‘மூடிஸ்’ நிறுவனம் ஆய்வறிக்கை வாகன சொத்து சார்ந்த கடன் பத்திரங்கள் இந்தியாவில் இழப்பு விகிதம் குறைவு‘மூடிஸ்’ நிறுவனம் ஆய்வறிக்கை வாகன சொத்து சார்ந்த கடன் பத்திரங்கள் ... ... சந்­தைக்கு உண்டு சாதிக்­கும் வலிமை சந்­தைக்கு உண்டு சாதிக்­கும் வலிமை ...
ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்த காத்­தி­ருக்­கும் சந்தை மாற்­றங்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2017
03:51

சற்­றும் எதிர்­பா­ராத நேரத்­தில் வந்த இன்ப அதிர்ச்­சி­யான செய்தி, ‘மூடீஸ்’ நிறு­வ­னம், இந்­தி­யா­விற்கு அளித்த தர மதிப்­பீட்­டிற்­கான உயர்வு!பல ஆண்­டு­க­ளாக இந்­திய அரசு தன்­னிலை விளக்­கங்­க­ளை­யும், உயர்­வுக்­கான வாதங்­க­ளை­யும் தொடர்ந்து, ‘மூடீஸ்’ நிறு­வ­னத்­தின் முன் நிறுத்­தி­யும், சற்­றும் நிலை மாற்­றம் ஏற்­ப­டாத சூழ­லில், இப்­போது வந்­தி­ருக்­கும் இந்த நற்­செய்தி, பலரையும் ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்தி உள்­ளது.அர­சி­யல்­ரீ­தி­யா­கவே, இந்த பொரு­ளா­தார அள­வீட்டை பார்க்­கி­ன்றனர். இந்த உயர்வு எத­னால் அமைந்­தது என்ற கேள்வி எழா­ம­லில்லை. இந்­நி­லை­யில், ‘மூடீஸ்’ வெளி­யிட்ட விளக்க அறிக்கை சொல்­லும் தெளி­வான கார­ணம் மிக முக்­கி­ய­மா­னது.பொரு­ளா­தாரம் மற்­றும் நிறு­வன சீர்­தி­ருத்­தங்­களில் தெரி­யும் தொடர் முன்­னேற்­றம், வருங்­கால வளர்ச்­சிக்கு வழி­வ­குக்­கும் என்று நம்­பு­வ­தா­க­வும், வருங்­கால வளர்ச்சி பெருக்­கம் ஏற்­பட தேவை­யான சூழல் அமைக்­கப்­ப­டு­வ­தா­க­வும் ‘மூடீஸ்’ அறிக்கை தெளி­வு­ப­டுத்­து­கிறது.மத்­திய அர­சின் கடன்­களும் ஸ்தி­ரப்­ப­டுத்­தப்­பட்டு, வரும் ஆண்­டு­களில் கடன் சுமை குறை­யும் என்று எதிர்­பார்க்­கும், ‘மூடீஸ்’, இதற்கு முக்­கிய கார­ண­மாக, தற்­போது நடை­பெ­றும் பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தங்­களை சுட்­டிக்­காட்­டு­கிறது.வருங்­கால போட்டி சூழ­லுக்கு, இந்­தியா தன்னை நன்கு தயார்­ப­டுத்­தி வரு­வ­தா­க­வும், மாநி­லங்­க­ளுக்கு இட­யி­லான வர்த்­த­கம் சீராகி வரு­வ­தா­க­வும், ஆய்வு குறிப்பு சொல்­கிறது. ஆனால், இதன் வெளிப்­பாடு வளர்ச்­சி­யில் தெரிய சில­கா­லம் ஆகும் என, ‘மூடீஸ்’ குறிப்பு விளக்­கு­கிறது.அதே­ச­ம­யம், ஜி.எஸ்.டி.,அம­லில் காணப்­படும் சிக்­கல்­கள், தனி­யார் முத­லீட்­டில் நில­வும் தேக்­கம், பொதுத்­துறை வங்கி வாராக்­க­டன் பிரச்னை தீர்­வில் தெரி­யும் மித­மான முன்­னேற்­றம் ஆகி­யவை கூர்ந்து கவ­னிக்­கப்­பட வேண்­டு­மென, ‘மூடீஸ்’ கரு­து­கிறது.நிக­ழும் சீர்­தி­ருத்­தங்­கள் நாட்­டின் மதிப்பை உலக அரங்­கில் உயர்த்­தும் என்ற புரி­தல் மக்­க­ளுக்கு ஏற்­பட இந்த தர மதிப்­பீட்டு உயர்வு பெரி­தும் உத­வும்.வளர்ச்சி எங்கே குறைந்­து­வி­டுமோ என்ற அச்ச உணர்வு மக்­கள் மன­தில் உரு­வெ­டுக்­கா­மல், எதிர்­கா­லம் வளர்ச்சி சார்ந்த நம்­பிக்­கை­யூட்­டும் வண்­ணம் இந்த உயர்வு அமை­யும். பொரு­ளா­தார சீர்த்­தி­ருத்­தங்­களை வேகப்­ப­டுத்த, தேவை­யான அர­சி­யல் முத­லீடு இந்த அறி­விப்பு மூலம் அர­சுக்கு கிடைக்­கிறது.ஏற்­க­னவே உயர்­நி­லை­யில் இருக்­கும் இந்­திய பங்­குச் சந்தை, இந்த அறி­விப்பை எப்­படி பார்க்­கும்?இதற்கு முன் வந்த இந்­த­கைய உயர்­வு­களை சந்தை கொண்­டாடி, சில நாட்­கள் உயர்ந்­தா­லும், அதன்­பின் சரிந்­தன என்­பதே வர­லாறு. ஆனால், பண­வ­ரத்து அதி­க­மாக இருக்­கும் இச்­சூ­ழ­லில், சந்தை சரிவு காண, பன்­னாட்டு சந்தை நிகழ்­வு­கள் மட்­டுமே கார­ண­மாக அமை­யும். அதை முன்­கூட்­டியே கணிக்க இய­லாது.ஆகவே, முத­லீட்­டா­ளர்­கள் தங்­கள் தேர்­வு­களை பெரு­நி­று­வ­னங்­கள் சார்ந்­தும், உள்­கட்­ட­மைப்பு, விவ­சா­யம், நுகர்வு மற்­றும் ஏற்­று­மதி துறை­கள் சார்ந்­தும் அமைத்­துக் கொள்ள வேண்­டும்.வரும் காலாண்­டு­களில், பெரு­வா­ரி­யாக நம் முத­லீ­டு­களை மாற்றி அமைக்க வேண்­டி­வ­ரும். அதற்கு நம்மை தயார்­ப­டுத்­தி, முடி­வு­களை நிதா­ன­மாக அமல்­ப­டுத்த வேண்­டும்.சந்­தை­யில் சிறு மற்­றும் குறு­நி­று­வ­னங்­கள் சார்ந்து இருக்­கும் பிற­ரது முத­லீ­டு­கள் பெரு­நி­று­வ­னங்­கள் நோக்கி நகர்­வ­தற்கு முன்பே நாம் அத்­த­கைய முடி­வு­களை எடுக்க வேண்­டும்.சந்தை மாற்­றங்­கள் எப்­போ­துமே நம்மை ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்த காத்­தி­ருக்­கும். அத்­த­கைய மாற்­றங்­களை கடக்­க­வும், சாத­க­மாக மாறிக்­கொள்­ள­வும் தேவை­யான முன்­னேற்­பாடு நட­வ­டிக்­கை­களை இப்­போதே எடுக்க வேண்­டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)