பயணியர் வாகன விற்பனை 2.75 லட்சமாக அதிகரிப்புபயணியர் வாகன விற்பனை 2.75 லட்சமாக அதிகரிப்பு ... மாருதி சுசூகி நிறுவனம் கார் விற்பனை உயர்வு மாருதி சுசூகி நிறுவனம் கார் விற்பனை உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘ஆட்டோ எக்ஸ்போ’ வாகன கண்காட்சி: வலைதள பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2017
00:53

புதுடில்லி:டில்­லி­யில், ‘ஆட்டோ எக்ஸ்போ’ வாகன கண்­காட்­சி­யில் பங்­கேற்­ப­தற்­காக, வலை­த­ளத்­தில் பதிவு செய்­யும் வசதி, நேற்று துவங்­கி­யது.
இது குறித்து, இக்­கண்­காட்­சியை நடத்­தும், இந்­திய வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பின் துணை இயக்­கு­னர்,
ஜென­ரல் சுகடோ சென் கூறி­ய­தா­வது:டில்­லி­யில், 2018 பிப்., 9 – 14 வரை, ‘ஆட்டோ எக்ஸ்போ’ வாகன கண்­காட்சி நடை­பெ­று­கிறது. இதில் பங்­கேற்க, bookmyshow.comல் பதிவு செய்­ய­லாம். இக்­கண்காட்­சி­யில், வாகன துறைக்­கான புதிய தொழில்­நுட்ப கண்­டு­பி­டிப்­பு­க­ளுக்கு, முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­படும்.
குறிப்­பாக, மின் வாக­னங்­கள், சுற்­றுச்­சூ­ழ­லுக்கு பாது­காப்­பான எரி­பொ­ருட்­கள், வாக­னங்­களில் நவீன பொழு­து­போக்கு வச­தி­கள், சொகுசு பய­ணத்­திற்கு உத­வும் செயற்கை நுண்­ண­றிவு சாத­னங்­கள் போன்­ற­வற்றை காண­லாம்.பார்­வை­யா­ளர்­கள், வாகன துறை­யில் உள்ள நவீன வச­தி­க­ளை­யும், எதிர்­கா­லத்­தில் அறி­மு­க­மாக உள்ள, புதிய கண்­டு­பி­டிப்­பு­க­ளை­யும், ஒருங்கே காண்­ப­தற்­கான வாய்ப்பை பெற­லாம்.சிறப்பு பிரி­வில், இந்­திய வாகன துறை­யின், 70 ஆண்டு கால வர­லாற்றை குறிக்­கும் அரங்­கும் இடம் பெற உள்­ளது.
கடந்த ஆண்டு, ஐந்து நாட்­கள் நடந்த இக்­கண்­காட்­சி­யில், 6 லட்­சம் பார்­வை­யா­ளர்­கள் பங்­கேற்­ற­னர். இதன் மூலம், உல­க­ள­வில், ஒரு நாளைக்கு அதி­க­பட்ச பார்­வை­யா­ளர்­கள் வருகை தந்த கண்­காட்சி என்ற சிறப்பு கிடைத்­துள்­ளது.
இந்த ஊக்­கம் கார­ண­மாக, அடுத்த ஆண்டு கண்­காட்சி, ஆறு நாட்­கள் நடை­பெற உள்­ளது. இதன் மூலம், பார்­வை­யா­ளர்­கள் வரு­கை­யில், புதிய உலக சாதனை படைப்­போம் என, நம்­பு­கி­றோம்.இக்­கண்­காட்­சி­யில், பாரம்­ப­ரிய வாகன நிறு­வ­னங்­க­ளு­டன், புதி­தாக, தென் கொரி­யா­வின், கியா மோட்­டார்ஸ், ஜப்­பா­னின், கவாஸ்கி உள்­ளிட்ட நிறு­வ­னங்­களும் பங்­கேற்க உள்ளன.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)