ஒரு சவரன் தங்கம் விலை ரூ.23,000 ஐ நெருங்குகிறதுஒரு சவரன் தங்கம் விலை ரூ.23,000 ஐ நெருங்குகிறது ... ‘ஜி.எஸ்.டி., நெட்வொர்க்’ நிறுவனம் அறிவிப்பு:சரக்கு போக்குவரத்துக்கு, ‘இ – வே பில்’:பிப்., 1 முதல் அமலுக்கு வருகிறது ‘ஜி.எஸ்.டி., நெட்வொர்க்’ நிறுவனம் அறிவிப்பு:சரக்கு போக்குவரத்துக்கு, ‘இ – ... ...
ஜி.எஸ்.டி.,அறி­வோம் – தெளி­வோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2018
01:15

ஜி.எஸ்.டி.ஆர்., – 2 என்­பது என்ன படி­வம்? இந்த படி­வத்தை, யார் தாக்­கல் செய்ய வேண்­டும்? எப்­போது தாக்­கல் செய்ய வேண்­டும்?ஜி.எஸ்.டி.ஆர்., – 2 என்­பது, கொள்­மு­தல் தக­வ­லுக்­கான படி­வம். வினி­யோ­கத்தை பெறும் நபர், வினி­யோ­கம் செய்­ப­வ­ரி­டம் இருந்து பெற்ற கொள்­மு­தல் அனைத்­தை­யும், இந்த படி­வத்­தில் தாக்­கல் செய்ய வேண்­டும். பொது­வாக இந்த படி­வம், மாதம் முடிந்த பின், 11 – 15க்குள் தாக்­கல் செய்­யப்­பட வேண்­டும்.
2017 ஜூலை முதல் தாக்­கல் செய்­யப்­பட வேண்­டிய, ஜி.எஸ்.டி.ஆர்., – 2 தேதி­கள் நீட்­டிக்­கப்­பட்டு உள்­ள­னவா?2017 ஜூலை – 2018 மார்ச் வரை, தாக்­கல் செய்­யப்­பட வேண்­டிய, ஜி.எஸ்.டி.ஆர்., – 2 தேதி­களை நீட்­டிக்க, அரசு உத்­தே­சித்து உள்­ளது. தற்­போது, ஜி.எஸ்.டி.ஆர்., – 2 தாக்­கல் செய்ய வேண்­டாம் என, ஜி.எஸ்.டி., கவுன்­சில் அறி­வித்­துள்­ளது.
ஜி.எஸ்.டி.ஆர்., – 3 என்­பது என்ன படி­வம்? இந்த படி­வத்தை, யார் தாக்­கல் செய்ய வேண்­டும்? எப்­போது தாக்­கல் செய்ய வேண்­டும்?ஜி.எஸ்.டி.ஆர்., – 3 என்­பது, மாதாந்­திர இறுதி படி­வம். இப்­ப­டி­வத்தை, வினி­யோ­கத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும் நபர், வரும் மாதத்­தின், 20க்குள் தாக்­கல் செய்ய வேண்­டும்.இந்த படி­வம், ஜி.எஸ்.டி.ஆர்., – 1ல் உள்ள மொத்த விற்­ப­னை­யும், ஜி.எஸ்.டி.ஆர்., – 2ல் உள்ள மொத்த கொள்­மு­த­லை­யும் கணக்­கில் எடுத்­துக் கொள்­ளும். உள்­ளீட்டு வரி வர­வில் சரி செய்­தது போக, மீதி வரி மற்­றும் வட்டி ஏதே­னும் இருப்­பின், அந்த தொகை பண­மாக, ஜி.எஸ்.டி.ஆர்., – 3 படி­வம் தாக்­கல் செய்­யப்­படும் போது செலுத்த வேண்­டும்.தற்­போது, ஜி.எஸ்.டி.ஆர்., – 3 படி­வம் தாக்­கல் செய்ய வேண்­டாம் என, ஜி.எஸ்.டி., கவுன்­சில் அறி­வித்­துள்­ளது. ஜி.எஸ்.டி.ஆர்., – 3 படி­வத்­திற்கு பதில், ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி என்ற படி­வத்தை மட்­டும், 2018 மார்ச் வரை தாக்­கல் செய்­தால் போதும் என்ற அறி­விப்பு வெளி­யாகி உள்­ளது.
ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி என்­பது என்ன படி­வம்? இந்த படி­வத்தை எப்­போது தாக்­கல் செய்ய வேண்­டும்?தற்­போது, ஜி.எஸ்.டி., குறித்த படி­வங்­களை தாக்­கல் செய்­யும் போது, பல சிர­மங்­கள் ஏற்­ப­டு­கின்றன. படி­வங்­களை தாக்­கல் செய்ய, புரிந்து கொள்ள மக்­க­ளுக்கு அவ­கா­சம் தேவைப்­ப­டு­கிறது. எனவே, ஜி.எஸ்.டி.ஆர்., – 3க்கு பதில், ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி தாக்­கல் செய்­யும்­படி, அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி படி­வத்தை, 2018 மார்ச் வரை, மாதாந்­திர அடிப்­ப­டை­யில் மாத்­தி­ரமே தாக்­கல் செய்ய வேண்­டும். தாக்­கல் செய்ய வேண்­டிய காலக்­கெடு, கீழ்­கண்­ட­வாறு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது:வரு­டாந்­திர மொத்த விற்­று­மு­தல், ரூ.1.5 கோடிக்கு கீழ்/மேல் உள்ள நபர்­கள்
ஜி.எஸ்.டி.ஆர்., – 1, 2 மற்­றும் 3 படி­வங்­கள், எவ்­வாறு வடி­வ­மைக்­கப்­பட்டு உள்ளன?பொது­வாக, வரி செலுத்­து­ப­வர்­கள் தங்­களின் மொத்த விற்­ப­னையை, ஜி.எஸ்.டி.ஆர்., – 1 படி­வத்­தி­லும், தங்­க­ளுக்கு வினி­யோ­கம் செய்­த­வர்­கள் செலுத்­திய வரியை, ஜி.எஸ்.டி.ஆர்., – 2 படி­வத்­தி­லும் தாக்­கல் செய்து, இந்த இரண்டு வரி தொடர்­பான படி­வங்­க­ளை­யும் ஒப்­பிட்டு, சரி செய்­தது போக, மீதி வரி மற்­றும் வட்டி ஏதே­னும் இருப்­பின், அந்த தொகையை பண­மாக செலுத்தி, ஜி.எஸ்.டி.ஆர்., – 3 படி­வத்தை தாக்­கல் செய்ய வேண்­டும் என்­பது தான், ஜி.எஸ்.டி., படி­வங்­களின் வடி­வ­மைப்பு.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டின் மொத்த விலை பணவீக்கம், நவம்பரில், 4.64 சதவீதமாக வீழ்ச்சி கண்டு உள்ளது. இது, அக்டோபரில், 5.28 ... மேலும்
business news
சென்னை:ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம், ஆந்திர மாநிலம், கர்னுால் மாவட்டத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய ஆலை ... மேலும்
business news
ஐதராபாத்:அதானி குழுமம், இஸ்ரேலின், ‘எல்பிட் சிஸ்டம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, ஐதராபாதில், ‘டிரோன்’ எனப்படும், ... மேலும்
business news
புதுடில்லி:தேசிய மின்னணு கொள்கையை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர், ... மேலும்
business news
ஆமதாபாத்:‘பல்பொருள் சில்லரை விற்பனையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும்’ என, சி.ஐ.ஐ., விடுத்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)