பதிவு செய்த நாள்
05 ஜன2018
00:32
பெங்களூரு:‘இன்போசிஸ்’ நிறுவனத்தின், புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள, சலீல் பரேக்கிற்கு, ஆண்டுக்கு, 6.50 கோடி ரூபாய் நிரந்தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும், செயல்பாடு சார்ந்த ஊக்கத்தொகையாக, 9.75 கோடி ரூபாய் பெறவும், ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் அவருக்கு, 3.25 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளும் வழங்கப்படும்.
இது தவிர, நிறுவன இயக்குனர் குழு நிர்ணயிக்கும் வளர்ச்சி இலக்கை எட்டும்பட்சத்தில், 13 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
அவருக்கு, ஊதியம், ஊக்கத்தொகை, போனஸ் உள்ளிட்டவை எல்லாம் சேர்ந்து, 2019 மார்ச் நிலவரப்படி, 17.30 கோடி ரூபாய் கிடைக்கும். இது, 2021 மார்ச்சில், 35.25 கோடி ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளது.
எனினும், சலீல் பரேக் பெறும் தொகை, இன்போசிஸ் முன்னாள் தலைமை செயல்
அதிகாரி, விஷால் சிக்கா பணியில் சேர்ந்த முதலாண்டு பெற்ற, 48 கோடி ரூபாயை ஒப்பிடும் போது, மிகக் குறைவு.விஷால் சிக்கா உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு, அளவிற்கதி
கமாக ஊதியம் வழங்கப்படுவதாக, அதன் நிறுவனர், நாராயணமூர்த்தி குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|