இந்தியா போஸ்ட்ஸ் நிறுவனம் ‘ஆன் லைன் சர்வே’ நடத்துகிறதுஇந்தியா போஸ்ட்ஸ் நிறுவனம் ‘ஆன் லைன் சர்வே’ நடத்துகிறது ... இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 65.06 இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 65.06 ...
‘நிடி ஆயோக்’ அமைப்பு திட்டம் பெண் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு தனி பிரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2018
02:52

வாஷிங்டன் : நாட்­டில் உள்ள, பெண் தொழில் முனை­வோரை ஒருங்­கி­ணைத்து, அவர்­களின் வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு, தனி பிரிவு துவக்­கப்­பட உள்­ளது.பெண்­கள் முன்­னேற்­றத்­திற்­கான இத்­திட்­டம் குறித்த, அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை, மத்­திய அர­சின் கொள்கை திட்­டங்­களை வகுக்­கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, விரை­வில் வெளி­யிட உள்­ளது.கடந்த ஆண்டு நவம்­ப­ரில், ஆந்­திர மாநி­லம், ஐத­ரா­பா­தில், சர்­வ­தேச தொழில் முனை­வோர் மாநாடு நடை­பெற்­றது. இதில், அமெ­ரிக்க அதி­பர், டிரம்­பின் மகளும், அவ­ரின் ஆலோ­ச­க­ரு­மான, இவாங்கா டிரம்ப் பங்­கேற்­றார். அவ­ரது அழைப்பை ஏற்று, இந்­தி­யா­வில் இருந்து, இரண்டு டஜ­னுக்­கும் அதி­க­மான பெண் தொழில் முனை­வோர், அமெ­ரிக்­கா­விற்கு வர்த்­தக பய­ணம் மேற்­கொண்டு உள்­ள­னர்.இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு உத­வும், நவீன தொழில்­நுட்­பங்­கள் சார்ந்த வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டுள்ள அவர்­க­ளுக்கு, அமெ­ரிக்க தலை­ந­கர், வாஷிங்­ட­னில், இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்பு சார்­பில், விருந்து அளிக்­கப்­பட்­டது.இதில், ‘நிடி ஆயோக்’ உறுப்­பி­னர், அன்னா ராய் பேசி­ய­தா­வது:இந்­தி­யா­வில் உள்ள பெண் தொழில் முனை­வோர் எண்­ணிக்கை, வேக­மாக அதி­க­ரித்து வரு­கிறது. அவர்­கள், பொது மற்­றும் தனி­யார் துறை­களின் வளர்ச்­சிக்கு, பெரும் பங்­காற்றி வரு­கின்­ற­னர்.எனவே, தற்­போது பெண்­க­ளி­டம், தொழில் துவங்­கு­வ­தற்­கான விழிப்­பு­ணர்வை எற்­ப­டுத்­து­வது தான் முக்­கி­யம். நடை­மு­றை­யில் உள்ள பல்­வேறு திட்­டங்­களை,பெண்­களின் பார்­வைக்கு கொண்டு செல்ல வேண்­டும். அனைத்து துறை­க­ளுக்­கும் இணைப்பு வசதி ஏற்­ப­டுத்தி, ஒருங்­கி­ணைப்பு செய்ய வேண்­டும். தகு­தி­யான கூட்டு நிறு­வ­னங்­களை தேர்வு செய்­யும் வச­தியை வழங்க வேண்­டும். இந்த செயல்­பா­டு­களை தொடர்ந்து கிடைக்­கும் பயன்­களை ஒருங்­கி­ணைத்து பார்த்­தால், பெண் தொழில் முனை­வோ­ரும், நாடும், வளர்ச்சி கண்­டி­ருப்­பதை காண முடி­யும்.இந்த நோக்­கத்­திற்­காக, ‘நிடி ஆயோக்’ அமைப்பு, பெண் தொழில் முனை­வோ­ருக்கு என, தனி பிரிவை துவக்க உள்­ளது.இப்­பி­ரிவு, பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த, பெண் தொழில் முனை­வோ­ரின் சங்­க­ம­மாக இருக்­கும். அவர்­கள், வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்­திக் கொள்­ளும் பொது தள­மாக, இப்­பி­ரிவு விளங்­கும்.இந்­தி­யா­வில், தொழில் துறை­யின் கட்­ட­மைப்பை வலுப்­ப­டுத்தி, அடுத்­த­கட்ட மாற்­றங்­க­ளுக்­கான சீர்­தி­ருத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்றன.பெண் தொழில் முனை­வோரை உரு­வாக்­க­வும், அவர்­களின் வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்­த­வும், இதுவே சரி­யான தரு­ணம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

சாதகமான அரசுமத்­திய அரசு, பெண் தொழில் முனை­வோரை ஊக்­கு­விக்­கும் கொள்கை திட்­டங்­களை அறி­வித்து, செயல்­ப­டுத்தி வரு­கிறது. பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான அரசு, பெண்­க­ளுக்கு சாத­க­மாக உள்­ளது. நான் பங்­கேற்­றுள்ள நிதித் துறை­யில், பெண் தொழில் முனை­வோ­ருக்கு எண்­ணற்ற வாய்ப்­பு­களும், ஏரா­ள­மான அங்­கீ­கா­ரங்­களும் கிடைக்­கின்றன.சீமா பிரேம் தலைமை செயல் அதிகாரி, எப்.ஐ.ஏ., டெக்னாலஜிஸ்

ஆண்களை விஞ்சுவர்இந்­தி­யா­வில், சமூ­கம், அர­சி­யல் மற்­றும் பொரு­ளா­தா­ரத்­தில், பெண்­கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­ற­னர். தொழில் துறை­யில், பிரத்­யேக ஊக்­கு­விப்பு திட்­டங்­களும், வச­தி­களும் அளிக்­கப்­பட்­டால், அவர்­கள் ஆண்­களை விட, வேக­மாக முன்­னே­று­வர்.நவ்தேஜ் சிங் சர்னா அமெரிக்காவுக்கான இந்திய துாதர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)