விடு­முறை எடுக்க தயங்கும் இந்­தி­யர்கள் விடு­முறை எடுக்க தயங்கும் இந்­தி­யர்கள் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 சரிவு ...
பற்­றாக்­கு­றை­யில் பரி­த­விக்­கும் தமி­ழ­கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2018
00:59

மார்ச், 15ம் தேதி, வரும் நிதி­யாண்­டுக்­கான தமி­ழ­கத்­தின் நிதி நிலை அறிக்கை தாக்­கல் செய்­யப்­பட இருக்­கிறது. தமி­ழ­கத்­தின் நிதி நிலைமை எப்­படி இருக்­கிறது? புதிய திட்­டங்­கள் ஏதும் இருக்­குமா? முன்­னேற்­றம் தென்­ப­டு­கி­றதா?

நிதி நிலை அறிக்­கை­யில், இரண்டு முக்­கிய அம்­சங்­கள் உண்டு. ஒன்று வரவு; மற்­றது செலவு. வர­வு­களை உயர்த்­து­வ­தில் தொடர் முயற்­சி­களும், செல­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் தளரா முனைப்­பும் இருந்­தால் தான், வீடு மட்­டு­மல்ல, நாடும் செழிக்­கும்.
வர­வு­கள் எப்­படி உள்ளன?
சாண் ஏறி­னால், முழம் சறுக்­கும் நிலை தான். மூன்று முக்­கி­ய­மான வரு­வாய் இனங்­களை மட்­டும் எடுத்­துக் கொள்­வோம்.எழு­தவே கூச்­ச­மாக இருந்­தா­லும், தமி­ழ­கத்­தின் அட்­சய பாத்­தி­ரம், ‘டாஸ்­மாக்’ தான். கடந்த ஆண்டு தீபா­வ­ளிக்­குப் பின், மது வகை­களின் விலை­கள் கணி­ச­மாக உயர்த்­தப்­பட்­டன.
அதே­ச­ம­யம், 1,000 கடை­களை அர­சாங்­கமே மூடி­யது. உச்ச நீதி­மன்­றத் தீர்ப்பை ஒட்டி, நெடுஞ்­சா­லை­க­ளுக்கு அருகே இருந்த, 3,000த்துக்­கும் மேற்­பட்ட கடை­களும் மூடப்­பட்­டன.இந்­நி­லை­யில், விலை உயர்­வால், டாஸ்­மாக்­கின் மொத்த வரு­வா­யான, 26 ஆயி­ரத்து, 995 கோடி ரூபா­யோடு, இன்­னும், 2,250 கோடி ரூபாய் சேரும் என்­பது எதிர்­பார்ப்பு.
மொத்த மது விற்­ப­னை­யில் இருந்து, 6,248 கோடி ரூபாய் சுங்க வரி­யும், 20 ஆயி­ரத்து, 747 கோடி ரூபாய், ‘வாட்’ வரி­யும் தமி­ழக அர­சுக்கு கிடைக்­கும்.இரண்­டா­வது, பத்­தி­ரப்­ப­தி­வுத் துறை வரு­வாய். 2016 – -17ம் நிதி­யாண்­டில், புதிய வீடு­களும், அடுக்­க­கங்­களும் கட்­டப்­ப­டு­வது குறைந்­த­தால், முத்­தி­ரைத்­தாள் வரு­வாய் குறைந்­தது. தற்­போது நிலைமை இன்­னும் மோசம். சென்­னை­யில் மட்­டும் கட்டி முடிக்­கப்­பட்டு, விற்­கப்­ப­டா­மல் இருக்­கும் குடி­யி­ருப்­பு­கள், 20 சத­வீ­தம் என்­கிறது ஓர் ஆய்வு. இன்­னும் இரண்டு பாதிப்­பு­களும் சேர்ந்­துள்ளன.

வரை­மு­றைப் படுத்­தப்ப­டாத மனை­க­ளைப் பத்­தி­ரப்­ப­திவு செய்­யக்­கூ­டாது என, சென்னை உயர் நீதி­மன்­றம் விதித்த கட்­டுப்­பாட்­டால், பத்­தி­ரப்­ப­திவு எண்­ணிக்­கையே சரிந்து போனது. ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை சட்­ட­மும் (‘ரெரா’), ஜி.எஸ்.டி.,யும் கூட விற்­ப­னைச் சரி­வுக்கு முக்­கிய கார­ணங்­கள் ஆயின.
மூன்­றா­வது, பெட்­ரோல், டீசல் மீது விதிக்­கப்­படும் விற்­பனை வரி. சென்ற ஆண்டு, தமி­ழக அரசு, இப்­பொ­ருட்­களின் மீதான விற்­பனை வரியை உயர்த்­தி­யது. இத­னால், வரு­வாய் சற்று உயர்ந்­தி­ருக்­க­லாம் என்­பது எதிர்­பார்ப்பு.

செல­வி­னங்­கள் என்­னென்ன?

இல­வ­சங்­கள், மானி­யங்­கள் ஆகி­ய­வற்றை விட்­டு­வி­டு­வோம். அது யானை பசி. அரசு ஊழி­யர்­க­ளுக்­கான சம்­ப­ள செலவை மட்­டும் எடுத்­துக் கொள்­வோம். வரு­வாய் செல­வி­னத்­தோடு ஒப்­பி­டும் போது, சம்­ப­ளத்­துக்­காக மட்­டும் செல­வி­டப்ப­டு­வது, 27.76 சத­வீ­தம்.ஏழா­வது ஊதி­யக் குழு பரிந்­து­ரை­களை அமல்ப­டுத்­தி­ய­தால், தமி­ழக அர­சுக்கு கூடு­தல் செலவு, 6,480 கோடி ரூபாய். ஓய்­வூ­தி­யர்க­ளுக்கு வழங்­கப்­படும் பலன்­க­ளுக்­கான தொகை­யும், மற்ற மாநி­லங்­க­ளோடு ஒப்­பி­டும் போது, மிக அதி­கம். வரு­வாய் செல­வி­னத்­தில், ஓய்­வூ­தி­யம் மட்­டும், 12.8 சத­வீ­தம்.
தற்­போது, பேருந்து ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட புதிய சம்­பள உயர்­வால் ஏற்­பட்­டுள்ள செல­வி­னத்­தைச் சேர்த்­துக்­கொள்ள வேண்­டும். இந்­தச் செல­வில், 65 ஆயி­ரம் போக்­கு­வ­ரத்து துறை ஓய்­வூ­தி­ய­தா­ரர்­களின் பணிக்­கொடை, வருங்­கால வைப்பு நிதி, ஓய்­வூ­தி­யம், விடு­மு­றைக்­கான சம்­ப­ளங்­கள் ஆகி­யவை சேர்க்­கப்­ப­ட­வில்லை என்­ப­தை­யும் ஞாப­கத்­தில் வைத்­துக் கொள்­ளுங்­கள்.மாந­க­ராட்சி பணி­யா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்­கும் நிதி ஒதுக்கி வைக்க வேண்­டும்.
மேலே சொன்­னது ஒரு பானை சோற்­றுக்கு ஒரு சோறு பதம். நாம் நம் நிதி நிர்­வா­கத்­தில் எப்­ப­டிச் சறுக்­கு­கி­றோம் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டு­வ­தற்கு இதுவே போது­மா­னது.இத­னால் ஏற்­பட்­டுள்ள பாதிப்பு தான், கவ­லை­ கொள்ள வைக்­கிறது. மாநில மொத்த உற்­பத்­தி­யில், 3 சத­வீ­தத்­துக்கு மேல், நிதிப் பற்­றாக்­குறை இருக்­கக்­கூ­டாது என்­பது, 14வது நிதிக் குழு­வின் பரிந்­துரை. ஆனால், சென்ற நிதி­யாண்­டி­லேயே, நம் மாநி­லத்­தின் நிதிப் பற்­றாக்­குறை, அதைத் தாண்­டிப் போய்­விட்­டது.

நம்­மைப் போலவே பெரிய மாநி­ல­மான, குஜ­ராத்­தின் நிதிப் பற்­றாக்­குறை, 2.5 சத­வீ­த­மாக இருக்க, மஹா­ராஷ்­டி­ராவோ, 2.71 சத­வீ­தத்­தில் இருக்­கிறது. இந்த பட்­ஜெட்­டில் நிதிப் பற்­றாக்­குறை, 3 சத­வீ­தத்­துக்கு மேல் இருக்­கப்­போ­வது உறுதி.வாங்­கிய கடன்­க­ளுக்­கான வட்­டித் தொகை­யும் கட்­டுப்­பாட்­டுக்­குள் இருக்க வேண்­டும். சென்ற நிதி­யாண்­டி­லேயே, இது, மொத்த மாநில உற்­பத்­தி­யில், 13.8 சத­வீ­த­மாக உயர்ந்­து­விட்­டது. கர்­நா­ட­கத்­தில் இது, 9.7 சத­வீ­தம் தான்.

இன்­னொரு கணக்கு, வரு­வாய் பற்­றாக்­குறை அல்­லது உபரி. பெறப்­படும் வரு­வா­யில் இருந்து செய்­யப்­படும் செல­வி­னங்­க­ளைக் கழிக்­கும்­போது கிடைக்­கும் விகி­தமே வரு­வாய் பற்­றாக்­குறை. அது கடந்த ஆண்டே, 1.2 சத­வீ­தத்­தைத் தொட்­டு­விட்­டது. அதா­வது வரவு எட்­டணா, செலவு பத்­தணா.
பற்­றாக்­கு­றை­க­ளுக்கு முக்­கிய கார­ணம், மாநி­லத்­தில் செய்­யப்­படும் வளர்ச்­சிப் பணி­களே என்று நியா­யம் சொல்­லப்­ப­ட­லாம். ஆனால், இன்­னொரு விகி­தத்­தைப் பார்ப்­போமா? அதற்­குப் பெயர் மூல­த­னச் செல­வு­கள்.

மொத்த மாநில உற்­பத்­தி­யில், 2.5 சத­வீ­தத் தொகையே மூல­த­னச் செல­வு­க­ளுக்­கு பயன்­பட்­டுள்­ளது. தெலுங்­கானா, 5.1 சத­வீ­த தொகை­யைச் செல­விட, கர்­நா­டகா, 3.2 சத­வீத அள­வுக்கு மூலத­னச் செல­வு­க­ளுக்­குப் பயன்ப­டுத்­தி­யுள்­ளது.
கடன்­கா­ரர்­கள்
மாநி­லத்­தின் நிதி நிலைமை கைமீ­றிப் போயி­ருப்­ப­தற்கு முக்­கிய கார­ணம், இல­வ­சங்­க­ளுக்கு கொடுக்­கப்­படும் முக்­கி­யத்­து­வம். சென்ற ஆண்டே, தாதும­ணல் விற்­பனை, கிரா­னைட் விற்­பனை ஆகி­ய­வற்றை அர­சாங்­கமே கையில் எடுத்­துக்­கொள்­ளும், அதன் மூலம் வரு­வாய் பெரு­கும் என்ற எதிர்­பார்ப்பு இருந்­தது. அந்த வகை­யில் எந்த முன்­னேற்­ற­மும் இல்லை.
ஒரே ஒரு நிம்­மதி, ஜி.எஸ்.டி., அமல்­ப­டுத்­தி­ய­தில் இழப்பு ஏற்­பட்­டால், அதை மத்­திய அரசு, 100 சத­வீ­தம் ஈடு­செய்­யும் என்­பது தான். அந்த வகை­யில், தமி­ழ­கத்­துக்கு கொஞ்­சம் நிதி கிடைக்­கும்.இந்­நி­லை­யில், இந்த ஆண்டு, பள்­ளிக்­கல்­வித் துறை, தொழில் துறை, சுகா­தா­ரம் ஆகி­ய­வற்­றில் புதிய திட்­டங்­கள் அறி­விப்­பும், நிதி ஒதுக்­கீ­டும் செய்­யப்­ப­ட­லாம். ஆனால், இவை மேலும் பற்­றாக்­கு­றையை அதி­கப்­ப­டுத்­தவே செய்­யும்.
நம் தோளில் சுமையை உயர்த்­தவே செய்­யும். நம் சுய­சார்­புத் தன்­மையை குலைக்­கவே செய்­யும். நம் தலை­மு­றையை மட்­டு­மல்ல, அடுத்த தலை­மு­றை­யை­யும் கடன்­கா­ரர்­ கள் ஆக்­கிக் கொண்­டி­ருக்­கி­றோம் என்­பது தான் உண்மை.
ஆர்.வெங்­க­டேஷ் பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
வாஷிங்டன்:‘‘கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்தியா, மிக திடமான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது,’’ என, பன்னாட்டு ... மேலும்
business news
புதுடில்லி:மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காய்ன்’ விலை, கடும் சரிவை சந்தித்து வருகிறது.கடந்த ஆண்டு இதே ... மேலும்
business news
புதுடில்லி:இந்தாண்டு, ஏப்., – நவ., வரையிலான எட்டு மாதங்களில், நாட்டின் நேரடி வரி வசூல், 6.75 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
business news
வீட்­டுக்­க­டன் என்­பது நீண்ட கால பொறுப்பு என்­ப­தால், மாதத்­த­வ­ணையை மட்­டும் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கா­மல், ... மேலும்
business news
இந்தி­யா­வில் உள்ள மக்­கள் தொகை­யில், 44 சத­வீ­தத்­தி­னர்மட்­டுமே மருத்­துவ காப்­பீடுபெற்­றி­ருப்­பது தெரிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)