பங்குச் சந்தைபங்குச் சந்தை ... வங்கிகள் தனியார்மயம் சரியான தீர்வா? வங்கிகள் தனியார்மயம் சரியான தீர்வா? ...
இழப்பை தவிர்க்க என்ன வழி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2018
04:43

ஒரே மாதத்­தில் பல மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­களில் நிகழ்ந்­தி­ருக்­கும் மதிப்பு சரிவு, சந்­தை­யின் குறி­யீ­டான நிப்­டி­யின் வீழ்ச்­சியை விட அதி­க­மாக அமைந்­துள்­ளது. சில திட்­டங்­கள், குறி­யீட்டை விட குறை­வா­கவே சரிந்­துள்­ளன.இந்த சரி­வு­க­ளின் தாக்­கம் எத்­த­கை­யது? நாம் புரிந்து கொள்ள வேண்­டி­யது என்ன? பொது­வாக சரி­வு­களும், ஏற்­றங்­களும் சந்­தை­யில் தவிர்க்க முடி­யா­தவை என்­பதை ஏற்­றா­லும், இந்த மாற்­றங்­களை கவ­ன­மாக ஆய்வு செய்ய வேண்­டும். முக்­கி­ய­மாக, சரிவை வகைப்­ப­டுத்­து­வது அவ­சி­யம். நிதி மேலா­ள­ரின் முத­லீட்டு தேர்­வு­கள் மிக கவ­ன­மா­க­வும், இழப்பை தவிர்க்­கும் நோக்­கோ­டும் எடுக்­கப்­பட்­டி­ருந்­தால், அதன் தாக்­கம் ஒரு வகை. அத­னால், நெடுங்­கால நன்மை ஏற்­ப­டக்­கூ­டும்.தொடர்ந்து பண வரத்து அதி­கம் இருப்­ப­தால், அதே பங்­கு­களை தொடர்ந்து வாங்கி, அவற்­றில் விலைச் சரிவை தவிர்க்­கும் வண்­ணம் நிதி மேலா­ளர்­கள் முத­லீடு செய்­தால், அதன் தாக்­கம் இரண்­டாம் வகை. முதல் வகை தாக்­கம், முத­லீட்­டா­ள­ரின் நலம் காக்­கும் வகை­யில் அமை­யும். ஆனால் இரண்­டாம் வகை தாக்­கம், குறு­கிய காலத்­தில் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு நன்மை செய்­தா­லும், நெடுங்­கால போக்­கில் நட்­டம் ஏற்­ப­டுத்­தக்­கூ­டும். அடிப்­ப­டை­யில், ஒரு பங்­கின் மதிப்பை சரி­வில் இருந்து காப்­பது, அந்த நிறு­வ­னத்­தின் வளர்ச்சி மட்­டுமே. இந்த புரி­தல் சில நேரங்­களில் நிதி மேலா­ளர்­க­ளால் புறக்­க­ணிக்­கப்­பட்டு விடு­வதே கடந்த கால வர­லாறு. அப்­படி செய்­யும் போது, அதுவே பிற்­கா­லத்­தில் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு நட்­ட­மும், வலி­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதை அனை­வ­ரும் அறி­வோம். அடிப்­ப­டை­யில், தொடர் விலைச் சரி­வு­கள் முத­லீட்டு கொள்­கை­கள் சார்ந்து பல கேள்­வி­களை எழுப்­பு­வது தவிர்க்க முடி­யா­தது. தொடர்ந்து மதிப்பு இழக்­கும் பல மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­க­ளின் முத­லீட்டு தேர்­வு­கள் மற்­றும் நிதி ஒதுக்­கீட்டு முறை­கள் சார்ந்த கவ­லை­கள் தவிர்க்க முடி­யா­தவை. தற்­போது, அத்­த­கைய சூழல் ஏற்­ப­ட­வில்லை என்­றா­லும், முத­லீட்­டா­ளர்­களும், ஆலோ­ச­கர்­களும் பங்கு திட்­டங்­க­ளின் முத­லீ­டு­களை தொடர்ந்து அதிக கவ­னத்­து­டன் அணுக வேண்­டும். வருங்­கால ஆபத்­து­களை தவிர்ப்­ப­தற்கு முன்­னு­ரிமை கொடுப்­பது, ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரின் கடமை. ஆலோ­ச­கர்­களும் அதிக கவ­னம் செலுத்தி, முத­லீட்­டா­ளர் நலம் பேண வேண்­டிய நேரம் இது. சென்ற ஆண்டு அதிக லாபம் ஏற்­ப­டுத்­திய பல திட்­டங்­களில் இந்த ஆண்டு நட்­டம் ஏற்­ப­ட­லாம். இவற்­றில் இருந்து முத­லீட்­டா­ளர்­களை வெளி­யே­றச் செய்­வது அவ­சி­யம். தொடர்ந்து பங்கு நிதி தேர்­வு­களை பெரு நிறு­வ­னங்­கள் சார்ந்து அமைத்­துக் கொண்­டால், பொரு­ளா­தா­ரம் மீண்­டும் வளர்ச்­சிப் பாதைக்கு திரும்­பும்­போது, முத­லீட்­டா­ளர்­கள் அதி­கம் பலன் அடை­வர். சிறு மற்­றும் குறு நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­யும் திட்­டங்­களில் இருந்து வெளி­யே­று­வ­தற்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட வேண்­டும். லாபம் காப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து நடக்க வேண்­டிய நேரத்­தில், மேலும் லாபம் தேடு­வதை தவிர்ப்­பது மிக அவ­சி­யம். அத்­த­கைய தரு­ணங்­களில், முத­லீட்டு தேர்­வு­களை மிக சாதுர்­ய­மா­க­வும், கவ­ன­மா­க­வும் எடுக்க வேண்­டும். கடந்த கால லாபங்­களை சார்ந்து மட்­டுமே மியூச்­சு­வல் பண்டு முத­லீட்டு முடி­வு­களை எடுக்­கும் போக்கை கடந்து செல்ல வேண்­டும். முத­லீட்டு முடி­வு­கள் நட்­டம் ஏற்­ப­டுத்­தாத வண்­ணம் அமை­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து நடக்க வேண்­டிய காலம் இது. அப்­படி உணர்ந்து நடந்து கொள்­வோர், வருங்­கா­லத்­தில் வருந்­தும் சூழலை தவிர்ப்­பது உறுதி.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)