என்.பி.எஸ்., திட்­டத்தில்  சம பங்கு முத­லீடு உயர வாய்ப்பு என்.பி.எஸ்., திட்­டத்தில் சம பங்கு முத­லீடு உயர வாய்ப்பு ... சிறப்பு பொருளாதார மண்டலம் சீரமைப்பு குழு அமைகிறது சிறப்பு பொருளாதார மண்டலம் சீரமைப்பு குழு அமைகிறது ...
பங்குச் சந்தை வளர்ச்­சிக்கு உத­வாது வர்த்­தக போர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2018
00:41

அமெ­ரிக்­கா­வில் இறக்­கு­ம­தி­யா­கும் உருக்­குக்கு, 25 சத­வீ­த­மும், அலு­மி­னி­யத்­துக்கு, 10 சத­வீ­த­மும் சுங்க வரி விதிக்­கப்­படும் என, அமெ­ரிக்க அதி­பர், டொனால்ட் டிரம்ப் அறி­வித்­த­வு­டன், பல நாடு­க­ளின் பங்­குச் சந்­தை­களில் பெரும் வீழ்ச்சி. கூடவே, ‘வர்த்­தக போர்­கள் நல்­லவை; அவற்­றில் வெற்றி பெறு­வ­தும் எளிது’ என, பேசி­யி­ருக்­கி­றார். இதற்கு, பல முக்­கிய நாடு­கள் கடு­மை­யாக எதிர்­வி­னை­யாற்­றி­யுள்­ளன.
டிரம்­புக்கு என்ன ஆச்சு?

டொனால்டு டிரம்ப், அமெ­ரிக்­கா­வில் அதி­பர் ஆனது முதல், ‘அமெ­ரிக்­காவே முத­லில்’ என்ற வர்த்­தக கொள்­கையை கடை­பி­டித்து வரு­கி­றார். அதன் ஒரு பகு­தி­யாக, உள்­நாட்­டில் வேலை­வாய்ப்­பு­க­ளைக் காப்­பாற்ற வேண்­டும்; தொழில்­களை ஊக்­கு­விக்க வேண்­டும் என, முயற்சி செய்து வரு­கி­றார். இதற்­குத் தடை­யாக இருக்­கக்­கூ­டிய விஷ­யங்­களை உடைத்து வரு­கி­றார்.பின்­னணிஅமெ­ரிக்க உருக்கு மற்­றும் அலு­மி­னி­யத் துறை­யி­லும் பெரிய சரிவு ஏற்­பட்­டுள்­ளது. 2000ம் ஆண்­டில், 112 மில்­லி­யன் டன்­னாக இருந்த உருக்கு உற்­பத்தி, 2016ல், 86.5 மில்­லி­யன் டன்­னா­கக் குறைந்து விட்­டது. 1.35 லட்­சம் பேர் வேலை செய்த இடத்­தில் இப்­போது, 83 ஆயி­ரம் பேர் மட்­டுமே வேலை செய்­கின்­ற­னர்.

இதே­போல், அலு­மி­னிய உற்­பத்­தி­யி­லும் பெரும் சரிவு.முக்­கிய கார­ணம், வெளி­நா­டு­களில் இருந்து அமெ­ரிக்­கா­வில் இறக்­கு­மதி செய்­யப்­படும் உருக்கு மற்­றும் அலு­மி­னி­யத்­தின் விலை, மிக­வும் குறைவு. அந்த இறக்­கு­ம­தி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தி­னால், உள்­நாட்­டுத் தொழில்­கள் லாப­க­ர­மா­கும் என்ற எண்­ணத்­தில், டிரம்ப், வரி விதிக்­கும் முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றார்.

யாருக்கு பாதிப்பு?

முதல் பாதிப்பு, அமெ­ரிக்­கா­வுக்கு அரு­கி­லேயே இருக்­கும் கன­டா­வுக்­குத் தான். தன் உருக்கு உற்­பத்­தி­யில், 90 சத­வீ­தத்­தை­யும், அலு­மி­னிய உற்­பத்­தி­யில், 41 சத­வீ­தத்­தை­யும் அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்­கிறது, கனடா. இறக்­கு­ம­திக்கு வரி என்­ற­வு­டன், கனடா அல­று­கிறது.இரண்­டா­வது இடத்­தில் இருப்­பது, ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­கள். அதற்கு அடுத்த நிலை­யில் தான், தென் கொரியா, மெக்­சிகோ, பிரே­சில், ஜப்­பான், தைவான், சீனா, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடு­கள் உள்­ளன.

ஆரம்­பத்­தில் இருந்தே, சீனா­வுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை டிரம்ப் மேற்­கொண்டு வரு­கி­றார். இந்த நட­வ­டிக்­கை­யும் சீனா­வுக்கு எதி­ரா­னது என, கரு­தப்­பட்­டது. ஆனால், அப்­படி நடக்­க­வில்லை. சீனா­வின் உருக்கு உற்­பத்­தி­யில், 50 சத­வீ­தத்­திற்கு மேல், அவர்­க­ளு­டைய தேவைக்கே பயன்­ப­டு­கிறது.

ஏன் இந்த நட­வ­டிக்கை?

ஐரோப்­பிய ஒன்­றி­யம் உட்­பட பல நாடு­களில், அமெ­ரிக்­கா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் பொருட்­க­ளுக்கு கடு­மை­யான வரி விதிக்­கப்­ப­டு­கிறது. இந்­தி­யா­வில் கூட, அமெ­ரிக்க மோட்­டார் சைக்­கி­ளான, ‘ஹார்லி டேவிட்­சன்’ பைக் மீது, 100 சத­வீத இறக்­கு­மதி வரி விதிக்­கப்­பட்­டது. இப்­போது, அது பாதி­யா­கக் குறைக்­கப்­பட்டு இருந்­தா­லும், இன்­ன­மும் இத­னால், அமெ­ரிக்க அர­சுக்கு எந்­த­வி­த­மான பல­னும் இல்லை.
ஆனால், அமெ­ரிக்­கா­வில் இறக்­கு­ம­தி­யா­கும் பிற நாட்­டுப் பொருட்­க­ளுக்கு இறக்­கு­மதி வரியே இல்லை அல்­லது சிறிய அள­வில் இருக்­கிறது. இத்­த­கைய வர்த்­தக ஏற்­றத்­தாழ்வு, அவ­ரைக் கடுப்­ப­டித்­துவிட்­டன. அதன் விளைவு தான், உருக்கு மற்­றும் அலு­மி­னி­யத்­தின் மீதான வரி.

இத­னால் என்ன பலன்?

இனி­மேல் அமெ­ரிக்­கா­வில் உற்­பத்தி செய்­யப்­படும் உருக்கு, அலு­மி­னி­யத்­தையே அமெ­ரிக்க நிறு­வ­னங்­கள் வாங்க வேண்­டி­யி­ருக்­கும். அத­னால், அங்கே உற்­பத்தி பெரு­கும், வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கும் என்­பது எதிர்­பார்ப்பு.ஆனால், இப்­படி நடந்­ததேஇல்லை என்­பது தான் அமெ­ரிக்க சரித்­தி­ரம் நமக்கு உணர்த்­து­கிறது. ரொம்ப துாரம் போக வேண்­டாம்.

கடந்த, 2002ம் ஆண்டு, அப்­போது அதி­ப­ராக இருந்த, ஜார்ஜ் புஷ், இறக்­கு­மதி செய்­யப்­பட்ட உருக்கு மீது வரி விதித்­தார். உள்­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்­க­ளைக் காப்­பாற்ற வேண்­டும் என்­பது தான் அப்­போ­தும் கார­ணம். இத­னால், உற்­பத்தி சற்றே உயர்ந்­தது என்­னவோ உண்மை. ஆனால், அத­னால் ஏற்­பட்ட பாதிப்­பு­கள் மிக அதி­கம்.விலை அதி­க­மாக இருந்த கார­ணத்­தால், பல நிறு­வ­னங்­கள், அமெ­ரிக்க உருக்கை வாங்க மறுத்­தன. விளைவு, மொத்த தேவையே சரிந்து போனது; அத­னால், வேலை­வாய்ப்­பு­களும் குறைந்து போயின. கிட்­டத்­தட்ட இரண்டு லட்­சம் வேலை­கள் பறி­போ­யின. வேறு வழி­யில்­லா­மல், இந்த வரி, 2003ம் ஆண்டு இறு­தி­யில் திரும்­பப் பெறப்­பட்­டது.

அமெ­ரிக்க டயர் நிறு­வ­னங்­க­ளைக் காப்­பாற்ற, 2009ல், அப்­போ­தைய அதி­பர், பராக் ஒபாமா, இறக்­கு­மதி செய்­யப்­படும் சீன டயர்­கள் மீது வரி விதித்­தார். வழக்­கம் போல், கொஞ்­சம் வேலை­வாய்ப்­பு­க­ளைக் காப்­பாற்ற முடிந்­தது. ஆனால், வழக்­கம் போல், விலை அதி­கம் என்­ப­தால், உற்­பத்­தியே சரிந்து போனது. காப்­பாற்­றப்­பட்ட வேலை­களை விட, மொத்­தத்­தில் இழந்த வேலை­களே அதி­க­மா­னது. வேறு வழி­யில்­லா­மல், இந்த வரி­யும் பின்­னர் திரும்­பப் பெறப்­பட்­டது.
அமெ­ரிக்கா, முற்­றி­லும் வெளி­நாட்டு உற்­பத்தி பொருட்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தால், அங்கே விலை­கள் சற்று மலி­வாக இருக்­கின்­றன.அமெ­ரிக்க உருக்­கை­யும், அலு­மி­னி­யத்­தை­யும் பயன்­ப­டுத்­தத் துவங்­கி­னால், அங்கே விற்­கும் குளிர்­பா­னங்­கள் முதல், கார்­கள் வரை அனைத்­தின் விலை­யும் உயர்ந்­து­வி­டக் கூடும். தன் தலை­யில் தானே மண்ணை அள்­ளிப் போட்­டுக் கொள்­வ­தற்கு ஒப்­பான நட­வ­டிக்கை இது என, அமெ­ரிக்க பொரு­ளா­தார வல்­லு­னர்­களே எச்­ச­ரிக்­கின்­ற­னர்.
எதிர்ப்­பலை
அமெ­ரிக்­கா­வுக்­குள் நடப்­பது ஒரு­பக்­கம் இருக்­கட்­டும். சர்­வ­தேச அள­வில் இத்­த­கைய, ‘தற்­காப்பு நட­வ­டிக்­கை­கள்’ ஏற்­ப­டுத்­தும் தொடர் விளை­வு­கள் தான் முக்­கி­ய­மா­னவை. சர்­வ­தேச நிதி­ய­மும், உலக வர்த்­தக அமைப்­பும், இத­னால் ஏற்­படும் பாதிப்­பு­க­ளைப் பற்றி எச்­ச­ரித்­துள்­ளன. ஐரோப்­பிய ஒன்­றி­யம், தக்க பதி­லடி கொடுக்­கப்­படும் என்­கிறது. கனடா அதி­பரோ, இது அநி­யா­யம், ஏற்க முடி­யாது என மிரட்­டு­கி­றார்.
பல பங்­குச் சந்­தை­கள்
உட­ன­டி­யாக பெரும் சரி­வைக் கண்­டன. உருக்கு மற்­றும் அலு­மி­னிய உற்­பத்தி நிறு­வன பங்­கு­கள் அடி வாங்­கி­யுள்­ளன. இவை­யெல்­லாம் இன்­னும் சில நாட்­களில் சரி­யா­கி­வி­டக்­கூ­டும்.ஆனால், அமெ­ரிக்­கா­வின் நட­வ­டிக்­கை­யால் ஏற்­பட்­டுள்ள நிச்­ச­ய­மற்ற தன்மை தான், அனைத்து நாடு­க­ளை­யும் கவ­லை­ கொள்ள வைத்­துள்­ளது. ஒவ்­வொரு நாடும், ‘தற்­காப்பு நட­வ­டிக்கை’க்குள் இறங்­கி­னால், அப்­பு­றம் எப்­படி சுதந்­தி­ர­மான பொரு­ளா­தா­ர­மும், வளர்ச்­சி­யும் ஏற்­படும்; ஒவ்­வொரு நாடும் பதி­லடி கொடுக்­கத் துவங்­கி­னால், சுமுக உற­வு­கள் பாதிக்­கப்­ப­டாதா?
வர்த்­த­கம் மோத­லால் வளர்­வ­தில்லை; அது, இணக்­கத்­தின் மீது கட்­ட­மைக்­கப்­ப­டு­வது. இதை, அமெ­ரிக்க அதி­பர் டிரம்ப் உணர்ந்­து­கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம்.
ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)