பாரத் டைனமிக்ஸ்: பங்கு வெளியீட்டிற்கு வருகிறதுபாரத் டைனமிக்ஸ்: பங்கு வெளியீட்டிற்கு வருகிறது ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.67 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.67 ...
முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2018
01:04

டாவோஸ் : சைபர் பாது­காப்பு, பரு­வ­நிலை மாற்­றம் போன்ற பிரச்­னை­க­ளை­யும் மீறி, முத­லீ­டு­களை ஈர்க்­கும் நாடு­களின் பட்­டி­ய­லில், இந்­தியா, ஜப்­பானை விஞ்சி, 5வது இடத்­திற்கு முன்­னேறி உள்­ளது.

பிரைஸ் வாட்­டர் ஹவுஸ் கூப்­பர் நிறு­வ­னம், ஆண்­டு­தோ­றும், சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரி­கள் தெரி­விக்­கும் கருத்­துக்­களின் அடிப்­ப­டை­யில், முத­லீட்­டிற்கு உகந்த நாடு­களின் பட்­டி­யலை வெளி­யி­டு­கிறது. இதன்­படி, இந்­தாண்­டுக்­கான பட்­டி­யல், சுவிஸ் நாட்­டின், டாவோஸ் நக­ரில்,உலக பொரு­ளா­தார மாநாட்­டில் வெளி­யி­டப்­பட்­டது.

இந்த பட்­டி­ய­லில், சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரி­களில், 46 சத­வீ­தம் பேரின் ஆத­ர­வு­டன், அமெ­ரிக்கா முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. 33 சத­வீ­தம் பேர் ஆத­ர­வு­டன், சீனா இரண்­டா­வது இடத்­தை­யும், ஜெர்­மனி, 20 சத­வீத ஆத­ர­வு­டன், மூன்­றா­வது இடத்­தை­யும் பிடித்­துள்ளன. பிரிட்­டன், 15 சத­வீ­தம் பேரின் ஆத­ர­வு­டன், நான்­கா­வது இடத்தை பிடித்­துள்­ளது. ஐந்­தா­வது இடத்­திற்கு முன்­னேறி உள்ள இந்­தி­யா­வுக்கு, 9 சத­வீ­தத்­தி­ன­ரின் ஆத­ரவு கிட்­டி­யுள்­ளது. கடந்த ஆண்டு, இந்­தியா, 6வது இடத்­தி­லும், ஜப்­பான், 5வது இடத்­தி­லும் இருந்­தன.

இது குறித்து, பிரைஸ் வாட்­டர் ஹவுஸ் கூப்­பர்இந்­தியா நிறு­வ­னத்­தின் தலை­வர், ஷியா­மல் முகர்ஜி கூறி­ய­தா­வது: உறு­தி­யான கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­தக் கூடிய சீர்­தி­ருத்­தங்­க­ளால், ஓராண்­டாக, இந்­தி­யா­வின் செயல்­பாடு மேம்­பட்டு உள்­ளது. ஆய்­வில் பங்­கேற்ற, பெரும்­பான்­மை­யான தலைமை செயல் அதி­கா­ரி­கள், தங்­கள் நிறு­வ­னத்­தின் வளர்ச்சி குறித்து, மிகுந்த நம்­பிக்கை தெரி­வித்து உள்­ள­னர். அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி, தயா­ரிப்பு மற்­றும் திறன் வளர்ப்பு போன்ற பிரி­வு­களில் உள்ள பிரச்­னை­க­ளுக்கு, தீர்வு காணும் நட­வ­டிக்­கை­களை, மத்­திய அரசு எடுத்­துள்­ளது.

அதே சம­யம், ‘சைபர் கிரைம்’ எனப்­படும், கணினி சார்ந்த மோசடி, பரு­வ­நிலை மாற்­றம் போன்ற புதிய அச்­சு­றுத்­தல்­கள் உள்­ள­தாக, ஆய்­வில் பங்­கேற்­றோ­ரில், 40 சத­வீ­தம் பேர் கூறி­யுள்­ள­னர். பயங்­க­ர­வாத செயல்­கள் குறித்து, 41 சத­வீ­தம் பேர் கவலை தெரி­வித்து உள்­ள­னர். திற­மை­யான வல்­லு­னர்­களின் பற்­றாக்­குறை மற்­றும் ஜன­ரஞ்­சக செயல் திட்­டங்­களின் தாக்­கம் குறித்த கவலை உள்­ள­தாக, முறையே, 38 சத­வீ­தம் மற்­றும், 35 சத­வீ­தம் பேர் கூறி­யுள்­ள­னர். அதிக கட்­டுப்­பா­டு­கள் தான், 42 சத­வீத தலைமை செயல் அதி­கா­ரி­க­ளுக்கு, பிர­தான கவ­லை­யாக உள்­ளது. 36 சத­வீ­தம் பேருக்கு, வரி விகித உயர்வு பிரச்­னை­யாக உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

முக்கிய தலைவலி:
ஆசிய பசி­பிக் மற்­றும் மேற்கு ஐரோப்­பிய நாடு­களின் வர்த்­த­கத்­தில், முக்­கிய ஐந்து அச்­சு­றுத்­தல்­களில், பரு­வ­நிலை மாற்­ற­மும், சுற்­றுச்­சூ­ழல் பாதிப்­பும் இடம் பிடித்­துள்ளன. குறிப்­பாக, எரி­சக்தி, பொறி­யி­யல், கட்­டு­மா­னம், போக்­கு­வ­ரத்து மற்­றும் சரக்கு போக்­கு­வ­ரத்து துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு, இப்­பி­ரச்னை முக்­கிய தலை­வ­லி­யாக உள்­ளது.
-பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர் ஆய்வறிக்கை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)