இந்தியா – சிங்கப்பூர் பங்கு சந்தைகள் மோதல்இந்தியா – சிங்கப்பூர் பங்கு சந்தைகள் மோதல் ... ‘சிறந்த நன்னெறி நிறுவன விருது’ 6வது முறையாக டாடா ஸ்டீல் தேர்வு ‘சிறந்த நன்னெறி நிறுவன விருது’ 6வது முறையாக டாடா ஸ்டீல் தேர்வு ...
ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2018
10:59

2 சேனல்கள், 3,000-க்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் பிரத்யேக நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய ஹாட்ஸ்டாரின் ஒளிபரப்புகள் இப்போது ஏர்டெல் டிவி செயலி வழியாக ஏர்டெல்-ன் அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக கிடைக்கும். அதன் விபரம் வருமாறு...

தொலைத்தொடர்பு சேவைகள் துறையில் இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் ஏர்டெல் (“AIRTEL”) மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய பிரீமியம் ஸ்டிரீமிங் செயல்தளமான ஹாட்ஸ்டார்(HOTSTAR) ஆகிய நிறுவனங்களும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுவகிப்பு செயல்பாட்டில் இணைந்திருப்பதை அறிவித்திருக்கின்றன.

ஹாட்ஸ்டாரின் தொகுப்பிலுள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே இந்த கூட்டாண்மை முயற்சியாகும். ஏர்டெல் டிவி செயலியின் பரந்து விரிந்த ஒளிபரப்பு தொகுப்பினை இது இன்னும் அதிகமாக விரிவுபடுத்தும். அதே நேரத்தில் ஏர்டெல்-ன் பரந்த மொபைல் வாடிக்கையாளர்கள் அடித்தளம் முழுவதிலும் ஹாட்ஸ்டாரின் ஒளிபரப்பு உள்ளடக்கம் கிடைக்கப்பெற செய்வதன் மூலம் அதன் செயல்தளமும் விரிவடையும்.

இப்புதிய கூட்டாண்மை செயல்பாட்டின் வழியாக இந்தியாவில் மிகப்பெரியதாகும் மற்றும் மிகச்சிறப்பான டிஜிட்டல் உள்ளடக்க தொகுப்புகள் ஒன்றுக்கு எர்டெல் டிவி இப்போது அணுகுவசதியை பெறுகிறது. இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 355-க்கும் அதிகமான நேரலை டிவி சேனல்கள் மற்றும் ஏறக்குறைய 10,000 பிரபல திரைப்படங்கள் ஹாட்ஸ்டார்-ன் தொகுப்பில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தனிப்பட்ட செயல்தளத்தில் மிகச்சிறப்பான உள்ளடக்கங்களை ஒருங்கிணைத்து வழங்குவதற்காகவும் வாடிக்கையாளர்களுக்கு இதன்மூலம் அற்புதமான அனுபவத்தை தரவும், அனைத்து முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களோடு கூட்டுவகிப்பு ஒப்பந்தங்களை ஏர்டெல் மேற்கொண்டிருக்கிறது.

9 மொழிகளில் ஸ்டார் நெட்வொர்க்கை சேர்ந்த சேனல்களின் அனைத்து டிவி நிகழ்ச்சிகள் மற்றும் இந்தியாவின் சிறப்பான திரைப்படங்கள், நேரடி விளையாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கி 1 லட்சம் மணி நேரங்களுக்கும் அதிகமான ஒளிபரப்பு உள்ளடக்கத்தைக் கொண்டதாக ஹார்ட்ஸ்டாரின் டிஜிட்டல் உள்ளடக்க நூலகம் இருக்கிறது. இத்தொகுப்பு முழுவதும் ஏர்டெல் டிவி செயலி வழியாக இலவசமாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். 22 சேனல்களிலிருந்து நிகழ்ச்சிகள் மற்றும் 3,000-க்கும் கூடுதலான வெற்றிகரமான திரைப்படங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளையும் இது உள்ளடக்கியதாக இருக்கும்.

ஏர்டெல் டிவி செயலியில் அனைத்து உள்ளடக்கமும் ஏர்டெல் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு 2018, ஜுன் மாதம் வரை அறிமுக சிறப்பு சலுகையின் அடிப்படையில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவின் மிகச்சிறப்பான ஸ்மார்ட்போன் வலையமைப்பின் மீது இது வரை பெறாத மிகச்சிறந்த அனுபவத்தை ஏர்டெல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு இதன்மூலம் தருகிறது. ஹாட்ஸ்டார்-ன் ஒளிபரப்புகளை காணத் தொடங்குவதற்கு, ஏர்டெல் டிவி செயலியின் சமீத்திய பதிப்பினை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு தரம் மேம்படுத்தப்பட்ட இந்த உள்ளடக்கத்தை கண்டு மகிழலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)