ஏப்., 1 முதல் மீண்டும் ‘இ – வே’ ரசீது அறிமுகம்ஏப்., 1 முதல் மீண்டும் ‘இ – வே’ ரசீது அறிமுகம் ... பங்குச் சந்தை பங்குச் சந்தை ...
முதலீட்டாளர் – கடன்தாரர் நலன் கருதி ரிசர்வ் வங்கி நடவடிக்கை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மீதான புகாரை விசாரிக்க மத்தியஸ்த அமைப்பு உருவாக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2018
04:34

புதுடில்லி : வங்கி சாரா நிதி நிறுவ­னங்­கள் மீதான, முத­லீட்­டா­ளர்­களின் புகார்­களை விசா­ரிக்க, மத்­தி­யஸ்த அமைப்பு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக, ரிசர்வ் வங்கி தெரி­வித்துள்­ளது.தற்­போது, வங்கி வாடிக்­கை­யா­ளர் புகாரை விசாரிக்க, மத்­தி­யஸ்த அமைப்பு உள்ளது. ஆனால், வங்கி சாரா நிதி நிறு­வ­னம் மீது புகார் தெரி­விக்க, மத்தியஸ்த அமைப்பு இல்லை.இதன் கார­ண­மாக, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­களின் சேவை குறை­பா­டு­களுக்கு தீர்வு காண முடி­யா­மல், வாடிக்­கை­யா­ளர்­கள் தவிக்­கின்­ற­னர்.அத­னால், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள் மீதான புகார்­களை விசா­ரிக்க, மத்­தி­யஸ்த அமைப்பை, ரிசர்வ் வங்கி ஏற்­ப­டுத்த உள்­ளது. இது குறித்து, இவ்­வங்கி வெளி­யிட்­டு உள்ள அறிக்கை:ரிசர்வ் வங்­கி­யில், 11,500 வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள் பதிவு செய்­துள்ளன. இவற்­றில், 168 நிறு­வ­னங்­க­ளுக்கு மட்டும், ‘டிபா­சிட்’ திரட்­டு­வ­தற்­கான அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட்டு உள்­ளது.இத்­த­கைய நிறு­வ­னங்­கள் மீது, வட்­டித் தொகையை சரி­வர வழங்­கா­தது; முதிர்ச்­சிக்கு பின்­னும் டிபா­சிட்டை திரும்ப தரா­மல் இழுத்­த­டிப்­பது; ஒரு­சில சேவை­க­ளுக்கு, முறை­யற்ற வகை­யில் அதிக கட்­ட­ணம் வசூ­லிப்­பது போன்ற புகார்­கள் உள்ளன.மேலும், வாடிக்­கை­யாளர்­கள் புரிந்து கொள்ளும் வகை­யில், பிராந்­திய மொழி­யில், நிதிச் சேவை சார்ந்த தக­வல்­களை தெரி­விப்­ப­தில்லை என்ற புகா­ரும் உள்­ளது.இது போன்ற புகார்­களை விசா­ரிக்க, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­களுக்கு என, பிரத்­தே­யக மத்­தி­யஸ்த மையம் அமைக்­கப்­ப­டு­கிறது.வாடிக்­கை­யா­ளர், வங்கி சாரா நிதி நிறு­வ­னத்­தின் சேவை­யில் குறை­பாடு இருந்­தால், முத­லில், அந்­நிறு­வ­னத்­தில் புகார் அளிக்க வேண்­டும். ஒரு மாதத்­திற்­குள் புகா­ருக்கு தீர்வு காணா­விட்­டால், வாடிக்­கை­யா­ளர், மத்­தி­யஸ்த மையத்­தில் புகார் அளிக்­க­லாம்.வாடிக்­கை­யா­ளர்­கள், இச்­சே­வையை இல­வ­ச­மாக பெற­லாம். சம­ரச தீர்­வில் உடன்­பாடு ஏற்­ப­டா­த­பட்­சத்­தில், மேல் முறை­யீடு செய்­வ­தற்­கான வச­தி­யும் ஏற்­ப­டுத்­தப்­ படும்.முதற்­கட்­ட­மாக, டிபா­சிட் திரட்­டும் வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள் மட்­டும், இத்­திட்­டத்­தின் கீழ் கொண்டு வரப்­பட்­டுள்ளன. இதை­ய­டுத்து, 1 கோடி ரூபாய்க்­கும் மேற்­பட்ட சொத்து மதிப்­பு­டன், குறிப்­பிட்ட வாடிக்­கை­யா­ளர் எண்­ணிக்­கைக்கு மேல் உள்ள நிறு­வ­னங்­களும் இணைக்­கப்­படும்.அடிப்­படை கட்­ட­மைப்பு துறை சார்ந்த மற்­றும் திவால் நட­வ­டிக்­கைக்கு உள்­ளான, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு, இத்­திட்­டம் பொருந்­தாது. சென்னை, கோல்­கட்டா, மும்பை மற்­றும் டில்­லி­யில், மத்­தி­யஸ்த மையங்­கள் செயல்­படும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

எதற்கு புகார் அளிக்கலாம்? டிபா­சிட் மீது வட்டி வழங்க தவ­றி­னால் அல்­லது தேவை­யின்றி தாம­தப்­ப­டுத்­தி­னால் ரிசர்வ் வங்கி விதி­க­ளுக்கு மாறான வட்டி விகி­தம் நிர்­ண­யித்­தால் டிபா­சிட்டை திரும்­பத் தரு­வதை தாம­தப்­படுத்தினால் வாடிக்­கை­யா­ள­ரின் முன்­தே­தி­யிட்ட காசோ­லையை, வங்­கி­யில் செலுத்­தா­மல் அல்­லது செலுத்த தாம­தித்­தால் ஆண்டு வட்டி உள்­ளிட்ட விப­ரங்­க­ளு­டன், ஒப்பு­தல் அளித்த கடன் தொகையை, எழுத்­துப்­பூர்­வ­மாக வழங்­கத் தவ­றி­னால் ஒப்­பு­தல் அளித்த அல்­லது மறுக்­கப்­பட்ட கடன் மற்­றும் விதி­மு­றை­களை, கடன் பெறு­வோர் புரிந்து கொள்­ளும் வகை­யில், தாய்­மொ­ழி­யில் வழங்­கா­மல் இருந்­தால் ஒப்­பு­தல் அளித்த கடன் தொடர்­பான விதி­முறை­களில் செய்­யும் மாற்­றங்­களை, வாடிக்­கை­யாள­ரின் தாய்­மொழி அல்­லது அவ­ருக்கு புரி­யும் மொழி­யில் வழங்க தவ­றி­னால் கடன் தொகையை திரும்ப செலுத்­திய பின்­னும், உத்­த­ர­வாத ஆவ­ணங்­களை திரும்ப வழங்­காமல் இருந்­தால் முன்­ன­றி­விப்­பின்றி கடன்­தா­ரர் அல்­லது வாடிக்­கை­யா­ள­ருக்கு கட்­டண மாற்­றங்­களை அறி­விக்க தவ­றி­னால் கடனை திரும்­பச் செலுத்த தவ­று­வோ­ரின் பிணைச் சொத்­து­களை கைய­கப்­ப­டுத்­து­வது; அதற்­கான நடை­முறை; கடன்­தா­ர­ருக்கு வழங்­கப்­படும் கால அவ­கா­சம்; கடனை திரும்­பச் செலுத்த அளிக்­கப்­ப­டும் இறுதி வாய்ப்பு உள்ளிட்ட விப­ரங்­கள் அனைத்­தும், கடன்ஒப்­பந்­தத்­தில் வெளிப்­ப­டை­யாக தெரி­விக்­கப்­படவில்லை என்­றால், புகார் அளிக்­க­லாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)