ஜி.எஸ்.டி.,  அறி­வோம் -– தெளி­வோம்ஜி.எஸ்.டி., அறி­வோம் -– தெளி­வோம் ...  தொழில்நுட்பம் – வேலைவாய்ப்பு – முதலீடு ஆட்டோமேஷன், கருத்துருவாக்கத்திற்கு மார்க்கெட்டிங் நிறுவனங்கள் முன்னுரிமை தொழில்நுட்பம் – வேலைவாய்ப்பு – முதலீடு ஆட்டோமேஷன், ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆடி: வரு­கிறது, ‘ஆர்.எஸ்., 5 கூபே’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2018
02:09

பிர­பல சொகுசு கார் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, ‘ஆடி,’ சமீ­பத்­தில், ‘கியூ 5’ எஸ்.யு.வி.,யை அறி­மு­கம் செய்த கையோடு, அதன், மற்­றொரு புதிய தயா­ரிப்­பான, ‘ஆர்.எஸ்., 5 கூபே’வின், அடுத்த தலை­முறை காரை, இம்­மாத இறு­தி­யில் அறி­மு­கம் செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது.

இது, முந்­தைய, ஆர்.எஸ்., 5ஐ விட, முற்­றி­லும் புதிய பிளாட்­பார்­மில், சற்று பெரி­தாக உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது. இதில் புதிய, ‘பம்­பர்’கள், ‘சிங்­கிள் பிரேம் கிரில், மேட்­ரிக்ஸ், எல்.இ.டி., ஹெட்­லைட்,’ 19 அல்­லது 20 அங்­குல வீல்­கள் என, புதிய அம்­சங்­கள் ஏரா­ளம்.

முக்­கி­ய­மாக, இதில் முற்­றி­லும் புதிய இன்­ஜின் பொருத்­தப்­பட்டு உள்­ளது. முந்­தைய, ‘4.2 லி., வி8’க்கு பதி­லாக, ‘2.9 லி., டர்போ சார்ஜ்ட் வி6’ இன்­ஜின் இடம் பிடித்­துள்­ளது. இப்­பு­திய இன்­ஜின் சிறி­தாக காணப்­பட்­டா­லும், ‘வி8’ இன்­ஜின்­கள் உற்­பத்தி செய்­யும், அதே, 450 எச்.பி., திறனை உற்­பத்தி செய்­யக் கூடி­ய­தா­கும். இதன் அதி­க­பட்ச வேகம், 250 கி.மீ., – 280 கி.மீ., இது புறப்­பட்ட, 3.9 வினா­டி­களில், 100 கி.மீ., வேகத்தை எட்டி பிடிக்­கும். டில்­லி­யில் இதன் ஷோரூம் விலை, 1.2 கோடி ரூபா­யில் இருந்து துவங்­கும் என, தெரி­கிறது.

ஹீரோ

‘எக்ஸ்ட்­ரீம் 200 ஆர்’

இந்­தி­யா­வின், ‘நம்­பர் – 1’ பைக் விற்­பனை நிறு­வ­ன­மான, ‘ஹீரோ,’ விரை­வில் அறி­மு­கம் செய்ய உள்ள, புதிய, 200 ‘சிசி’ பைக்­கின் தோற்­றத்தை வெளி­யிட்டு உள்­ளது. இது, ஏப்­ர­லில் சந்­தைக்கு வரும் என, தெரி­கிறது. 2016ல், டில்­லி­யில் நடந்த ஆட்டோ ஷோவில், இதன் மாதி­ரியை, ஹீரோ ஏற்­க­னவே காட்­சிப்­ப­டுத்தி இருந்­தது. அது போலவே, அழ­கான புறத்­தோற்ற வேலைப்­பா­டு­கள், இரு வண்­ணக்­க­லவை என, ‘எக்ஸ்ட்­ரீம் 200 ஆர்’ அழ­காக காட்சி அளிக்­கிறது.

இதில், முகப்பு பகு­தி­யில், பகல் நேரத்­தில் ஒளி­ரும், எல்.இ.டி., விளக்கு, எல்.இ.டி., டெயில் லைட், புதிய, ‘டிஜிட்­டல் அன­லாக் இன்ஸ்ட்­ரு­மென்ட் கிளஸ்­டர்’ ஆகி­யவை இடம்­பெற்­றுள்ளன. 5 கியர் உடைய இந்த பைக்­கில், ஹீரோ­வில் இது­வரை இல்­லாத வகை­யில், முதன்­மு­றை­யாக, இன்­ஜி­னில், ‘பேலன்­சர் ஷேப்ட்’ பொருத்­தப்­பட்டு உள்­ளது.

இது, புறப்­பட்ட, 4.6 வினா­டி­யில், 60 கி.மீ., வேகத்தை எட்­டும். அதி­க­பட்ச வேகம், 114 கி.மீ., உடைய இந்த பைக்­கின் விலை, அறி­மு­கம் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன் வெளி­யி­டப்­படும்.

சுசூகி

‘ஹயா­புசா’ 2018

சுசூகி நிறு­வ­னம், அதன், ‘ஹயா­புசா’ சூப்­பர் பைக்­கின் புது அவ­தா­ரத்தை, இந்­தி­யா­வில் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. ‘ஜி.எஸ்.எக்ஸ்., ஹயா­புசா’ பைக்கை, இந்­தி­யா­வில், 2016 மார்ச்­சில், சுசூகி அறி­மு­கம் செய்­தது. அதன் விற்­பனை, இரு மடங்­காக தற்­போது உயர்ந்­துள்ள சூழ­லில், டில்லி அருகே உள்ள அதன் ஆலை­யில், புதிய, ‘ஹயா­புசா’ பைக் அசெம்­பிள் செய்­யப்­பட்டு, விற்­ப­னைக்கு தயா­ராகி உள்­ளது.

புதிய ஹயா­புசா, 2018 மாட­லின் விலை, முந்­தைய ஹயா­பு­சா­வின் விலைக்கே கிடைக்­கும். இதன் டில்லி ஷோரூம் விலை, 13.88 லட்­சம் ரூபா­யில் இருந்து துவங்­கும் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. வெள்ளை, சிவப்பு மற்­றும் கறுப்பு நிறங்­களில் கிடைக்­கிறது.இதன் நான்கு சிலிண்­டர், 1,340 ‘சிசி’ இன்­ஜின், 199.7 எச்.பி., திறனை உரு­வாக்­கும். இது, கவா­சகி நிறு­வ­னத்­தின், ‘இசட் எக்ஸ் -14 ஆர்’ பைக்­குக்கு போட்­டி­யாக விளங்­கும் என, கரு­தப்ப­டு­கிறது.

மாருதி

‘செலி­ரியோ டூர் எச் 2’

மாருதி சுசூகி நிறு­வ­னம், ‘செலி­ரியோ டூர் எச் 2’ ஹேட்ச்­பேக் காரை அறி­மு­கம் செய்­துள்­ளது. இது, டிரா­வல்ஸ் நிறு­வ­னங்­களை குறி­வைத்து தயா­ரிக்­கப்­பட்டு உள்­ளது.இந்த புதிய கார், செலி­ரி­யோ­வின், ‘எல்.எக்ஸ்.ஐ., (ஓ) வேரி­யன்ட்­டின்’ அடிப்­ப­டை­யில் உரு­வாகி உள்­ளது. விலையை பொறுத்­த­வரை, எல்.எக்ஸ்.ஐ., மற்­றும், ‘எல்.எக்ஸ்.ஐ., (ஓ)
வேரி­யன்ட்’களுக்கு இடைப்­பட்­ட­தாக உள்­ளது. டில்­லி­யில் இதன் ஷோரூம் விலை, 4.21 லட்­சம் ரூபா­யில் இருந்து துவங்­கு­கிறது.

மத்­திய அரசு விபத்­து­களை தடுப்­ப­தற்­காக, டாக்­சி­களில் வேகக் கட்­டுப்­பாட்டு கரு­வியை பொருத்த உத்­த­ர­விட்டு உள்­ளது. அத­னால், இந்த காரில் வேகக் கட்­டுப்­பாடு கரு­வியை, மாருதி பொருத்தி உள்­ளது. அத­னால், 80 கி.மீ.,க்கு மேல், ‘டூர் எச் 2’வின் வேகம் அதி­க­ரிக்­காது. இதில், 68 எச்.பி., திறன் உரு­வாக்­கக் கூடிய, 1.0 லி., திரி பாட் பெட்­ரோல்’ இன்­ஜின் பொருத்­தப்­பட்டு உள்­ளது.

போர்டு

புதிய காரின் தோற்­றம்

போர்டு நிறு­வ­னம், வெகு விரை­வில் அதன், ‘பிகோ, ஹேட்ச்­பேக்’ வகை காரை விட, சற்று பெரி­தான, ‘ப்ரீ ஸ்டைல்’ எனும் புதிய காரை, அறி­மு­கம் செய்ய உள்­ளது. அதற்கு முன்­பாக, அதன் தோற்­றத்தை, சமீ­பத்­தில் வெளி­யிட்டு உள்­ளது.

இந்த ‘கிராஸ் ஹேட்ச்­பேக்’ வகை காரை, சி.யு.வி., அதா­வது, ‘காம்­பேக்ட் யுடி­லிடி வெஹி­கிள்’ என, ‘போர்டு’ குறிப்­பி­டு­கிறது. ‘பிகோ’ மாடலை போல, இப்­பு­திய கார் தோற்­றம் அளித்­தா­லும், ‘ப்ரீ ஸ்டை­லில்’ வெளிப்­பு­றத்­தில் சில மாற்­றங்­களை பார்க்க முடி­கிறது. அதில், ‘பானட், கிரில், ஸ்கிட் பிளேட், அலாய் ஹெட்­லேம்ப், பெரிய அக­ல­மான வீல், ‘ரூப் ரயில்’ என, சில­வற்றை குறிப்­பி­ட­லாம்.

இதன், ‘கிர­வுண்ட் கிளி­ய­ரன்ஸ், பிகோ’வில் உள்­ளதை விட, 15 மி.மீ., அதி­கம். இதில், 1.2 லி., மூன்று சிலிண்­டர் பெட்­ரோல் இன்­ஜின் இடம் பெற்­றுள்­ளது. இந்த புதிய இன்­ஜின், 96 எச்.பி., திறனை உரு­வாக்­கும். இப்­பி­ரி­வில், போட்டி நிறு­வ­னங்­களின் கார் இன்­ஜின்­களை விட, இது தான் சக்தி வாய்ந்­த­தாக இருக்­கும். இதில், டீசல் வேரி­யன்ட்­டும் அறி­மு­க­மா­கிறது. டில்­லி­யில், இதன் ஷோரூம் விலை, 6.4 லட்­சம் ரூபா­யில் இருந்து, 7.9 லட்­சம் ரூபாய் வரை நிர்­ண­யிக்­கப்­ப­ட­லாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)