இந்­தி­யா­வில் மச­ராட்டி குவாட்­ர­போர்ட்டே ஜி.டி.எஸ்.,இந்­தி­யா­வில் மச­ராட்டி குவாட்­ர­போர்ட்டே ஜி.டி.எஸ்., ... ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி பின் முன்னேற்றம் ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி பின் முன்னேற்றம் ...
அமெ­ரிக்க வட்டி உயர்வு நம்மை பாதிக்­குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2017
00:15

அமெ­ரிக்க மத்­திய வங்கி, அந்­நாட்­டில் நில­வும் வட்டி விகி­தத்தை, சமீ­பத்­தில் உயர்த்தி உள்­ளது. எல்­லா­ரும் எதிர்­பார்த்­தது தான் என்­றா­லும், அதன் பாதிப்பு சர்­வ­தேச அள­வில், குறிப்­பாக, இந்­திய சந்­தை­யில் எப்­படி இருக்­கும்? முத­லில், இதை பற்றி நாம் கவ­லைப்­பட வேண்­டுமா?

பொரு­ளா­தார முன்­னேற்­றம் :
கடந்த, 2008 பொரு­ளா­தார தேக்­கத்­துக்கு பின், அமெ­ரிக்கா படிப்­ப­டி­யாக மீண்டு வரு­கிறது. அங்கே, வேலை­வாய்ப்­பு­கள் உயர்ந்­துள்ளன; தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்­பாடு ஆகி­யவை பெருகி உள்ளன. இந்­நி­லை­யில், 2015 முதல், அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யான, பெட­ரல் ரிசர்வ், அந்­நாட்­டில் நில­வும் வட்டி விகி­தங்­களை உயர்த்தி வரு­கிறது. அவர்­க­ளு­டைய பொரு­ளா­தா­ரம், வலு­வ­டைந்து வரு­வ­தற்­கான அத்­தாட்­சியே இது.

மேலும், 2015 டிச., முதல், நான்கு முறை, கால் சத­வீத அள­வுக்கு, வட்டி விகி­தங்­கள் உயர்த்­தப்­பட்­டன. டிச., 13 அன்­றும், மற்­றொரு கால் சத­வீ­தம் உயர்த்­தப்­படும் அறி­விப்பு வெளி­யா­னது. தற்­ச­ம­யம், அங்கே வட்டி விகி­தம், 1.5 சத­வீத அள­வுக்கு உள்­ளது. அடுத்த ஆண்டு, இன்­னும் மூன்று முறை வட்டி விகி­தங்­கள் உயர்த்­தப்­ப­ட­லாம் என, எதிர்­பார்ப்­பும் எழுந்­துள்­ளது.

டொனால்டு டிரம்ப் ஆட்சி பொறுப்­பேற்ற பின், அமெ­ரிக்­கா­வின் பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்­றும் முனைப்­பில் ஈடு­பட்டு உள்­ள­தால், அடுத்த மூன்று ஆண்­டு­களில், அவர்­க­ளு­டைய மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 3 சத­வீ­தத்தை எட்ட வேண்­டும் என, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. தற்­ச­ம­யம் அது, 1.8 சத­வீ­த­மாக உள்­ளது.

5 கவ­லை­கள்:
அமெ­ரிக்கா வளர்ந்­தால் நல்லது தானே? நாம், ஏன் அதை பற்றி கவ­லைப்­பட வேண்­டும் என்­கி­றீர்­களா? பின்­வ­ரும் ஐந்து கார­ணங்­க­ளுக்­கா­கவே, கவ­லைப்­பட வேண்­டி இ­ருக்­கிறது.

1. இந்த ஆண்டு, அக்., மாதம் வரை, வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள், 31 ஆயிரத்து, 399 கோடி ரூபாயை, இந்­திய பங்­குச் சந்­தை­க­ளி­லும், 1.39 லட்­சம் கோடி ரூபாயை, கடன் பத்­தி­ரங்­க­ளி­லும் முத­லீடு செய்­தி­ருக்­கின்­ற­னர். அமெ­ரிக்­கா­வில், போது­மான வரு­வாய் இல்­லா­த­தால் தான், முத­லீட்­டா­ளர்­கள், நல்ல வளர்ச்சி தரும் இந்­தி­யச் சந்­தை­யில், முத­லீடு செய்ய முன்­வந்­த­னர். அமெ­ரிக்­கா­வி­லேயே வளர்ச்சி சாத்­தி­யம் எனும் போது, அவர்­கள் தங்­கள் முத­லீ­டு­களை திரும்ப எடுத்­துக் கொண்டு போவ­தற்­கான வாய்ப்பு அதி­கம்.

2. இத­னால், இந்­திய ரூபா­யின் மதிப்­பில் சரிவு ஏற்­ப­ட­லாம். அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான, இந்­திய ரூபா­யின் மதிப்பு, சமீ­ப­காலத்­தில் வலுப்­பெற்று வந்­தது; அந்த நிலை மாற­லாம். இத­னால், அமெ­ரிக்க கடன் பத்­தி­ரங்­கள் லாப­க­ர­மா­ன­தா­க­லாம். இது, நம் ரூபா­யின் மதிப்பு வீழ்ச்­சியை மேலும் அதி­கப்­ப­டுத்­தும்.

3. சர்­வ­தேச சந்­தை­களில், அமெ­ரிக்க டாலர்­களை கொடுத்தே, நாம் கச்சா எண்­ணெயை வாங்­கு­கி­றோம். இன்­னும் சொல்­லப் போனால், இந்­தி­யா­வின் கச்சா எண்­ணெய் தேவை­யில், 82.4 சத­வீ­தம் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கிறது.
இதற்­காக, இந்த நிதி­யாண்­டின் முதல் ஆறு மாதங்­களில், நாம் செய்­தி­ருக்­கும் செலவு, 2.4 லட்­சம் கோடி ரூபாய். இது, கடந்த ஆண்டு இதே காலத்­தில் செய்­யப்­பட்ட செலவை விட, 17 சத­வீ­தம் அதி­கம்.
சர்­வ­தேச எண்­ணெய் சந்­தை­களில், தொடர்ச்­சி­யாக கச்சா எண்­ணெ­யின் விலை உயர்ந்து வரு­வ­தால், நம் செல­வு­கள் கூடப்­போ­வது நிச்­ச­யம். இதில், டால­ரின் மதிப்­பும் உய­ரும் போது, டபுள் இடி நிச்­ச­யம்.

4. அமெ­ரிக்­கா­வி­லேயே வரு­வாய் பெரு­கும் போது, அன்­னிய முத­லீட்­டா­ளர்­கள், இந்­திய கடன் பத்­தி­ரங்­களில் செய்து வரும் முத­லீ­டு­களும் குறைந்து போகும். அவர்­கள் கையி­லி­ருக்­கும் பத்­தி­ரங்­களை விற்­கத் துவங்­கி­னால், கடன் சந்தை சரி­யும். இந்­தி­யா­வின், பத்­தாண்டு கடன் பத்­தி­ரங்­கள் ஈட்­டும் வரு­வாய் படிப்­ப­டி­யாக குறை­யும்.

5. தங்­கள் வளர்ச்­சிக்கு தேவை­யான நிதியை, தனி­யார் பெரு நிறு­வ­னங்­களும், வங்­கி­களும், வெளி­நா­டு­களில் இருந்து தான் கடன்­க­ளாக பெறு­கின்றன. இதற்கு, ‘அன்­னிய வணி­கக் கடன்’ (எக்ஸ்­டர்­னல் கமர்­ஷி­யல் பாரோ­யிங்) என, பெயர். டால­ரின் மதிப்பு உய­ரு­மென்­ப­தால், அன்­னிய வணி­கக் கடன்­களின் செலவு அதி­க­மா­கும். அது, அவர்­க­ளு­டைய நிகர லாபத்தை பதம் பார்த்து விடும்.

ருசி கண்ட பூனை­கள்:

இதெல்­லாம் சரி தான். நாம் உண்­மை­யி­லேயே, இதற்­காக கவ­லைப்­பட வேண்­டுமா? வேண்­டாம் என்ற வாத­மும் வைக்­கப்­ப­டு­கிறது. ஏனெ­னில், என்ன தான் அமெ­ரிக்­கச் சந்தை லாபம் ஈட்­டும் வகை­யில் முன்­னே­று­வ­தாக இருந்­தா­லும், இந்­தியா போன்ற வள­ரும் பொரு­ளா­தா­ரங்­கள் ஈட்­டித் தரும் வரு­வா­யோடு ஒப்­பி­டும் போது, அது மிகப்­பெ­ரி­யது அல்ல. அத­னால், வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள், அவ்­வ­ளவு சீக்­கி­ரத்­தில் இந்­தி­யச் சந்தை­க­ளி­லி­ருந்து வெளி­யே­றி­விட மாட்­டார்­கள். அவர்­கள், வளர்ச்­சி­யின் உண்­மை­யான ருசியை கண்ட பூனை­கள்.

மேலும், படிப்­ப­டி­யா­கவே வட்டி விகி­தங்­கள் உயரப் போகின்றன. அத­னால், உடன­டி­யாக பணத்தை எடுத்­துச் செல்­லும் அபா­ய­மும் இல்லை. இந்­திய பங்­குச் சந்­தை­களில், இந்­திய நிறு­வ­னங்­கள் மற்­றும் தனி­ந­பர்­களின் முத­லீடு தொடர்ந்து பெருகி வருவ­தால், அன்­னிய முத­லீட்டாளர்­களை மட்­டுமே நம்­பிக் கொண்­டி­ருக்­கும் நிலைமை, படிப்­ப­டி­யாக மாறி வரு­கிறது.டிச., 13 அன்று, அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் வட்டி உயர்வு அறி­விப்பு வெளி­யானது.

ஆனால், இந்­திய பங்­குச் சந்­தை­களில், எந்த வித­மான பாதிப்­பும் இல்லை. சொல்­லப் போனால், கடந்த வாரம், இரண்டு பங்­குச் சந்­தை­களும் லாபத்­து­ட­னேயே முடிந்­துள்ளன.நாம், நம்மை மட்­டுமே சார்ந்­தி­ருக்­கத் துவங்கி இருக்­கி­றோம் என்­ப­தற்­கான நிரூபணம் இது. குஜ­ராத் இரண்­டாம் கட்ட தேர்­த­லும், அதன்­பின் வெளி­யான கருத்­துக் கணிப்­பு­களும், பங்­குச் சந்­தை­யின் உற்­சா­கத்தை உயர்த்­தவே செய்­தது. அமெ­ரிக்க வட்டி விகித உயர்வு, இங்கே கணக்­கி­லேயே எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது மாதிரி தெரி­ய­வில்லை.

இவை, தற்­கா­லிக உற்­சா­கங்­கள். உண்­மை­யான பிரச்னை, பட்­டி­ய­லி­டப்­பட்ட பெரு நிறுவ­னங்­களின், முழு ஆண்டு அறிக்­கை­கள் வெளி வரும் போதும், இந்­தி­யா­வின், நிதி­நிலை அறிக்கை வெளி வரும் போதும் தெரிய வரும் என, எச்­ச­ரிக்கை செய்­கி­ற­வர்­களும் இருக்­கின்­ற­னர். இந்த எச்­ச­ரிக்கை தேவை தான். நாம் டால­ரின் தள்ளாட்டத்­தில் சிக்­கிக் கொள்­ளா­மல், அதை­யும் மீறி வளர வேண்டிய அவ­சி­யம் ஏற்­பட்டு உள்­ள­தையே, இந்த எச்சரிக்கை உணர்த்­து­கிறது.

– ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)