ஜி.எஸ்.டி.,அறி­வோம் – தெளி­வோம்ஜி.எஸ்.டி.,அறி­வோம் – தெளி­வோம் ... ஆயுள் காப்­பீடு பெறும் போக்கில் மாற்றம் ஆயுள் காப்­பீடு பெறும் போக்கில் மாற்றம் ...
‘ஜி.எஸ்.டி., நெட்வொர்க்’ நிறுவனம் அறிவிப்பு:சரக்கு போக்குவரத்துக்கு, ‘இ – வே பில்’:பிப்., 1 முதல் அமலுக்கு வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2018
01:36

புதுடில்லி:நாடு முழு­வ­தும், சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு, ‘இ – வே பில்’ எனப்­படும், மின்­னணு வழித்­தட ரசீது நடை­முறை, பிப்., 1 முதல் அம­லுக்கு வரு­கிறது.
இது குறித்து, ‘ஜி.எஸ்.டி., நெட்­வொர்க்’ நிறு­வ­னம் வெளி­யிட்­டு உள்ள அறிக்கை:ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி திட்­டத்­தில், மாநி­லங்­கள் இடையே, 10 கி.மீ., துாரத்­திற்கு மேல் எடுத்­துச் செல்­லப்­படும், 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் மதிப்­புள்ள சரக்­கிற்கு, பிப்., 1 முதல், ‘இ – வே பில்’ கட்­டா­ய­மாக்­கப்­பட்டு உள்­ளது.பதிவுஏற்­க­னவே, கேரளா, கர்­நா­டகா, ராஜஸ்­தான், உத்­த­ர­கண்ட் ஆகிய நான்கு மாநி­லங்­களில், ‘இ – வே பில்’ நடை­முறை அம­லில் உள்­ளது. இம்­மா­நி­லங்­கள், தின­மும், 1.40 லட்­சம், ‘இ – வே பில்’களை தயா­ரிக்­கின்றன.இதர மாநி­லங்­க­ளுக்கு, இம்­மாத இறுதி வரை, சோதனை அடிப்­ப­டை­யில், ‘இ – வே பில்’ மூலம், சரக்கு போக்­கு­வ­ரத்து மேற்­கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது.சரக்கு போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள், www.ewaybill.nic.in வலை­த­ளத்­தில், அவற்­றின், ஜி.எஸ்.டி.ஐ.என்., எண்ணை குறிப்­பிட்டு, பதிவு செய்து, ‘இ – வே பில்’ தயா­ரிக்­க­லாம்.ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்­யாத சரக்கு போக்­கு­ வ­ரத்து நிறு­வ­னங்­கள், ‘பான்’ அல்­லது ‘ஆதார்’ எண் வழங்கி, பதிவு செய்­ய­லாம்.அனை­வ­ருக்­கும், ‘ஆன் லைன்’ மூலம், ‘அலர்ட் மெசேஜ், எஸ்.எம்.எஸ்.,’ ஆகி­யவை அனுப்­பப்­படும்.‘இ – வே பில்’ தயா­ரிக்­கும் போது, நிறு­வ­னங்­கள் அல்­லது சரக்கு போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள், சரக்கு எடுத்­துச் செல்­லப்­படும் வாக­னத்­தின் பதிவு எண்ணை குறிப்­பி­ட­லாம். வாக­னம் பழு­தாகி நின்­றாலோ அல்­லது வேறு வாக­னத்­திற்கு சரக்­கு­களை மாற்­றி­னாலோ, பதிவு எண்ணை மாற்றி கொள்­ள­லாம்.‘இ – வே பில்’ தயா­ரித்த, 24 மணி நேரத்­திற்­குள், அதை ரத்து செய்­யும் வச­தி­யும் உள்­ளது. மோட்­டார் இன்­ஜின் பொருத்­தப்­ப­டாத வாக­னங்­களில் எடுத்­துச் செல்­லப்­படும் சரக்­கு­க­ளுக்கு, ‘இ – வே பில்’ தேவை­யில்லை.
விலக்கு
காய்­க­றி­கள், பழங்­கள், மீன், குடி­நீர் ஆகி­ய­வற்றை எடுத்­துச் செல்­வ­தற்­கும் விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. சரக்கு போக்­கு­வ­ரத்­தில், வரி ஆய்­வா­ளர் கேட்­டால், ‘இ – வே பில்’ காண்­பிக்­கப்­பட வேண்­டும். ஆய்­வா­ளர், சரக்கு வாக­னத்தை, 30 நிமி­டங்­க­ளுக்கு மேல் நிறுத்தி வைத்­தால், அது­பற்றி, வாகன ஓட்­டு­னர், வலை­த­ளத்­தில் புகார் தெரி­விக்­க­லாம். இதற்­கான வழி­மு­றை­கள், வலை­த­ளத்­தில் உள்ளன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
அலைச்சல் இல்லை
இனி, வரி செலுத்­து­வோர் மற்­றும் சரக்கு போக்­கு­ வ­ரத்து நிறு­வ­னங்­கள், சரக்­கு­களை, ஒரு மாநி­லத்­தில் இருந்து வேறு மாநி­லத்­திற்கு அனுப்­பு­வ­தற்­கான, ‘பாஸ்’ கோரி, வரி அலு­வ­ல­கத்­திற்கோ அல்­லது சோத­னைச்­சா­வ­டிக்கோ செல்ல தேவை­இல்லை. சுய­மா­கவே, வலை­த­ளத்­தில், மொபைல் ஆப், எஸ்.எம்.எஸ்., மூலம், ‘இ – வே பில்’ தயா­ரித்து, போக்­கு­வ­ரத்­திற்கு பயன்­ப­டுத்­த­லாம்.பிரகாஷ் குமார் ,தலைமை செயல் அதிகாரி, ஜி.எஸ்.டி.என்.,

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)