செல­விடக் கூடாது என்­பதில், கவ­ன­மாக இருக்க வேண்டும்.

இரண்­டா­வது, இந்த நிதியை பொருத்­த­மான வழி­களில் முத­லீடு செய்­வதும் அவ­சியம். அவ­சர கால நிதி என்­பது, எதிர்­பாரா சூழ­லுக்­காக எடுத்து வைப்­ப­தாகும். அத்­த­கைய ஒரு சூழல் வரா­மலே போகலாம். எனவே, அந்த நிதியை முத­லீடு செய்து வைத்­தி­ருந்தால், அதன் மீதான பலனை பெறலாம். அதோடு தேவை­யில்­லாமல், அந்த நிதியில் கை வைப்­ப­தையும் தவிர்க்­கலாம். அவ­சர கால நிதியை முத­லீடு செய்யும் போது, கவ­ன­மாக இருக்க வேண்டும். அதிக, ‘ரிஸ்க்’ தரும் முத­லீ­டு­களை நாடக் கூடாது. அவ­சர தேவை ஏற்­படும் போது, பணத்தை உட­ன­டி­யாக எடுக்கக் கூடிய சாத்­தியம் இருக்க வேண்டும்.

எனவே, இத்­த­கைய முத­லீடு வாய்ப்­பு­க­ளையே நாட வேண்டும். இதில், முத­லீட்டின் மீதான பலனை விட, உட­ன­டி­யாக எடுக்கும் தன்­மையே முக்­கியம்.சேமிப்பு கணக்குவழக்­க­மாக, பலரும், அவ­சர தேவைக்­கான தொகையை, வங்கி சேமிப்பு கணக்கில் வைத்­தி­ருப்­பது வழக்கம். கையில் ரொக்­க­மாக வைத்­தி­ருப்­பதை விட, இது ஏற்­றது தான். ஆனால், சேமிப்பு கணக்­கிற்கு கிடைக்கும் வட்டி குறைவு என்­பதை, மனதில் கொள்ள வேண்டும். எனவே, சேமிப்பு கணக்கை விட, குறு­கிய கால முத­லீடு வாய்ப்­பு­க­ளான, ‘லிக்விட் பண்டு அல்­லது ஷார்ட் டெர்ம் பண்டு’ போன்ற, மியூச்­சுவல் பண்டு திட்­டங்­களில் முத­லீடு செய்­யலாம் என, கரு­தப்­ப­டு­கி­றது.

லிக்விட் பண்­டுகள், மிகவும் ஏற்­ற­தாக நிதி ஆலோ­ச­கர்­களால் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது. சேமிப்பு கணக்கை விட அதிக பலன் தரு­வ­தோடு, தேவை எனில், 24 மணி நேரத்தில், இவற்றை பண­மாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்­ளது.

சேமிப்பு கணக்கில் வைக்­கப்­படும் தொகையில் கிடைக்கும் வட்டி வரு­மா­னத்­திற்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை, வரி கிடை­யாது என்­ப­தையும் பரி­சீ­லிக்க வேண்டும். ஐந்து ஆண்டு கால வைப்பு நிதி­க­ளிலும், முத­லீடு செய்­யலாம். தேவை எனில், வைப்பு நிதியை உடைத்து எடுத்துக் கொள்­ளலாம். அதனால், பெரிய அளவில் இழப்பு இருக்­காது. சேமிப்பு கணக்­குடன் இணைந்த வைப்பு நிதி வச­தி­யையும் நாடலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)