ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள் ... கமாடிட்டி சந்தை நிலவரம் கமாடிட்டி சந்தை நிலவரம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2017
00:09

தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, நிப்டி, கடந்த வாரம், 30 புள்­ளி­கள் அதி­கரித்து, 10 ஆயிரத்து, 333 என்ற அள­வில், வியா­பா­ரம் முடிவுற்றது. நவம்­ப­ரில், சந்தை சரி­வில் இருந்­தது. பின், இம்­மா­தம் ஏற்­றத்தை சந்­தித்­தது. சர்­வ­தேச சந்­தை­கள், தொடர்ந்து வர­லாற்று உச்சம் கண்டு வரும் சூழ­லில், அதன் எதி­ரொலி, நம் சந்­தை­யி­லும் காணப்­பட்­டது. அத­னால், நம் சந்தை வீழ்ச்சி கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது.

இந்த வாரம், குஜ­ராத், ஹிமாச்­சல பிர­தேசம் ஆகிய மாநி­லங்­களின் தேர்­தல் முடி­வு­கள் வர உள்ளன. குஜ­ராத்­தில், ஆளுங்­கட்­சி­யான, பா.ஜ., 125 இடங்­க­ளுக்கு மேல் வெற்றி பெறும் எனில், பங்­குச் சந்­தைக்கு, அது மிக சாத­க­மாக அமை­யும். இது, மீண்­டும் ஒரு வர­லாற்று உச்­சத்­துக்கு வழி­வ­குக்­கும். அதே சம­யம், கருத்­துக் கணிப்­பு­களை ஒட்டி, 105 – 116 இடங்­களில் மட்­டும் வெற்றி எனும்­பட்­சத்­தில், அது, சந்­தை­யில் பெரி­தாக சாத­க­மான சூழலை உரு­வாக்­காது. மேலும், வர­வி­ருக்­கும் லோக் சபா தேர்­த­லில், பா.ஜ., நிலை­யி­லும் மாற்றங்களை ஏற்­ப­டுத்­தும்.

லோக்சபா தேர்தல், 2019ல் நடை­பெற இருப்­ப­தால், 2018ல், மத்­திய அரசு புதிய கொள்­கை­க­ளை­யும், பொரு­ளா­தார முன்­னேற்ற திட்­டங்­க­ளை­யும் அறி­விக்­கும் என்ற எதிர்­பார்ப்பு, சந்­தை­யில் உள்­ளது.கடந்த, 2016 நவம்­ப­ரில், பண மதிப்பு நீக்க அறி­விப்­புக்கு பின் நடை­பெற்ற, உ.பி., தேர்­தலில் பெற்ற வெற்­றியை தொடர்ந்து, ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­துக்கு பின், குஜ­ராத்­தி­லும் வெற்றி கிடைத்­தால், ஆளுங்­கட்­சிக்கு ஆத­ரவு பெரு­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பொது­வா­கவே, பங்­குச் சந்­தை­யின் போக்கில் அர­சி­யல் முடி­வு­கள், நிலைத்­தன்மை, ஏற்­று­மதி – இறக்­கு­மதி கொள்­கை­கள், பண­வீக்­கம், பொரு­ளா­தா­ரம் மற்­றும் தொழில் வளர்ச்சி உள்­ளிட்ட, பல கார­ணி­கள் தாக்­கத்தை ஏற்­படுத்­தும்.

குஜ­ராத்­தில், தேர்­த­லில் கணிப்­பு­க­ளுக்கு எதி­ராக, ஏதே­னும் நிக­ழும் நிலை­யில், சந்­தை­யில் சரிவு நேர வாய்ப்பு உள்­ளது. சரா­ச­ரிக்கு குறை­வாக அதா­வது, 92 அல்­லது அதற்கு கீழே கிடைக்­கும்­பட்­சத்­தில், அது சந்­தைக்கு பாத­க­மாக அமை­யும். இந்த வாரத்தை பொறுத்­த­வரை, 10,490 முதல் இலக்­கா­கும். அதை கடந்­தால், 10,650 ஆகும். சப்­போர்ட், 10,100 மற்­றும், 10,020 ஆகும்.

கவ­னிக்க வேண்­டிய பங்­குகள்மிர்ஸா இன்­டர்­நே­ஷ­னல், எம்பி இந்­தியா, துவா­ர­கேஷ் சுகர், வொண்­டர்லா ,மாருதி

-முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)