ஏப்., 1ல், ‘இ – வே’ பில் மீண்டும் அறிமுகம் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலுக்கு அவகாசம் ஏற்றுமதி வரிவிலக்கு சலுகையும் நீட்டிப்பு ஏப்., 1ல், ‘இ – வே’ பில் மீண்டும் அறிமுகம் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலுக்கு ... ...  விடு­முறை எடுக்க தயங்கும் இந்­தி­யர்கள் விடு­முறை எடுக்க தயங்கும் இந்­தி­யர்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வரி சேமிப்பு திட்­ட­மிடல் எப்­படி இருக்க வேண்டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2018
00:43

வரி சேமிப்பு தொடர்­பான முத­லீட்டை மேற்­கொள்­வதை கடைசி நேரத்­திற்கு தள்­ளிப்போ­டு­வது, தவ­றான முடி­வு­க­ளுக்கு வழி­வ­குக்­கலாம் என்­பதை மனதில் கொள்ள வேண்டும்.
வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்­வது தொடர்­பான வரி சேமிப்பு ஆவ­ணங்­களை சரி பார்த்து, திரட்டி வைப்­ப­தற்­கான நேரம் இது. ஆனால் பலரும், வரி சேமிப்பு தொடர்­பான முத­லீட்­டையும் கடைசி நேரத்தில் மேற்­கொள்­வதை வழக்­க­மாக வைத்துக் கொண்­டு இருக்­கின்­றனர்.
இத்­த­கைய பழக்­கத்தை தவிர்க்க வேண்டும் என, நிதி ஆலோ­ச­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர். நிதி­யாண்டின் துவக்­கத்­தி­லேயே வரி சேமிப்பை திட்­ட­மிட்டு, அதற்­கேற்ப முத­லீடு செய்ய வேண்டும் என்­கின்­றனர்.துவக்­கத்­தி­லேயே திட்­ட­மி­டலை மேற்­கொள்ளும் போது, சரி­யான முடி­வு­களை மேற்­கொள்­ளலாம் என்­ப­தோடு, போதிய நிதியும் கைவசம் இருக்கும் வாய்ப்­புள்­ளது. மேலும், முத­லீட்டின் பலனை துவக்­கத்தில் இருந்தே பெறலாம்.
சிறந்த தேர்­வுகள்
வரி சேமிப்பின் பலனை பெற, பி.எப்., – பி.பி.எப்., மியூச்­சுவல் பண்ட், யூலிப்கள் என பல­வி­த­மான முத­லீ­டு­களை நாடலாம். ஆரம்­பத்­தி­லேயே மேற்­கொள்ளும் போது, இவற்றில் இருந்து பொருத்­த­மா­ன­வற்றை தேர்வு செய்து கொள்­ளலாம். ஆனால், கடைசி நேர அவ­ச­ரத்தில் மேற்­கொள்ளும் போது, தேவைக்கு அதி­க­மான காப்­பீடு திட்­டங்கள் அல்­லது மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களை வைத்து இ­ருக்கும் தேவை ஏற்­ப­டலாம்.
பொது­வாக காப்­பீடு திட்­டங்­களை முத­லீடு நோக்கில் அணு­காமல், அவை தரும் வாழ்க்கை பாது­காப்­பிற்­காக அணு­கு­வதே பொருத்­த­மாக இருக்கும். ஆனால், வரி சேமிப்பை மனதில் கொண்டு காப்­பீடு திட்­டங்­களில் முத­லீடு செய்யும் போது, ஊதி­யத்தின் கணி­ச­மான பகுதி பிரீ­மியம் செலுத்­து­வ­தற்­காக செல­வி­டப்­படும் நிலை ஏற்­ப­டலாம். இது போன்ற தவ­று­களை தவிர்க்க வேண்டும் என்­கின்­றனர்.
இதே போல, சரி­யாக திட்­டமி­டாமல் வரி சேமிப்­பிற்­காக என்று மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களை வாங்கி குவிப்­ப­தையும் தவிர்த்து, நிதி இலக்­கிற்கு உறு­து­ணை­யாக இருக்­கக்­கூ­டிய திட்­டங்­களில் முத­லீடு செய்­வது ஏற்­ற­தாக இருக்கும்.அதே போல, நாம் பல­வித தேவைக்­காக கடன் வச­தியை நாடு­கிறோம். வீட்டுக் கடன், வாகன கடன், கல்விக் கடன், தனி­நபர் கடன் என, பல­வி­த­மான கடன்­களை பெறும் நிலை இருக்­கலாம். வீட்டுக் கட­னுக்­கான வட்டி மீது வரிச் சலுகை கோர முடியும்.
ஆனால், மற்ற கடன்­களை சரி­யாக நிர்­வ­கிக்­காமல் விட்டால், அது சேமிப்பை பாதிக்­கலாம். அவ­சரத் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக சேமிப்பில் கைவைப்­பது சரி­யான உத்­தி­யாக இருக்­காது.
நீண்ட கால நோக்கு
அதே போல, மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களில் முத­லீடு செய்­து உள்­ள­வர்கள், டிவிடெண்ட் வாய்ப்பு இருந்தால் அதை பயன்­ப­டுத்­திக்­கொள்ள முற்­ப­டு­கின்­றனர். ஆனால், டிவிடெண்ட் தொகை முத­லீட்­டுடன் சேர்ந்து இருப்­பதே நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும். அதிலும் தற்­போது, டிவிடெண்ட் வரு­மா­னத்­திற்கு வரி பொருந்தும் என்­பதால், இந்த வாய்ப்பை கவ­ன­மாக பயன்­ப­டுத்த வேண்டும்.
மேலும், வரி சேமிப்­பிற்­காக மேற்கொள்­ளப்­பட்ட, இ.எல்.எஸ்.எஸ்., திட்­டத்தின், ‘லாக் இன்’ காலம் முடி­வ­டைந்­து­ விட்டாலும், அவற்றை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும் என அவ­சி­ய­மில்லை. முத­லீட்டை தொடர்­வது நீண்ட கால நோக்கில் கூடுதல் பலன் அளிக்­குமா என, பரி­சீ­லித்து முடிவு செய்ய வேண்டும்.
வரி சேமிப்பு முத­லீட்டில் கடைசி நேர தவ­று­களை தவிர்ப்­பதில் கவ­ன­மாக இருப்­ப­தோடு, வரும் ஆண்­டு­களில் முன்­கூட்­டியே திட்­ட­மி­டு­வதே பொருத்­த­மாக இருக்கும் என்­பதை உணர வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)