உலக தரத்தில் மின் சாதனங்களை தயாரிக்கணும்: துணை ஜனாதிபதிஉலக தரத்தில் மின் சாதனங்களை தயாரிக்கணும்: துணை ஜனாதிபதி ...  விடு­முறை எடுக்க தயங்கும் இந்­தி­யர்கள் விடு­முறை எடுக்க தயங்கும் இந்­தி­யர்கள் ...
ஏப்., 1ல், ‘இ – வே’ பில் மீண்டும் அறிமுகம் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலுக்கு அவகாசம் ஏற்றுமதி வரிவிலக்கு சலுகையும் நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2018
00:20

புதுடில்லி:ஏப்., 1 முதல், சரக்கு போக்­கு­வ­ரத்­துக்­கான, ‘இ – வே’ பில், மீண்­டும் அறி­மு­க­மா­கிறது. அத்­து­டன், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­க­லுக்­கான கெடு­வும், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்­கான வரி­வி­லக்கு சலுகை கால­மும் நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளன.
மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி தலை­மை­யில், 26வது, ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டம், டில்­லி­யில் நேற்று நடை­பெற்­றது. இதில் எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் குறித்து, அருண் ஜெட்லி, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:

ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டத்­தில், புதிய வரி விதிப்­பின் செயல்­பா­டு­கள், இடர்ப்­பா­டு­க­ளுக்­கான தீர்­வு­கள், அமல்­ப­டுத்த வேண்­டிய திட்­டங்­கள் ஆகி­யவை குறித்து விவா­திக்­கப்­பட்­டன.
காலக்கெடு நீட்டிப்பு
அப்­போது, சரக்கு போக்­கு­வ­ரத்­தில், ‘இ – வே’ பில் நடை­மு­றை­யில் ஏற்­பட்ட தொழில்­நுட்ப பிரச்­னை­க­ளுக்கு, தீர்வு காணப்­பட்டு உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.இதை­ய­டுத்து, ஏப்., 1 முதல், மீண்­டும், ‘இ – வே’ திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­து­வது என, கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டது. முதல்­கட்­ட­மாக, மாநி­லங்­கள் இடை­யி­லான சரக்கு போக்­கு­வ­ரத்­தில், இத்­திட்­டம் அம­லா­கும். அதன்­பின், ஏப்., 15ல், மாநி­லத்­திற்­குள் நடை­பெ­றும் சரக்கு போக்­குவ­ரத்­துக்­கு விரி­வு­ப­டுத்­தப்­படும். ஜூன், 1க்குள், நாடு முழு­வ­தும், ‘இ – வே’பில் முழு­மை­யான செயல்பாட்­டிற்கு வந்து விடும்.

நடப்பு, 2017 -– 18ம் நிதி­யாண்­டில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் செய்­வ­தற்­கான காலக் கெடு, மார்ச், 31லிருந்து, மேலும் மூன்று மாதங்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது. ஜூன் வரை தாக்கல்இதன் மூலம் நிறு­வ­னங்­கள், அவற்­றின் விற்­பனை விப­ரங்­களை, ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி படி­வத்­தில், ஜூன் வரை தாக்­கல் செய்­ய­லாம்.அது­போல, ஏற்­று­ம­தியாளர்­க­ளுக்­கான வரி­விலக்கு சலுகை, மேலும் ஆறு மாதங்­க­ளுக்கு, அதா­வது, செப்., வரை நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது. இத­னால், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் பயன் பெறு­வர்.

ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் நடை­மு­றையை, மேலும் சுல­ப­மாக்­கு­வது குறித்து, கூட்­டத்­தில் எந்த முடி­வும் எடுக்­க­வில்லை.எனி­னும், மிகச் சுல­ப­மாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் செய்­யும் வச­தி­யு­டன், வரி ஏய்ப்பை தடுக்­கும் அம்­சங்­க­ளை­யும் இணைத்து, ஒற்றை படிவ நடை­மு­றையை கொண்டு வர, அரசு விரும்­பு­கிறது.ஒரே படி­வத்­தில், சுல­ப­மாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் செய்­யும் நடை­மு­றையை உரு­வாக்­கும் பொறுப்பு, சுஷில் குமார் மோடி தலை­மை­யி­லான, ஜி.எஸ்.டி., செய­லாக்­கக் குழு­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.
வரி வசூல்
பல்­வேறு வரி­களை நீக்கி, நாடு முழு­வ­தும், ஒரே வரி விதிப்பு முறை­யைக் கொண்ட, ஜி.எஸ்.டி., 2017 ஜூலை, 1ல் அறி­மு­க­மா­னது. அம்­மா­தம், ஜி.எஸ்.டி., மூலம், 93,590 கோடி ரூபாய் வரு­வாய் கிடைத்­தது. இது, ஆகஸ்­டில், 93,029 கோடி ரூபாய்; செப்­டம்­ப­ரில், 95,132 கோடி ரூபா­யாக இருந்­தது. அக்., – நவ., – டிசம்­ப­ர், முறையே, 85,931 கோடி ரூபாய், 83,716 கோடி ரூபாய், 88,929 கோடி ரூபாய் வசூ­லா­னது.இந்­தாண்டு ஜன­வ­ரி­யில், ஜி.எஸ்.டி., மூலம், 88,047 கோடி ரூபாய் கிடைத்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)