கொள்ளை லாப வியாபாரம்: பொதுமக்கள் புகார் கூறலாம்கொள்ளை லாப வியாபாரம்: பொதுமக்கள் புகார் கூறலாம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு ...
இந்தியாவில் களமிறங்க தயங்கும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2017
23:55

புதுடில்லி : இந்­தி­யா­வில், வெளி­நாட்டு சட்ட நிறு­வ­னங்­களை அனு­ம­திப்­பது குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லிக்­கிறது. 2018 ஜன­வ­ரி­யில், இது குறித்த அறி­விப்பு வெளி­யா­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அவ்­வாறு அனு­மதி வழங்­கப்­பட்­டால் கூட, மத்­திய அரசு எதிர்­பார்ப்­பது போல, அதி­க­ள­வில், வெளி­நாட்டு சட்ட நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் கிளை­களை துவக்­காது என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

பிரிட்­ட­னைச் சேர்ந்த, ஆர்.எஸ்.ஜி., கன்­சல்ட்­டிங் நிறு­வ­னம், இந்­திய சட்ட நிறு­வ­னங்­களின் தர­வ­ரிசை பட்­டி­யலை, இரு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை வெளி­யி­டு­கிறது. பெரும்­பா­லான வழக்­க­றி­ஞர்­கள், இந்த பட்­டி­ய­லின் அடிப்­ப­டை­யில், சட்ட நிறு­வ­னங்­களை தேர்வு செய்­கின்­ற­னர். இந்த வகை­யில், விரை­வில் வெளி­யாக உள்ள, ஆர்.எஸ்.ஜி., கன்­சல்ட்­டிங் நிறு­வ­னத்­தின் ஆய்­வ­றிக்­கை­யின் சாராம்­சம், தற்­போது வெளி­யாகி உள்­ளது.

அதன் விப­ரம்: இந்­தி­யா­வில், ஜி.எஸ்.டி., நிறு­வன திவால் சட்­டம், ரியல் எஸ்­டேட் சட்­டம் போன்ற சீர்­தி­ருத்த திட்­டங்­களின் அறி­மு­கம் கார­ண­மாக, சட்ட சேவை­க­ளுக்­கான தேவை அதி­க­ரிக்­கும். அதன்­படி, இந்­திய சட்ட சேவை­கள் சந்தை மதிப்பு, 130 கோடி டாலர், அதா­வது, 8,400 கோடி ரூபா­யாக உயர வாய்ப்பு உள்­ளது.இதில், 50 சத­வீ­தத்­திற்கு சற்று அதி­க­மான அள­விற்கே, இந்­திய சட்ட ஆலோ­சனை நிறு­வ­னங்­களின் பங்கு இருக்­கும். எஞ்­சிய பங்கை, இந்­தி­யா­வில் கிளை­களை திறக்க முடி­யா­மல், அதே சம­யம், சட்ட ஆலோ­ச­னை­களை மட்­டும் வழங்கி வரும், வெளி­நாட்டு சட்ட நிறு­வ­னங்­கள் கைப்­பற்­றும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்­கான சட்ட சேவை­களின் மூலம், இத்­த­கைய பங்­க­ளிப்பை, வெளி­நாட்டு சட்ட ஆலோ­சனை நிறு­வ­னங்­கள் பெறும். பொது சட்ட சேவைக்­காக, இந்­திய வழக்­க­றி­ஞர்­கள் பெறு­வதை விட, வெளி­நாட்டு வழக்­க­றி­ஞர்­கள் அதிக கட்­ட­ணம் பெறு­கின்­ற­னர். சட்ட சேவை­யில் ஈடு­படும் முன்­னணி நிறு­வ­னங்­கள், ஒரு வழக்­கில் வாதாட, ஒரு மூத்த வழக்­க­றி­ஞ­ருக்கு, ஒரு மணி நேரத்­திற்கு, சரா­ச­ரி­யாக, 992 டாலர் வழங்­கு­கின்றன. இது, இள­நிலை வழக்­க­றி­ஞ­ருக்கு, 615 டாலர் என்ற அள­வில் உள்­ளது. இதில், சில நிறு­வ­னங்­கள் தள்­ளு­படி வழங்­கி­னா­லும், முன்­ன­ணி­யில் உள்ள, ஆறு நிறு­வ­னங்­களில், ஏ.இசட்.பி., மற்­றும் டிரை­லீ­கல் நிறு­வ­னங்­கள், தள்­ளு­படி வழங்­கு­வ­தில்லை. ஒரு­சில நிறு­வ­னங்­கள், ஒரு வழக்கை முடிக்க, குறிப்­பிட்ட தொகையை வசூ­லிக்­கின்றன.

இத்­த­கைய சூழ­லில், இந்­தி­யா­வில், வெளி­நாட்டு சட்ட சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­னா­லும், இங்கு கிளை­கள் அமைத்து, லாப­மீட்ட சாத்­தி­ய­மில்லை. எனவே, இந்­தி­யா­வில் கள­மி­றங்க ஆர்­வ­மில்லை என, ஆய்­வில் பங்­கேற்ற, வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்த, 75 சத­வீத சட்ட சேவை நிறு­வ­னங்­கள் தெரி­வித்து உள்ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

சர்வதேச வழக்குகள்:
இந்­திய வழக்­க­றி­ஞர்­கள் சட்­டத்­தில், வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் சட்ட சேவை வழங்க முடி­யாது. சர்­வ­தேச வழக்­கு­கள் தொடர்­பாக, வெளி­நாட்டு வழக்­க­றி­ஞர்­கள் சட்ட ஆலோ­சனை வழங்க, சென்னை உயர் நீதி­மன்­றம் அனு­மதி அளித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)