பதிவு செய்த நாள்
13 பிப்2018
02:27
புதுடில்லி:இந்தாண்டு ஜனவரியில், நாட்டின் சில்லரைபணவீக்கம், 2017 டிசம்பரை விட, சற்று குறைந்துள்ளது.சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
எனினும், காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை சரிவால், இந்தாண்டு ஜனவரியில், சில்லரை பணவீக்கம், 5.07 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2017 டிசம்பரில், 5.21 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், உணவுப்பொருட்கள் பணவீக்கம்,4.96 சதவீதத்தில் இருந்து, 4.70 சதவீதமாக குறைந்துள்ளது. காய்கறிகள் விலை, 29.13 சதவீதத்தில் இருந்து, 26.97 சதவீதமாக சரிவடைந்து உள்ளது. பழங்கள் விலை, 6.63 சதவீதத்தில் இருந்து, 6.24 சதவீதமாக இறக்கம் கண்டுள்ளது.எரிசக்தி மற்றும் எரிபொருள் பணவீக்கம், 7.90 சதவீதத்தில் இருந்து, 7.73 சதவீதமாக குறைந்து உள்ளது.
மத்திய புள்ளியியல் அலுவலகம், மாதந்தோறும்சில்லரை பணவீக்க புள்ளி விபரத்தை வெளியிடுகிறது. இப்புள்ளி விபரங்களின்படி, ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்கள் தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கிறது.மொத்த உள்நாட்டு உற்பத்தியின், இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடு, இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.இந்த மதிப்பீடு, 2017 டிசம்பரில் காணப்பட்ட, தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி மற்றும் இந்தாண்டு ஜனவரியில், சில்லரை பணவீக்க நிலவரத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|