இந்தியா – சிங்கப்பூர் பங்கு சந்தைகள் மோதல்இந்தியா – சிங்கப்பூர் பங்கு சந்தைகள் மோதல் ... ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம் ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம் ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
மத்திய அரசின் சீர்திருத்த திட்டங்களால்...புத்துயிர் பெறுகிறது ரியல் எஸ்டேட் துறை:வரும் மாதங்களில் விற்பனை அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2018
02:31

மும்பை:மத்­திய அர­சின் சீர்­தி­ருத்த திட்­டங்­க­ளால், ரியல் எஸ்­டேட் துறை, மந்த நிலை­யில் இருந்து மீண்டு, எழுச்சி பெற்று வரு­வது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.ரியல் எஸ்­டேட் துறை குறித்து, ‘99 ஏக்­கர்ஸ் டாட் காம்’ நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி.,அம­லாக்­கம், ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை சட்­டம் போன்ற, மத்­திய அர­சின் சீர்­தி­ருத்­தங்­க­ளால், பெரும்­பா­லான முக்­கிய நக­ரங்­களில், வீடு, பிளாட் ஆகி­ய­வற்­றின் விலை, குறைந்தோ அல்­லது அதி­க­ரிக்­கா­மலோ உள்­ளது.
சில நக­ரங்­களில், சொத்து விற்­பனை அதி­க­ரித்­துள்­ளது.புனே, மும்பை, பெங்­க­ளூ­ரில், வீடு, பிளாட் ஆகி­ய­வற்­றின் விலை குறைந்து உள்­ள­தால், அவற்­றின் விற்­பனை உயர்ந்­துள்­ளது.தலை­ந­கர், டில்லி பிராந்­தி­யத்­தில், கூர்­கான், நொய்டா மற்­றும் மும்­பை­யின், நவி மும்பை பகு­தி­களில், வீடு, பிளாட் ஆகி­ய­வற்­றின் விலை குறைந்­துள்­ளது. அதி­க­ள­வில், ரியல் எஸ்­டேட் சொத்­து­கள் உள்ள பிர­ப­ல­மான இப்­ப­கு­தி­களில், விலை உயர்­வும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.
இதற்கு, ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை சட்­டம் அம­லுக்கு வந்­தது தான் முக்­கிய கார­ணம்.இந்த சட்­டத்­தின் கீழ் அமைக்­கப்­பட்­டுள்ள, ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை ஆணை­யம், அசையா சொத்­து­கள் வாங்­கு­ வோ­ருக்கு, முழு­மை­யான பாது­காப்பை அளிக்­கிறது. அத்­து­டன், கட்­டு­மான நிறு­வ­னங்­களின் செயல்­பா­டு­களில், ஒழுங்­குத்­தன்மை ஏற்­ப­டுத்­த­வும் துணை புரிந்­துள்­ளது.அத­னால், ரியல் எஸ்­டேட் துறை­யில், ஆர்­வம் காட்­டா­மல் இருந்­தோ­ரும், நம்­பிக்­கை­யு­டன் முத­லீடு செய்ய துவங்கி உள்­ள­னர்.வீடு, பிளாட் வாங்­கு­வோ­ரி­டம், ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை ஆணை­யம், புதிய நம்­பிக்­கையை விதைத்­துள்­ளது.
இதன் கார­ண­மாக, 2017ல், முதல் அரை­யாண்­டில், சரிந்­தி­ருந்த ரியல் எஸ்­டேட் துறை, பின்­பா­தி­யில் நிமிர்ந்­துள்­ளது.இந்­தாண்டு, மிக­வும் ஆடம்­ப­ர­மான, பெருந்­தொ­கை­யுள்ள குடி­யி­ருப்­பு­க­ளுக்கு, வர­வேற்பு குறை­வாக இருக்­கும் என, ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.
அத­னால் இப்­பி­ரி­வில், விலை மேலும் குறை­யக்­கூ­டும். இதர பிரி­வு­களில், மார்ச் வரை, மிகப்­பெ­ரிய அள­வில் விலை குறைய வாய்ப்­பில்லை.ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தில், கட்­டு­மான நிலை­யில் உள்ள குடி­யி­ருப்­பு­களின் பதிவு மெது­வாக நடை­பெ­று­வ­தால், சாதா­ரண குடி­யி­ருப்­பு­கள் விற்­ப­னைக்கு வரு­வது, சற்று மந்­த­மாக உள்­ளது.புதிய கட்­டு­மான திட்­டங்­களும், அவற்­றின் பதி­வும் அதி­க­ரித்து உள்­ள­தால், வரும் மாதங்­களில், இப்­பி­ரி­வில் விற்­ப­னைக்கு வரும் குடி­யி­ருப்­பு­கள் அதி­க­ரிக்­கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை சட்­டம், ரியல் எஸ்­டேட் சந்­தை­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. மேலும், ஜி.எஸ்.டி., நடை­மு­றை­யி­லும் தெளிவு மேம்­பட்டு உள்­ளது. அத­னால், பட்­ஜெட் குடி­யி­ருப்­பு­கள் உட்­பட, அனைத்து பிரி­வு­களில் விற்­பனை அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.நரசிம்ம ஜெயகுமார் தலைமை வணிக அதிகாரி, ‘99 ஏக்கர்ஸ் டாட் காம்’

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)