பங்குச் சந்தை: மாற்­றம் ஒன்றே மருந்துபங்குச் சந்தை: மாற்­றம் ஒன்றே மருந்து ... பி.பி.எப்., முத­லீடு அளிக்கும் பல­ன்கள் பி.பி.எப்., முத­லீடு அளிக்கும் பல­ன்கள் ...
பி.என்.பி.,: விடை தெரியா கேள்­வி­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
02:32

பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யில், 11 ஆயி­ரத்து, 400 கோடி ரூபாய் நிதி மோசடி என்ற தக­வல் வெளி­யா­ன­தும், இந்­திய வங்­கி­கள் மீது நம்­பிக்கை வைத்­தி­ருந்த கோடா­னு­கோடி மத்­தி­ய­மர்­கள் துவண்டு போய்­விட்­ட­னர். அது­வும், 2011 முதல், நிதி மோசடி நடந்து வந்­தது என, அந்த வங்­கி­யின் தலை­வர் சொன்­ன­போது, அதிர்ச்­சியே ஏற்­பட்­டது. எவ்­வ­ளவு தான் மன­தைத் தேற்­றிக் ­கொண்­டா­லும், கேள்­வி­களும், சந்­தே­கங்­களும் எட்­டிப் பார்த்­துக் கொண்டே இருக்­கின்றன.
ஒரு தவறு நடந்து, அத­னால் பெரும் நஷ்­டம் ஏற்­பட்டு, பத்­தி­ரி­கை­களில் தலைப்­புச் செய்­தி­யா­னால் தான், அனை­வ­ரும் விழித்­துக் கொள்­கின்­ற­னர்; தவறு நடந்த விதத்தை ஆராய்­கின்­ற­னர். ஒரு வகை­யில் இதெல்­லாம், ‘போஸ்ட்­மார்ட்­டம்’ தான். பாதிப்பு பாதிப்பு தான்; இழப்பு இழப்பு தான்.
முன்­னெச்­ச­ரிக்­கை­:
குறைந்­த­பட்­சம், இந்­தத் தவ­றி­லி­ருந்து என்ன புரிந்து கொள்­கி­றோம் என்­பதே முக்­கி­யம். முத­லில், இத்­த­கைய மோச­டியை முன்­னெச்­ச­ரிக்­கை­யோடு தடுத்­தி­ருக்க முடி­யாதா? மக்­களின் வரிப்­ப­ணத்தை வீண­டிக்­கா­மல் காப்­பாற்றி இருக்க முடி­யாதா?
முடி­யும்... பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யில் நடை­பெற்ற தவ­றையே எடுத்­துக் கொள்­ளுங்­க­ளேன். நிரவ் மோடி­யைச் சார்ந்த நிறு­வ­னங்­கள், தொடர்ச்­சி­யாக ஏழு ஆண்­டு­க­ளாக, பி.என்.பி.,யில் இருந்து கடன் பொறுப்­பேற்­புக் கடி­தங்­கள் (லெட்­டர் ஆப் அண்­டர்­டேக்­கிங்) பெற்­றுள்ளன. அதற்கு அட­மா­ன­மா­கவோ, மார்­ஜின் பண­மா­கவோ, எந்­தச் சொத்­தும் கோரப்­ப­ட­வில்லை அல்­லது இணைக்­கப்­ப­ட­வில்லை.
கொஞ்­சம் யோசித்­துப் பாருங்­கள், நீங்­கள் ஒரு வீடோ, காரோ வாங்­கி­னால், முதல் வேலை­யாக, அந்­தச் சொத்­து­களை அட­மா­ன­மாக பெற்­றுக்­கொண்டு தானே, பணம் கொடுக்­கின்­ற­னர். ஆனால், அந்த நடை­முறை இங்கே ஏன் பின்­பற்­றப்­ப­ட­வில்லை?
கடன் பொறுப்­பேற்­புக் கடி­தங்­கள் வழங்­கப்­பட்­டது, அந்த வங்­கி­யின் மேல்­மட்ட அதி­கா­ரி­க­ளுக்கே தெரி­யா­தாம். மும்பை கிளை ஒன்­றில் பணி­யாற்­றிய, இரு பணி­யா­ளர் மட்­டுமே இதில் தவறு செய்­த­வர்­க­ளாம். இக்­க­டி­தங்­களின் விப­ரங்­கள், அவர்­க­ளு­டைய கோர் பேங்­கிங் சிஸ்­டத்­தில் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. அத­னால், அவ்­வங்­கி­யின் உள் தணிக்­கை­யிலோ, வெளித் தணிக்­கை­யிலோ இத்­த­கைய மோசடி நடந்­தி­ருப்­பதே வெளியே வர­வில்­லை­யாம். இதெல்­லாம் எப்­படி சாத்­தி­யம்? அப்­ப­டி­யென்­றால், உண்­மை­யில் நடை­பெற்­றது உள்­த­ணிக்­கையா என்ற சந்­தே­கமே எழு­கிறது.
அந்­தக் கடி­தங்­களை நிரவ் மோடி குழு­மத்­துக்கு வழங்­கிய நபர், தொடர்ச்­சி­யாக பல ஆண்­டு­கள், அதே வங்கி கிளை­யில் பணி­யாற்­றி­யுள்­ளார். மூன்­றாண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடை­பெற வேண்­டிய இட­மா­று­தல், அவர் விஷ­யத்­தில் கடை­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. ஏன்?
அவர், ஒவ்­வொரு முறை கடன் பொறுப்­பேற்­புக் கடி­தம் கொடுத்­த­போ­தும், அவ­ருக்கு மேலே இருந்த அதி­கா­ரி­க­ளுக்கோ, நிர்­வா­கத்­துக்கோ, அதன் மீது சந்­தே­கமே எழ­வில்­லை­யாம். ஒன்­றல்ல இரண்­டல்ல, 150க்கும் மேற்­பட்ட பொறுப்­புக் கடி­தங்­கள் கொடுக்­கப்­பட்­டுள்ளன. சர்­வ­தேச வங்கி கிளை­க­ளுக்கு இடை­யே­யுள்ள, ‘ஸ்விப்ட்’ செய்தி தெரி­விக்­கும் முறை­யில், வெளி­நாட்டு வங்­கி­க­ளுக்கு, அந்த நபர், கடன் பொறுப்­பேற்­புக் கடி­தங்­கள் வழங்­கப்­பட்­டதை உறு­திப்­படுத்­தி­யுள்­ளார்.
அதை வேறு யாருமே பார்க்­க­வில்லை; மறு ஆய்வு செய்­ய­வில்லை; கேள்வி கேட்­க­வில்லை. அது, பி.என்.பி.,யின் தலைமை அலு­வ­ல­கத்­துக்கே தெரி­ய­வில்லை. அது­வும் பற்­பல கோடி­களில் வழங்­கப்­பட்ட கடன் பொறுப்­பேற்­புக் கடி­தங்­கள் அவை என்­பது ஞாப­க­மி­ருக்­கட்­டும்.அந்­தக் கடி­தங்­களில் பொறுப்­பேற்­புக் காலம் அதி­க­பட்­சம், 90 முதல், -180 நாட்­கள் தான் இருக்க முடி­யும். ஆனால், அது ஓராண்­டுக்கு வழங்­கப்­பட்­டு உள்ளது. மேலும், அது அடுத்­த­டுத்த ஆண்­டு­க­ளுக்­கும் நீட்­டிக்­கப்­பட்­ட­தாக செய்தி.
பொறுப்­பேற்­புக் கடி­தம் என்­பது வங்கி வழங்­கும் உத்­த­ர­வா­தம். அது வழங்­கப்­பட்­ட­போது தெரி­ய­வில்லை என்­றா­லும், நீட்­டிக்­கப்­பட்ட போதா­வது மத்­திய அலு­வ­ல­கத்­துக்கு உறைத்­தி­ருக்க வேண்­டாமா?வெளி­நாட்­டில் இருக்­கும் இந்­திய வங்­கி­க­ளி­டம், பி.என்.பி.,யின் கடன் பொறுப்­பேற்­புக் கடி­தங்­கள் கொடுக்­கப்­பட்டு, நிரவ் மோடி நிறு­வ­னங்­கள் கடன் பெற்­றுள்ளன. அந்த வங்கி கிளை­க­ளுக்கு துளி­கூட சந்­தே­கம் எழ­வில்­லையா என்ன? இது ஒரி­ஜி­னல் தானா என்று ஏன் ஒரு முறை கூட அவை சரி­பார்க்க துணி­ய­வில்லை?
இதில் ஒவ்­வொரு இடத்­தி­லும் இடை­வெளி, ஓட்டை. அதைச் சிறப்­பாக பயன்­ப­டுத்­தி, இந்­திய மக்­களின் வியர்­வைத் துளி­யால் உரு­வான சேமிப்­பில், சகட்­டு­மே­னிக்கு விளை­யா­டி­யுள்ளன பெரு நிறு­வ­னங்­களும், வங்­கி­களும்.
இன்­னும் இரண்டு செய்­தி­கள்:
இதோடு சேர்த்­துப் பாக்­கும்­படி செய்­தி­ருக்­கின்றன, இன்­னும் இரண்டு செய்­தி­கள். ஒன்று, தென் ஆப்­ரிக்­கா­வில், 21 ஆண்­டு­க­ளாக செயல்­பட்டு வந்த பாங்க் ஆப் பரோடா, தன் செயல்­பா­டு­களை விலக்­கிக்கொண்டு, அந்த நாட்­டில் இருந்தே விலகி விட முடிவு செய்­தி­ருக்­கிறது. அதற்­காக அந்­நாட்டு வங்­கித் துறை­யி­டம் அனு­ம­தி­யும் கோரி­யுள்­ளது.அந்­நாட்­டின் அதி­ப­ராக இருந்த, ஜேக்­கப் ஜுமா­வோடு நெருக்­க­மாக இருந்­த­னர், இந்­திய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த குப்தா சகோ­த­ரர்­கள். தென் ஆப்­ரிக்­கா­வில், குப்தா சகோ­த­ரர்­கள் பல தொழில்­களில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அவர்­க­ளு­டைய வங்­கி­யா­கச் செயல்­பட்­டது பாங்க் ஆப் பரோடா.
அதி­பர் தொடர்ச்­சி­யாக செய்த தவ­று­க­ளுக்கு, குப்தா சகோ­த­ரர்­கள் தோள் கொடுத்­த­தாக குற்­றச்­சாட்டு; அதற்­குத் துணை நின்­ற­தாம் வங்கி. விளைவு, இன்று அதி­பர் பதவி வில­கி­விட, பாங்க் ஆப் பரோ­டா­வால் அங்கே தொடர முடி­ய­வில்லை. நாட்டை விட்டே வெளி­யே­ற முடிவு செய்­துள்­ளது. இன்­னொரு செய்தி இன்­னும் முக்­கி­ய­மா­னது. கடந்த ஐந்து நிதி­யாண்­டு­களில், இந்­திய வங்­கி­களில் நடை­பெற்ற, ‘கடன் மோசடி’களின் மொத்த எண்­ணிக்கை மட்­டும், 8,670. இதில் சம்­பந்­தப்­பட்­டுள்ள தொகை, 61 ஆயி­ரத்து, 260 கோடி ரூபாய். இதில், பி.என்.பி.,யின் சமீ­பத்­திய மோசடி தொகை சேர­வில்லை என்­பது கூடு­தல் தக­வல்.
வரு­முன் காப்­பது:
இன்­றைக்கு, ரிசர்வ் வங்கி விழித்து, இதர வங்­கி­களில் ஏதே­னும் தவ­று­கள் நடந்­தி­ருக்­கின்­ற­னவா என்று ஆரா­யச் சொல்­லி­யி­ருக்­கிறது. ஒவ்­வொரு வங்­கி­யும் நிரவ் மோடி­யின் குழு­மத்­துக்கு ஏதே­னும் கடன் கொடுத்­தி­ருக்­கின்­ற­னவா என்­ப­தைத் தெரி­விக்­க­வும் சொல்­லி­யி­ருக்­கிறது. தவறு செய்­த­வர்­கள் மீது நட­வடிக்­கை­கள் பாய்ந்­துள்ளன.இவை­யெல்­லாம் வந்­த­பின் மேற்­கொள்­ளப்­படும் தீய­ணைப்பு நட­வ­டிக்­கை­கள். வங்­கி­கள் மீது மக்­க­ளுக்கு அவ­நம்­பிக்கை ஏற்­பட்­டு­வி­டக் கூடாது என்ற அக்­க­றை­யால் செய்­யப்­ப­டு­வது.
ஆனால், நமக்­குத் தேவை முன்­னெச்­ச­ரிக்கை, எதிர்­பா­ரா­ததை எதிர்­பார்ப்­பது, நடப்­ப­தற்கு முன் தடுப்­பது, வரு­முன் காப்­பது. பி.என்.பி., விஷ­யத்­தில் இவை நடை­பெ­ற­வில்லை என்­பது தான் வருத்­த­ம­ளிக்­கிறது.
-ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)