விமானம், சில்லரை விற்பனை, ரியல் எஸ்டேட் துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிவிமானம், சில்லரை விற்பனை, ரியல் எஸ்டேட் துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மத்திய அரசுக்கு உலக வங்கி பாராட்டு இதர வளரும் நாடுகளை விட இந்தியா, ‘சூப்பர்’ மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீதமாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2018
00:24

வாஷிங்டன்:‘நாடு முன்­னேற வேண்­டும் என்ற லட்­சி­யத்­து­டன், விரி­வான சீர்­தி­ருத்­தங்­களை மத்­திய அரசு மேற்­கொள்­வ­தால், இதர வள­ரும் நாடு­களை விட, இந்­தியா மிகச் சிறப்­பான வளர்ச்சி காண வாய்ப்பு உள்­ளது’ என, உலக வங்கி தெரி­வித்­துள்­ளது.
இவ்­வங்­கி­யின், ‘சர்­வ­தேச பொரு­ளா­தார முன்­னேற்­றம்’ என்ற ஆய்­வ­றிக்­கை­யில், மேலும் கூறப்­பட்டு உள்­ள­தா­வது:பண மதிப்பு நீக்­கம், ஜி.எஸ்.டி., போன்­ற­வற்­றின் துவக்க கால பாதிப்பை மீறி, இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 2017ல், 6.7 சத­வீ­த­மாக இருக்­கும். இது, இந்­தாண்டு, 7.3 சத­வீ­தம்; அடுத்த இரு ஆண்­டு­களில், 7.5 சத­வீ­த­மாக உய­ரும்.அடுத்த, 10 ஆண்­டு­களில், இதர முக்­கிய வள­ரும் நாடு­களின், பொரு­ளா­தார வளர்ச்­சியை விஞ்­சும்மகத்­தான ஆற்­றல், இந்­தி­யா­வுக்கு உள்­ளது. மூன்று ஆண்­டு­கள், வளர்ச்சி விகி­தம் நன்­றா­கவே இருந்­தது. இதற்கு, மத்­திய அர­சின் சீர்­தி­ருத்த திட்­டங்­கள் துணை புரிந்­துள்ளன.‘உற்­பத்தி மற்­றும் வாராக்­க­டன்’ என்ற இரு அம்­சங்­க­ளுக்கு, தீர்வு காண வேண்­டும். வங்கி வாராக்­க­டன் பிரச்­னைக்கு தீர்­வ­ளிக்­கும், மறு பங்கு மூல­தன திட்­டம் வர­வேற்­கத்தக்­கது.
உயர்­நிலை கல்வி முடித்து பணிக்கு வரு­வோர் பெருகி வரு­வ­தால், இந்­தி­யா­வுக்கு, உற்­பத்­தியை பெருக்­கும் ஆற்­றல் அதி­க­ரிக்­கும். தொழி­லா­ளர் சந்தை, கல்வி, ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு ஆகி­ய­வற்­றில் செய்து வரும் சீர்­தி­ருத்­தங்­களும், முத­லீட்டு விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்­டி­ருப்­ப­தும், நாட்­டின் முன்­னேற்­றத்­திற்கு மேலும் வலு­சேர்க்­கும்.
இதர வள­ரும் நாடு­களில், மக்­கள் தொகை வளர்ச்சி விகி­தம், அரி­தாக உள்ள நிலை­யில், அது, இந்­தி­யா­விற்கு சாத­க­மான அம்­ச­மாக உள்­ளது. இதை பயன்­ப­டுத்தி, பெண் தொழி­லா­ளர் எண்­ணிக்­கையை உயர்த்த வேண்­டும். பிற வள­ரும் நாடு­களை ஒப்­பி­டும் போது, இந்­தி­யா­வில் பெண் தொழி­லா­ளர் பங்கு குறை­வாக உள்­ளது.
பயன்­ப­டுத்­தப்­ப­டா­மல் உள்ள பெண்­களின் சக்­தியை, உற்­பத்­தித் துறைக்கு கொண்டு வந்­தால், நாடு சிறப்­பான பயனை பெறும். வேலை­யில்லா இளை­ஞர்­கள் எண்­ணிக்­கையை குறைக்­க­வும், தனி­யார் முத­லீ­டு­களை அதி­க­ரிக்­க­வும்நட­வ­டிக்கை தேவை. வாராக்­க­ட­னால், வங்கி சொத்து மதிப்பு சரிவை தடுக்­கும் திட்­டம், ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. இது போன்ற நட­வ­டிக்­கை­களை திறம்­பட கையாண்­டால், இந்­தி­யா­வால், சுல­ப­மாக வளர்ச்சி இலக்கை எட்­டு­வது மட்­டு­மின்றி, அதை தாண்­ட­வும் முடி­யும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
சீனா மந்தம் – இந்தியா வேகம்
சீனா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 2017ல், இந்­தி­யாவை விட, 0.1 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு,6.8 சத­வீ­த­மாக இருக்­கும். இது, இந்­தாண்டு, 6.4 சத­வீ­த­மா­க­வும், அடுத்த இரு ஆண்­டு­களில், முறையே, 6.3 மற்­றும் 6.2 சத­வீ­த­மா­க­வும் சரி­வ­டை­யும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், சீனா மந்­த­மா­க­வும்; இந்­தியா, 7 சத­வீத வளர்ச்­சிக்­கான ஆற்­ற­லை­யும் கொண்­டி­ருக்­கும்.
அய்­யன்­கோஸ் இயக்­கு­னர், வளர்ச்சி திட்­டக் குழு, உலக வங்கி

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)