தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு ... படிக்காதவரை விட படித்தோர் அதிகம் வேலையின்றி உள்ளனர் படிக்காதவரை விட படித்தோர் அதிகம் வேலையின்றி உள்ளனர் ...
ரோல்ஸ் ராய்ஸ்: 8வது தலை­முறை, ‘பேன்­டம்’ அறி­மு­கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2018
04:30

சொகுசு கார் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, ரோல்ஸ் ராய்ஸ், அதன், ‘பேன்­டம்’ செடா­னின், 8வது தலை­முறை காரை, சென்­னை­யில் அறி­மு­கப்­படுத்­தி­யது. இது, முந்­தைய தலை­மு­றை­க­ளைச் சேர்ந்த, பேன்­டம் கார்­களை விட, 30 சத­வீ­தம், எடை குறைவு.மேலும், 600 மீ., தொலை­விற்கு வெளிச்­சத்தை பாய்ச்­சும், ‘லேசர்’ முகப்பு விளக்கு பொருத்­தப்­பட்டு உள்­ளது. இந்த காரின் ஷோரூம் விலை, 9.5 கோடி ரூபா­யில் இருந்து துவங்­கு­கிறது. இதில், 563 எச்.பி., திறனை உரு­வாக்­கும், ‘6.75 லி., டுவின் டர்போ சார்ஜ்ட் இன்ஜின்’ பொருத்­தப்­பட்டு உள்­ளது. அத­னால், 100 கி.மீ., வேகத்தை, 5.4 வினா­டி­களில் எட்­டும்.இது குறித்து, ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறு­வ­னத்­தின், ஆசிய – பசி­பிக் பிராந்திய இயக்­கு­னர், பால் ஹாரிஸ் கூறு­கை­யில், ‘‘சென்னை மற்­றும் ஐத­ரா­பா­தில், ரோல்ஸ் ராய்ஸ் நிறு­வ­னத்­தின் பிரத்­யேக டீல­ராக, குன் எக்ஸ்­கு­ளூ­சிவ் சிறப்­பாக செயல்­ப­டு­கிறது. தென் மாநி­லங்­களில், எங்­கள் விற்­பனை அதி­க­ரித்து வரு­கிறது.‘‘காரின் விலை­யில், 214 சத­வீ­தம், இறக்­கு­மதி வரி, ஜி.எஸ்.டி., ஆகி­யவை விதிக்­கப்­பட்டு உள்­ளது. இது, எங்­கள் வர்த்­த­கத்­திற்கு உகந்­தது அல்ல,’’ என்­றார்.
பி.எம்.டபிள்யு.,
சென்­னை­யில், ‘6 ஜி.டி.,’ அறி­மு­கம்பி.எம்.டபிள்யு., நிறு­வ­னம், ஜி.டி., அல்­லது, ‘6 சீரிஸ் கிரான் டுரிஸ்மோ’ சொகுசு, ‘லிப்ட் பேக்’ காரை அறி­மு­கம் செய்­துள்­ளது. டில்­லி­யில் நடந்த, ‘ஆட்டோ எக்ஸ்போ’ கண்­காட்­சி­யில், இது பலரை கவர்ந்­தது. பி.எம்.டபிள்யு.,வின், ‘5 சீரிஸ்’ காருக்கு மாற்­றாக, களம் கண்­டுள்ள இந்த, ‘6 சீரிஸ் ஜி.டி.,’ போட்­டி­யா­ள­ரான, ‘மெர்­சி­டெஸ் பென்ஸ்’ நிறு­வ­னத்­தின், நீண்ட, ‘வீல்­பேஸ்’ உடைய காரான, சக்­கைப் போடு போடும், ‘இ – கிளாஸ்’க்கு சவால் விடு­மாம். அதில் உள்ள பல அம்­சங்­க­ளு­டன், விசா­ல­மான பின்­புற இருக்­கை­கள் அமைந்­தி­ருப்­ப­தும், இதற்கு கூடு­தல், ‘பிளஸ்!’இந்­தி­யா­வில் தற்­போது, ‘பெட்­ரோல் வெர்­ஷன்’ மட்­டும் சந்­தைக்கு வந்­துள்­ளது. 2018 பிற்­ப­கு­தி­யில், ‘டீசல் வெர்­ஷன்’ வெளி­யாக உள்­ளது. இவை இரண்­டும், சென்­னை­யில் உள்ள ஆலை­யில் தான், ‘அசெம்­பிள்’ செய்­யப்­படும். தற்­போது, டில்­லி­யில் அறி­மு­க­ மாகி உள்ள, பெட்­ரோல் வெர்­ஷன், சென்­னை­யில், மார்ச், 3ல் அறி­மு­க­மாக உள்­ளது.இதில், 258 எச்.பி., திறனை உரு­வாக்­கும், ‘ 2.0 லி., டர்போ சார்ஜ்ட், நான்கு சிலிண்­டர் மோட்­டார் இன்­ஜின்’ பொருத்­தப்­பட்டு உள்­ளது; எட்டு கியர்­கள் உள்ளன. மற்­ற­படி, ‘டச் அண்டு ஜெஸ்­சர் ஐடி­ரைவ் இன்­போ­டெ­யின்­மென்ட்’ உள்­ளிட்ட, பல நவீன வச­தி­கள் உள்ளன. டில்லி ஷோரூ­மில், இதன் விலை, 58.9 லட்­சம் ரூபா­யில் இருந்து துவங்­கு­கிறது.
என்­பீல்டு
‘தண்­டர் பேர்ட் 350 எக்ஸ்; 500 எக்ஸ்’ அறி­மு­கம்பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்ட, ராயல் என்­பீல்டு நிறு­வ­னத்­தின்,‘தண்­டர்­பேர்ட் 350 எக்ஸ், 500 எக்ஸ்’ ஆகிய இரு புல்­லட்­டு­கள், பிப்., 28ல் அறி­மு­க­மாக உள்ளன. இதில், இன்­ஜின், கியர் பாக்ஸ் ஆகி­ய­வற்றில், எந்த மாற்­ற­மும் செய்­யப்­ப­ட­வில்லை என, தெரி­கிறது. எனி­னும் புதிய, ‘ஹேண்­டில் பார், சீட்’ ஆகி­யவை, முந்­தைய மாடல்­களில் இருந்து, இதை வேறு­ப­டுத்தி காட்­டு­கின்றன. இதில், கறுப்பு நிற, ‘அலாய்’ சக்­க­ரங்­கள், ‘டியூப்­லெஸ் டயர்’கள் இடம் பெற்­றுள்ளன. மேலும், இன்­ஜி­னின் நிற­மும், சில்­வர் நிறத்­தில் இருந்து, கறுப்பு நிறுத்­திற்கு மாறி உள்­ளது. மற்­ற­படி, ‘எல்.இ.டி., டேடைம் ரன்­னிங் லைட், எல்.இ.டி., டெயில் லேம்ப்’ ஆகிய சிறப்பு அம்­சங்­களும் உள்ளன.இந்த பைக்­கு­கள், இளை­ஞர்­களை மன­தில் வைத்து தயா­ரிக்­கப்­பட்டு உள்­ள­தால், முன்­புற சக்­க­ரத்­தின் அக­லம், 19 அங்­கு­லத்­தில் இருந்து, 18 அங்­கு­ல­மாக குறைக்­கப்­பட்டு இருக்­கக்­கூ­டும் என, தெரி­கிறது. அவ்­வாறு குறைத்­தால், இளை­ஞர்­கள் லாவ­க­மாக ஓட்­டு­வ­தற்கு உத­வி­யாக இருக்­கு­மாம். வழக்­கம் போல், ‘டிஸ்க் பிரேக்’குகள் உண்டு. ஆனால், ‘ஆன்டி லாக் பிரேக்­கிங்’ வசதி இல்லை.
பார்ஷ்
இனி டீச­லுக்கு, ‘தடா’ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த, சொகுசு கார் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, ‘பார்ஷ்’ இனி, டீசல் வாக­னங்­களை உற்­பத்தி செய்­வ­தில்லை என, முடி­வெ­டுத்­துள்­ளது. வாடிக்­கை­யா­ளர்­கள், டீசல் கார்­களை விரும்­பு­வது குறைந்து வரு­கிறது; இந்­தியா உள்­ளிட்ட பல நாடு­களில், புகை மாசு கார­ண­மாக, டீசல் கார் மாசுக்­கான விதி­மு­றை­கள் கடு­மை­யாக்­கப்­ப­டு­கின்றன. அத­னால், இந்த முடிவை எடுத்­தி­ருப்­ப­தாக, பார்ஷ் தெரி­வித்­து உள்­ளது.இந்த முடிவை எடுப்­ப­தற்கு முன்­னோட்­ட­மாக, அது, கடை­சி­யாக அறி­மு­கம் செய்த, இரு டீசல் மாடல்­க­ளான, ‘மகான் எஸ் டீசல்,பன­மேரா’ ஆகி­ய­வற்­றின் உற்­பத்­தியை நிறுத்­தி­யது. மேலும், 2002ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட அந்­நி­று­வ­னத்­தின், டீசல், எஸ்.யு.வி.,யான, ‘கேயன்’ வாக­னத்­தின் புதிய பதிப்பை வெளி­யி­டு­வதை, ‘பார்ஷ்’ தவிர்த்த போதே, இதை உணர முடிந்­த­தாக, ஆட்டோ மொபைல் துறை­யி­னர் கூறு­கின்றனர்.

டிரை­யம்ப்
பிப்., 27ல், ‘ஸ்பீடு மாஸ்­டர்’ அறி­மு­கம்இங்­கி­லாந்­தைச் சேர்ந்த, மோட்­டார் பைக் நிறு­வ­ன­மான, ‘டிரை­யம்ப்’ அதன், ‘போன்­னெ­வில் ஸ்பீ­டு­ மாஸ்­டர்’ பைக்கை, 2017ல், இந்­தி­யா­வில் காட்­சிப்­ப­டுத்­தி­யது. அதன் அறி­மு­கத்தை, பைக் பிரி­யர்­கள் ஆவ­லு­டன் எதிர்­பார்த்து உள்­ள­னர். இந்­நி­லை­யில், போன்­னெ­வில் பைக்கை, பிப்., 27ல், சந்தை­யில் அறி­மு­கம் செய்­ய­வி­ருப்­ப­தாக, ‘ராயல் என்­பீல்டு’ அறி­வித்­துள்­ளது.இது, அதன் மற்­றொரு மாட­லான, ‘பாப்­பர்’ பைக்­கின், உட­ல­மைப்பை தழுவி உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது. இதன் விலை, இன்­னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. எனி­னும், இங்­கி­லாந்­தில் விற்­கப்­படும் விலையை வைத்து பார்க்­கும் போது, இந்­தி­யா­வில், இதன் ஷோரூம் விலை, 10.5 லட்­சம் ரூபா­யில் இருந்து துவங்­கக்­கூ­டும் என, கணிக்­கப்­பட்டு உள்­ளது. இதன் முன்­புற டயர், 153 அங்­குல அக­ல­மும், பின்­புற டயர், 150 அங்­குல அக­ல­மும் உடை­ய­தாக இருக்­கின்றன.இதில், 776 எச்.பி., திறனை உரு­வாக்­கக்­கூ­டிய, ‘1,200 ‘சிசி’ பேர­லல் டுவின் இன்­ஜின்’ பொருத்­தப்­பட்டு உள்­ளது. இது, முந்­தைய மாட­லான, ‘போன்­னெ­வில் டி 120’யை விட, 10 சத­வீ­தம் சக்­தி­மிக்­கது என, ‘டிரை­யம்ப்’ கூறு­கிறது. இதன் எடை­யும், அதை விட, 8 கிலோ அதி­கம். மொத்த எடை, 245.5 கிலோ.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)