தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ... கார், இருசக்கர வாகன விற்பனை சூடு பிடித்தது வாகன உதிரி பாகங்கள் துறையின் வருவாய் மேலும் உயரும்: ‘இக்ரா’ கார், இருசக்கர வாகன விற்பனை சூடு பிடித்தது வாகன உதிரி பாகங்கள் துறையின் ... ...
அமெரிக்காவின் உருக்கு வரி பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2018
00:17

வாஷிங்டன்:‘அமெ­ரிக்கா, உருக்கு, அலு­மி­னி­யம் ஆகி­ய­வற்­றின் இறக்­கு­ம­திக்கு வரி விதித்­தால், அது, அந்­நாட்­டுக்­கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்’ என, பன்­னாட்டு நிதி­யம் எச்­ச­ரித்­து உள்­ளது.

அமெ­ரிக்க அதி­பர், டொனால்டு டிரம்ப், ‘உள்­நாட்டு நிறு­வ­னங்­களை பாது­காக்க, உருக்கு மற்­றும் அலு­மி­னி­யத்­திற்கு முறையே, 25 மற்­றும், 10 சத­வீ­தம் இறக்­கு­மதி வரி விதிக்­கப்­படும்’ என, அறி­வித்­துள்­ளார்.இது, அமெ­ரிக்­கா­வுக்கு உருக்கு, அலு­மி­னி­யம் ஆகி­ய­வற்றை ஏற்­று­மதி செய்­யும், சீனா, கனடா, ஆஸ்­தி­ரே­லியா, மெக்­சிகோ மற்­றும் ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு நாடு­க­ளுக்கு, கடும் கோபத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.
‘இந்த வரி விதிப்பு, ஏற்க முடி­யா­தது’ என, கனடா, ஜெர்­மனி ஆகி­யவை தெரி­வித்து உள்ளன. ‘அமெ­ரிக்­கா­வுக்கு தகுந்த பதி­லடி கொடுக்­கப்­படும்’ என, ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு ஆணைய தலை­வர், ஜீன் கிளாட் ஜன்­கர் எச்­ச­ரித்து உள்­ளார்.

இதற்கு, டிரம்ப், ‘டுவிட்­ட­ரில்’ எகத்­தா­ள­மாக கூறி­யி­ருப்­ப­தா­வது:வெளி­நா­டு­கள், வரிச்­ச­லுகை என்ற ஆயு­தத்தை பயன்­ப­டுத்தி, அமெ­ரிக்க பொரு­ளா­தா­ரத்­திற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்றன. வரி­யின்றி இறக்­கு­ம­தி­யா­கும் பொருட்­க­ளால், அமெ­ரிக்கா கோடிக்­க­ணக்­கான டாலர்­களை இழக்­கிறது.

உள்­நாட்டு நிறு­வ­னங்­களும், அதை சார்ந்­துள்ள தொழி­லா­ளர்­களும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.இதை தடுக்­கவே, உருக்கு, அலு­மி­னி­யத்­திற்கு இறக்­கு­மதி வரி விதிக்க உள்­ளோம்.இதற்கு, வெளி­நா­டு­கள் பதி­லடி கொடுக்க விரும்­பி­னால், அமெ­ரிக்கா அதை வர­வேற்­கும். இந்த வர்த்­த­கப் போரில், அமெ­ரிக்­காவே இறு­தி­யில் வெல்­லும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, பன்­னாட்டு நிதி­யத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் கெரி ரைஸ் கூறி­ய­தா­வது:டிரம்ப் முடி­வால், வெளி­நா­டு­க­ளுக்கு மட்­டு­மின்றி, அமெ­ரிக்­கா­வுக்­கும் பாதிப்பு உண்­டா­கும். அந்­நாட்­டில், அதி­க­ள­வில் உருக்கு மற்­றும் அலு­மி­னி­யம் பயன்­ப­டுத்­தும், கட்­டு­மா­னம் மற்­றும் தயா­ரிப்­புத் துறை­கள் பாதிக்­கப்­படும்.அது­மட்­டு­மின்றி, அமெ­ரிக்­காவை பின்­பற்றி, இனி அந்­தந்த நாடு­கள், உள்­நாட்டு நலனை பாது­காப்­ப­தாக கூறி, இத்­த­கைய நடை­மு­றை­களை கையா­ளும். இது, சர்­வ­தேச அள­வில், வர்த்­தக ஒழுங்­கு­மு­றையை சீர்­கு­லைக்­கும்.

அத­னால், அமெ­ரிக்கா, இப்­பி­ரச்­னை­யில் பிற நாடு­க­ளு­டன் இணைந்து பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காண வேண்­டும்.இவ்­வாறு அவர் தெரி­வித்து உள்­ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)