நிறுவனங்கள் தனி இயக்குனரை இனி சுலபமாக நீக்க முடியாதுநிறுவனங்கள் தனி இயக்குனரை இனி சுலபமாக நீக்க முடியாது ... நிறுவனங்கள் தனி இயக்குனரை இனி சுலபமாக நீக்க முடியாது நிறுவனங்கள் தனி இயக்குனரை இனி சுலபமாக நீக்க முடியாது ...
நிறுவனங்கள் தனி இயக்குனரை இனி சுலபமாக நீக்க முடியாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2018
02:28

புதுடில்லி : கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களில், இரண்­டா­வது முறை­யாக நிய­மிக்­கப்­படும், தனி இயக்­கு­னர்­களை நீக்­கும் விதி­மு­றை­கள், மேலும் கடு­மை­யாக்­கப்­பட்டு உள்­ளன.தற்­போது, ஒரு நிறு­வ­னத்­தில், இரண்­டா­வது முறை­யாக தனி இயக்­கு­னரை நிய­மிக்க வேண்­டு­மென்­றால், பங்­கு­தா­ரர்­க­ளின் சிறப்பு கூட்­டத்­தில், 75 சத­வீ­தம் பேரின் ஆத­ரவை பெற வேண்­டும். அதே சம­யம், தனி இயக்­கு­னரை நீக்க வேண்­டு­மென்­றால், பங்­கு­தா­ரர்­க­ளின் சாதா­ரண கூட்­டத்தை கூட்டி, 50 சத­வீ­தம் பேரின் ஆத­ர­வு­டன் நீக்­க­லாம்.இந்த விதியை, சில நிறு­வ­னங்­கள் தவ­றாக பயன்­ப­டுத்தி, தனி இயக்­கு­னர்­களை நீக்­கு­வது,நிறு­வன விவ­கா­ரங்­கள்அமைச்­ச­கத்­தின் கவ­னத்­திற்கு வந்­தது.இதை­ய­டுத்து, இரண்­டா­வது முறை­யாக நிய­மிக்­கப்­படும், தனி இயக்­கு­னரை நீக்க முடி­வெ­டுத்­தால், அவர் தரப்பு வாதத்தை கேட்க, அவ­கா­சம் அளிக்க வேண்­டும். அதில் திருப்­தி­யின்றி நீக்க முடிவு செய்­தால், சிறப்பு கூட்­டத்தை கூட்டி, 75 சத­வீத பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளின் ஆத­ரவை பெற வேண்­டும் என, விதி­மு­றை­யில் திருத்­தம் செய்­யப்­பட்டு உள்­ளது.இந்த நட­வ­டிக்கை, நிறு­வன இயக்­கு­னர் குழு­வின் அதி­கா­ரம் சீரா­க­வும், நிர்­வா­கம் சிறப்­பாக நடை­பெற உத­வும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)